Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

Published:Updated:

வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன !
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
என்று தணியும் 'இலவச' மோகம்!
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

எங்கள் நண்பர் ஒருவர், தன் உடல்வலிக்கு ரெகுலராக வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வழக்கம். அவரின் உறவினர் ஒருவர் 'ஹாட் பேக்' எனப்படும் குட்டி தலையணை போன்ற, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதற்கான பையை நண்பரின் மனைவியிடம் கொடுக்க, அவரும் அதில் வெந்நீரை ஊற்றி, மூடி, நண்பருக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார். அன்றும் அதேபோல் அவர் சுடும் நீரை பையில் நிரப்பி தன் கணவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்த நிமிடம், 'டப்'பென்ற சத்தத்துடன் அந்தப் பை வெடித்து, நண்பரின் உடல் எல்லாம் வெந்நீர் சிதற... துடித்துப் போயிருக்கிறார்.

'என்னவாயிற்று..?' என்று அவர் மனைவியிடம் விசாரித்தபோது, விஷயம் புரிந்தது. அந்த உறவினர், ''எங்கிட்ட இந்த 'ஹாட் பேக்', ரொம்ப நாளா உப யோகப்படுத்தாம வேஸ்ட் டாத்தான் கிடைக்கு...'' என்று கூறி அதை நண்பரின் மனைவியிடம் கொடுக்க, நீண்ட நாள் உபயோகப்படுத்தாததால் நைந்து போயிருந்த அந்தப் பை, வெந்நீரின் சூடு தாங்காமல் வெடித்திருக்கிறது.

''சும்மா கிடைக்குதேனு வாங்கிக்கிட்டேன். இப்போ ஆஸ்பத்திரி, மாத்திரை, ஆட்டோனு கொடுத்த செலவுக்கு பத்து புது 'ஹாட் பேக்'கே வாங்கியிருக்கலாம்...'' என்று புலம்பினார் அந்தப் பெண்!

'என்று தணியும் இந்த இலவச மோகம்?' என்றுதான் மனம் எண்ணியது எனக்கு!

- எஸ்.மங்கை, குளித்தலை

டப்பா தயிர் உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த நான், இந்தியா திரும்பும் நேரத்தில் பயங்கர வயிற்றுவலியால் அவதிப் பட்டேன். என்றாலும், பல்லைக் கடித்துக் கொண்டு நாடு வந்து சேர்ந்த பின் முதல் வேலையாக, குடும்ப மருத்துவரிடம் சென்றேன். ''லண்டன்ல தயிர் சாப்பிட்டீங்களா..?'' என்று கேட்டார். ''ஆம்...'' என்றேன். ''வீட்டுத் தயிரா, கடைத் தயிரா..?'' என்றார். ''கடைத் தயிர்தான்'' என்றேன். ''அதுதான் இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கு'' என்றார். ''பேக்கேஜ்டு தயிர்தானே...'' என்று இழுத்தேன் நான். ''அந்த 'டப்பா தயிரை'த்தான் நானும் சொல்றேன்...'' என்ற டாக்டர், விளக்கினார்...

டப்பாக்களில் அடைத்து விற்கும் தயிர், முழுவதும் உறைந்துவிட்டால் புளித்துவிடும் என்பதால், பாதி உறைந்த நிலையிலேயே ஃப்ரிட்ஜில் போட்டு விடுவார்களாம். அப்படி உறைந்தும் உறையாமலும் இருக்கும் தயிர், பாக்டீரியல் இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமாம்! எனவே, டப்பா தயிரை நன்கு புளிக்கவிட்டே பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார்!

லண்டன் தயிர் மட்டுமல்ல... நம் ஊர் 'டப்பா தயிர்'களுக்கும் இது பொருந்தும்தானே?!

- ஆர்த்தி, சென்னை-4

எடை குறைந்த இரவல் சிலிண்டர்!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

நாங்கள் வசிப்பது ஒரு அபார்ட்மென்டில். எங்கள் பக்கத்து ஃப்ளாட் பெண்மணி ஒருமுறை எங்களிடம், ''சிலிண்டர் திடீர்னு தீர்ந்துடுச்சு. உங்ககிட்ட எக்ஸ்ட்ரா சிலிண்டர் இருந்தா கொடுங்க... ரெண்டு நாள்ல தந்துடறோம்...'' என்று கேட்டு வந்தார். நாங்களும், ''எங்களுக்கும் இன்னும் நாளஞ்சு நாள்ல தீர்ந்துடும். அதனால, சீக்கிரமா ரிட்டர்ன் பண்ணிடுங்க...'' என்று சொல்லிவிட்டு கொடுத்தோம். சொன்னது போலவே இரண்டே நாட்களில் 'ஃபுல் சிலிண்டர்' கொடுத்து விட்டார்.

ஆனால், வழக்கமாக 45 நாட்களுக்கு எங்களுக்குச் செலவாகும் சிலிண்டர், அந்த மாதம் 25 நாட்களிலேயே தீர்ந்துவிட்டதால், குழம்பினோம். ஃப்ளாட்டின் மற்ற குடித்தனக்காரர்களிடம் இதைப் பற்றி எதேச்சையாக பேசிக் கொண்டிருந்த போதுதான்... விஷயம் விளங்கியது எங்களுக்கு.

அந்த ஃப்ளாட் பெண்மணியின் கணவர், டீ கடை வைத்திருப்பதால், அவசரத் தேவையைப் பொறுத்து அவர்கள் கடையிலும் வீட்டிலுமாக சிலிண்டர் மாறி மாறி உபயோகிக்கப்பட, அப்படி அவர்கள் கடையில் உபயோகத்தில் இருந்த ஒரு சிலிண்டர்தான் எங்களுக்கு மாற்றித் தரப்பட்டிருக்கிறது. இந்த 'சிலிண்டர் எக்சேஞ்ச்'சில் எங்களைப் போலவே ஃப்ளாட்வாசிகள் பலரும் அந்தப் பெண்மணியிடம் 'அனுபவ'ப் பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதுபோன்றவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைக்கும் நம்மை போன்ற பலரையும் யோசிக்க வைத்துவிடுகிறார்கள். எப்போதுதான் திருந்துவார்களோ இவர்கள்?!

- வி.ஜி.ஜெய்ஷ்ரீ, சென்னை-21

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
-
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism