Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

Published:Updated:

 
புதிய பகுதி
கொஸ்டீன் ஹவர்
கொஸ்டீன் ஹவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஸ்டீன் ஹவர்
படிப்பு, வேலை வாய்ப்பு, கன்சல்டன்ஸி நம்பகத்தன்மை, நேர்காணல்கள், நுழைவுத் தேர்வுகள், அரசுப் போட்டித் தேர்வுகள், பகுதி நேர வேலை விவரங்கள், மாடலிங் வாய்ப்புகள், 'பியூட்டி கொர்ரி'க்கள், மனவியல் குழப்பங்கள், காதல் சிக்கல்கள், நட்பு துரோகங்கள், இணைய தளம் மூலமாக வரும் பிரச்னைகள்... என்று மாணவ சமுதாயத்தின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை தருகிறோம் இங்கே... விளக்கமாக!

கேளுங்கள்... காத்திருக்கிறோம்!


கொஸ்டீன் ஹவர்

"நான் இப்போது பி.காம் படிக்கிறேன். ரயில்வே துறை பணியில் சேர விரும்பும் எனக்கு, அதிலுள்ள வேலைவாய்ப்புகள், அதற்கான தகுதிகள், பரீட்சைகள் பற்றி விளக்கம் தேவை... ப்ளீஸ்!''

- எஸ்.கார்த்திகா, மதுரை-3

முனைவர் கனகராஜ், சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து வருபவர், பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, கோவை அரசுக் கலைக் கல்லூரி

"உலகத்திலேயே மிக அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள ஓர் அரசுத் துறை, இந்திய ரயில்வே துறை. மிக அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ஒரே துறையும் இதுதான்!

இத்துறையில் மேனேஜ்மென்ட் கேடரை கிளாஸ் I மற்றும் கிளாஸ் II என்று பிரிக்கிறார்கள். இதில் இந்தியன் ரயில்வே டிராஃபிக் சர்வீஸஸ் (IRTS), இந்தியன் ரயில்வே அக்கவுன்டன்ட் சர்வீஸஸ் (IRAS) போன்ற கிளாஸ் மி பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான தேர்வுகள் போன்று இதற்கான தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பல்கலைக் கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் ரயில்வே சர்வீஸஸ் ஆஃப் இன்ஜினீயர்ஸ், இந்தியன் ரயில்வே சர்வீஸஸ் ஸ்டோர்ஸ் போன்ற பணிகளுக்கு ‘Combined Engineering Services Examination’ தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம் அவசியம்.

அடுத்ததாக, கிளாஸ் II பணிகள் எல்லாமே... கிளாஸ் III பணிகளில் இருந்து மெரிட் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்குத்தான். கிளார்க், அசிஸ்டன்ட் ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் கலெக்டர் போன்ற பணியிடங்களை உள்ளடக்கிய கிளாஸ் மிமிமி பிரிவில் டெக்னிக்கல், டெக்னிக்கல் சாராத படிப்பு படித்தவர்கள் என எல்லோரும் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்தப் பணிகளுக்கானத் தேர்வுகள் ரயில்வே ரெக்ரூட்மென்ட் வாரியத்தால் நடத்தப்படும். டெக்னிக்கல் பிரிவு பணிகளுக்கு அது சம்பந்தமாகவும், டெக்னிக்கல் சாராத பணிகளுக்கு பொது ஆங்கிலம் (அல்லது இந்தி), கணிதம், பொது அறிவு ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, இறுதியாகக் காலியிடங்களைப் பொறுத்துப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தவிர, உதவியாளர்கள், ஸ்டெனோகிராஃபர்கள் போன்ற பணிகளுக்கு ‘ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்' மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். என்கொயரி-கம்-ரிசர்வேஷன் கிளார்க், ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டன்ட், அப்ரன்டீஸ் டிரெய்ன் எக்ஸாமினர், கார்ட் ஆகிய பணிகளுக்கு தகுதி பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இருந்தால் போதும். கூடவே தட்டச்சு, கணினி அறிவு இருந்தால் இன்னும் சிறப்பு. இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 25 வரை. தேர்வு செய்யப்பட்ட பின் 3 முதல் 6 மாத காலத்துக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியிடங்கள் வழங்கப்படும்!

இந்திய ரயில்வே துறைக்கு ஆட்களைத் தேர்வு செய்ய நாடு முழுக்க 20 இடங்களில் ரயில்வே ரெக்ரூட்மென்ட் வாரிய கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட அலுவலகத்தை அணுக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் இந்த வாரியம் செயல்படுகின்றது.

முகவரி தி சேர்மன், ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்ட், நம்பர் 5, டாக்டர் பி.வி. செரியன் க்ரெஸன்ட் ரோடு, எக்மோர், சென்னை - 600 008.

போன் 044 - 28275323. இ-மெயில் rrbmas@sr.railnet.gov.in, new.rrbchennai.net.

கொஸ்டீன் ஹவர்
-படம் தி.விஜய்
கொஸ்டீன் ஹவர்
கொஸ்டீன் ஹவர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism