Published:Updated:

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க !

'பாயும் புலியும் நீதானா..?'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

என் மகன் பிரணவ் மிகவும் பிடிவாத குணம் கொண்டவன். அவனுடைய முரட்டு குணம் பற்றித் தெரிந்த என் கணவரின் மலையாள நண்பர், 'அவன் புலியானு' (அவன் புலி) என்ற மம்மூட்டியின் திரைப்பட டயலாக்கை சொல்லி, அவனைக் கிண்டலடிப்பார். அவர் வாக்குப்படி, என் மகன் புலியான புகைப்படம்தான் இது. முரட்டுப் பயல் பிரணவ், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா சயின்ஸ் மியூசியத்தில் புலியின் முகமூடியில் சாதுவா முழிக்கறதை பாருங்க..!

- எஸ்.ரேவதி சிவகுமார், திருவனந்தபுரம்

 

'அண்ணன் ஒரு கோயில் என்றால்...தங்கை ஒரு தீபமன்றோ..!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

நாகப்பட்டினத்திலுள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயத்துக்கு குடும்பத்துடன் புனித யாத்திரை சென்றிருந்தோம். அங்கு என் மூன்று சகோதரர்களின் குழந்தைகள் விஷால், வர்ஷா, அக்ஷரா மூன்று பேரும் மொட்டை போட்டவுடன் மாமாவைப் போட்டோ எடுக்கச் சொல்லி அடம் பிடிக்க... உடனே விஷால், 'என் செல்லத் தங்கச்சிங்க' என்று இருவரையும் அணைத் துக் கொண்டு அன்பை வெளிப்படுத்திய மழலைகளின் அற்புத போட்டோதான் இது!

- செல்வி ராஜன், சென்னை-82

'பளபளக்கிற பகலா நீ!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

இப்போது எனக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். லீவில் என் சேட்டை தாங்காமல் என் அப்பா தையல் வகுப்பில் சேர்த்துவிட்டார். வகுப்பிலேயே நான்தான் சின்னவள் என்பதால், எங்களுடைய மிஸ் மேரி தொடங்கி அனைவருக்கும் நான்தான் செல்லம்.

நான் இன்று பெரிய டெயிலராக உருவாவதற்கு காரணகர்த்தா என் மிஸ்தான். 'மேரி அக்கா' என்றுதான் கூப்பிடுவேன்.

அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இதை எடுப்பதற்கு முன் எல்லோரும் பவுடர் போட்டுக் கொண்டதுபோக, மீதம் இருந்த பவுடரை வேஸ்டாக்காமல் நானும் என் ஃப்ரெண்டும் பூசிக்கொண்டோம். அதுதான் இத்தனை பளபளக்கிறோம். கீழே முதல் வரிசையில் முதலில், ஆரஞ்சு கலர் பாவாடை சட்டை போட்டிருக்கிறேன். நடு வரிசையில் இரண்டாவதாக மஞ்சள் ஜாக்கெட் போட்டிருப்பவர்தான் மேரி அக்கா.

- எல்.ராமலட்சுமி லிங்கராஜ், தூத்துக்குடி

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
 
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism