Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்

@ வெற்றிக்கு பாஸ்வேர்

@ வெற்றிக்கு பாஸ்வேர்

@ வெற்றிக்கு பாஸ்வேர்

Published:Updated:

வெற்றிக்கு பாஸ்வேர்ட்!
தா.நெடுஞ்செழியன்
@ வெற்றிக்கு பாஸ்வேர்
@ வெற்றிக்கு பாஸ்வேர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு....
பகுதி 34

'எம்.பி.பி.எஸ்.படிப்புக்கு ஓராண்டு கட்டணம் 4,500 ரூபாய்..!

'நீ என்னவாகப் போற..?' என்று குழந்தைகளிடம் கேட்டால், 'டாக்டர்...' என்று கூறாத குட்டீஸ்களின் எண்ணிக்கை குறைவு!

அதேபோல எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும் என்பது பொதுக்கனவு... பெருங்கனவு! அந்தளவுக்கு விருப்பமும், மதிப் பும் உள்ள டாக்டர் படிப்புக்கு, எப்போதும் இங்கு போட்டா போட்டி இருப்பது இயல்பானது தான்!

@ வெற்றிக்கு பாஸ்வேர்

அந்த எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பை அரசின் குறைந்த கட்டணத்தில் படிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது, புதுச்சேரியில் இயங்கிவரும் 'ஜிப்மர்' மருத்துவக் கல்லூரி.

1823-ம் ஆண்டு இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பிரெஞ்சு நாட்டு அரசு தொடங்கிய மருத்துவப் பள்ளி, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1956-ம் ஆண்டில் 'ஜிப்மர்'(JIPMER -Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) மருத்துவக் கல்லூரியாக உருவெடுத்தது. இப்போது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக 'ஜிப்மர்' செயல்படுகிறது.

மத்திய அரசாங்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வருகிற இந்தக் கல்லூரி, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மிக முக்கியமான ஒன்று. முந்நூறுக்கும் மேற்பட்ட அனுபவமிக்க மருத்துவர்கள் பேராசிரியர்களாகவும், ஐந்நூறுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மருத்துவமனை பிரிவிலும் என, இந்த மருத்துவர்கள் எல்லாம் அங்கேயே தங்கி மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர். எனவே, மருத்துவப் படிப்பில் மட்டுமல்லாது, சிகிச்சையிலும் தரமானதாக செயல்பட்டுவருகிறது 'ஜிப்மர்'. தினமும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்திய மருத்துவத் துறையில் ஜிப்மரின் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மதிப்புமிக்க இடமுண்டு. அதனால்தான் ஜிப்மர் வெளியிடும் மருத்துவ நாளேடுகள், ஆராய்ச்சிக் கட்டுரை புத்தகங்கள் உலக மருத்துவர்கள் வரை கவனம் பெறுகின்றன.

இத்தனைச் சிறப்பு வாய்ந்த மருத்துவக் கல்லூரியில் சேர்கிறீர்களா என்று கேட்டால்... யார்தான் மறுப்பார்கள். ஆனால், அதற்கான தகுதிகளை தெரிந்து கொள்வோமா?!

நான்கரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பு மற்றும் ஓர் ஆண்டு பிராக்டீஸ் என இங்கு வழங்கப்படும் ஐந்தரை ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர அதற்கான பிரத்யேக நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பதினேழு வயது நிரம்பிய, ப்ளஸ் டூ-வில் ஐம்பது சதவிகித மதிப்பெண்கள் எடுத்த இந்தியர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுதத் தகுதியானவர்கள். இந்திய அளவில் நடத்தப்படும் இத்தேர்வில் ஆங்கிலம், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி ஆகிய பாடங்களில் இருந்து இருநூறு மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் மற்றும் கோட்டாவின் அடிப்படையில் ஸீட்கள் வழங்கப்படும்.

இங்கு மொத்தமுள்ள எம்.பி.பி.எஸ். ஸீட்களின் எண்ணிக்கை 100. இந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன. நுழைவுத் தேர்வு தேதி 6.6.10. புதுச்சேரி, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், டெல்லி, மற்றும் கொல்கத்தாவில் தேர்வுகள் நடக்கவிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு new.jipmer.edu/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

மருத்துவ படிப்பென்றாலே... லட்சம் லட்சமாக கொட்டவேண்டியிருக்குமே என்று பதறவேண்டாம், முழுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான ஓராண்டு கல்விக் கட்டணம் 4,000 முதல் 4,500 ரூபாய் வரைதான்!

ஜிப்மர், இதுவரை உருவாக்கி அனுப்பியிருக்கும் மருத்துவர்களுக்கு, மருத்துவ உலகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் பெரிது! அதனால்தான் அங்கே படித்து பட்டம் பெற்றவர்களில் பலரும், தங்களின் படிப்போடு Ôஜிப்மர்' என்பதையும் சேர்த்தே எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ். தவிர... பி.எஸ்சி. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி (லேப் டெக்னீஷியன்ஸ்) கோர்ஸ§ம் (20 ஸீட்கள்), பி.எம்.ஆர்.எஸ்சி - பேச்சுலர் ஆஃப் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ் (6 சீட்டுகள்) மற்றும் பி.ஜி. கோர்ஸ்களும் வழங்கப்படுகின்றன. பி.எம்.ஆர்.எஸ்சி கோர்ஸில் மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பராமரிப்பு, மருத்துவ இயந்திரங்களை இயக்குவதற்கான தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். இந்தப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகள் உண்டு. படித்து முடித்தபின் நல்ல பணியிடங்களும் உண்டு.

கட்டணமோ குறைவு... படிப்போ நிறைவு... பிறகென்ன? தகுதிகளை வளர்த்துக் கொண்டு தயாராகுங்கள்!

@ வெற்றிக்கு பாஸ்வேர்
- மீண்டும் சந்திப்போம்...
@ வெற்றிக்கு பாஸ்வேர்
@ வெற்றிக்கு பாஸ்வேர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism