"நான் ஆறாவது படிக்கும்போது, எனக்கு விளையாட்டுல அவ்ளோ ஆர்வம். இருந்தாலும், என்னோட உயரத்தால எனக்கு வாய்ப்பு கிடைக்கல. என்னோட ஆர்வத்தைப் பார்த்த எங்க 'சோஷியல் சயின்ஸ்' பன்னீர் செல்வம் சார், 'தினமும் ஜம்ப்பிங், ஸ்கிப்பிங், லாங் ஜம்ப்னு பிராக்டீஸ் செஞ்சுட்டே இரு. சத்தான சாப்பாடு சாப்பிடு. உனக்கு ஒருநாள் சான்ஸ் கிடைக்கும்'னு அறிவுரை சொன்னார்.
அவர் சொன்னதையெல்லாம் மூணு வருஷமா விடாம ஃபாலோ பண்ணினேன். நான் ஒன்பதாவது படிக்கும்போது தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியில நடந்தது. பன்னீர்செல்வம் சார்தான் சிபாரிசு பண்ணி எங்க பள்ளி சார்பா கலந்துக்க சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு. 259 பேர் கலந்துகிட்ட போட்டியில நான் 'சாம்பியன் ஷீல்ட்' வாங்கினேன்!"னு சொன்னப்போ சுமிதா கண்கள்ல நீர்.
அந்த ஷீல்டுல ஆரம்பிச்ச அவரோட இப்போதைய அத்லெட் ரெக்கார்ட், நீண்டுகிட்டே இருக்கு. சமீபத்துலகூட தஞ்சாவூர்ல நடந்த மாநில அளவிலான அத்லெட் மீட்ல சாம்பியன் ஆகியிருக்காங்க.
பள்ளி நாட்கள்லயே கராத்தேலயும் கால்பதிச்சுட்ட சுமிதா, இப்போ ஒரு 'பிளாக் பெல்ட்' ஹோல்டர். "நான் இதுவரைக்கும் கராத்தேயில அறுபதுக்கும் மேற்பட்ட கோப்பைகளையும் பரிசுகளையும் வாங்கியிருக்கேன். அதுல நேஷனல் லெவல் போட்டிகள்ல முதல் பரிசா வாங்கின கோப்பைகள் ரெண்டு"னு சிரிக்கற சுமிதாவுக்கு, அவரோட கவிதை, பேச்சுத் திறமை இன்னும் கொஞ்சம் 'கங்ராட்ஸ்'கள கொண்டுவந்து கொட்டுது.
"மதுரையில இருக்கற 'பாரதியார் கல்வி மேம்பாட்டு மையம்' நடத்தின தமிழ் திறனாய்வு போட்டியில பரிசு வாங்கியிருக்கேன்"னு சொன்ன சுமிதா, "போலீஸ் ஆகணும். இதுதான் என்னோட லட்சியம். லத்திகா சரண் மேம்தான் என்னோட ரோல் மாடல். அவங்கள மாதிரி தைரியமும், துணிச்சலும், தெளிவும் இருக்கற பெண்கள்தான் இந்தச் சமுதாயத்துக்கு வேணும். அப்படி ஒருத்தியா ஆகத்தான் நான் விரும்பறேன்!" - உற்சாகமும் உறுதியும் கொப்பளிச்ச வார்த்தைகள்ல முடிச்சார்!
|