என் பேரனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, உறவினர் பையன் ஒருவன், "உனக்கு மம்மி பிடிக்குமா... டாடி பிடிக்குமா?" என்று அவனிடம் கேட்டான். எல்லா குட்டீஸிடமும் கேட்கப்படும் கேள்விதான் என்றாலும், நாங்கள் அனைவரும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை அறிய ஆவலாக இருந்தோம். அவனோ, "எனக்கு எம்.டி. பிடிக்கும்" என்று கூற, கேட்ட பையனுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் 'இவனுக்கு எந்த எம்.டி-யைத் தெரியும்' என்று திகைப்பு. சுட்டியோ தொடர்ந்து, "எம் ஃபார் மம்மி, டி ஃபார் டேடி... எம்.டி!" என்று மழலையில் விளக்க, அள்ளித் தூக்கி, அவனை அனைவரும் கைமாற்றி கொஞ்சித் தீர்த்துவிட்டோம்!
- ஆர்.ரம்பா, ஆத்தூர்
"அம்மா பேரையும் சேர்த்துப் போடு!"
|