Published:Updated:

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

ஃபீலிங்.. ஹீலிங்...!

Published:Updated:

 
ஃபீலிங்... ஹீலிங்!
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏன் இந்த ஆண் பாவம்?
ஃபீலிங்.. ஹீலிங்...!

இந்த இதழில் நாம் பார்க்கப் போவது, சில சீரியல்களிலும், சினிமாக்களிலும் பார்த்திருக்கக் கூடிய ஒரு கேரக்டர்!

அதாவது, ஆண்களைக் கண்டாலே எரிந்து விழுவது, ஒதுங்கிச் செல்வது, ஆண்கள் என்றால் மோசமானவர்கள் என்று நினைப்பது, அந்த நினைப்பை மற்றவர்களிடம் பிரசங்கம் செய்வது, பஸ் பயணங்கள், டிக்கெட் கவுன்ட்டர், பேங்க் க்யூ என்று பொது இடங்களில் எல்லாம் 'ஆண்' என்பதாலேயே அவர்களிடம் எரிமலையாக வெடிப்பது என... இந்த கேரக்டரை நானும் புத்தகங்களிலும் திரையிலும்தான் பார்த்திருக்கிறேன்... சாந்தியை (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) நேரில் சந்திக்கும் வரை!

பெரிய நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பதவியில் அவளின் திறமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம்பெண் சாந்தி. 'வெட்டிக் கொண்டு வா' என்றால் கட்டிக் கொண்டு வரும் கற்பூர புத்தி. எல்லா வேலைகளையும் சட்டென்று முடிக்கும் சாந்தி மீது அலுவலகத்தில் வாரம் ஒரு புகாராவது பதிவாகிவிடும்... அலுவலக ஆண் ஊழியர்களால்.

''ரொம்ப பிரில்லியன்ட் சார். ஆனா ஆண்கள்னா மட்டும் இவளுக்கு ஆக மாட்டேங்குது. மீட்டிங், டிஸ்கஷன், கம்யூனிகேஷன்னு அஃபீஷியலா அவங்களோட புழங்க வேண்டிய அவசியம் வரும்போது, அநாவசியமா கோபப்படறா. 'மேடம், நாங்க ஏதாவது தப்பு செஞ்சு அவங்க கோபப்பட்டா பரவாயில்ல. ஆனா, எங்களை எல்லாம் ஏதோ ஜென்ம பகையாளி மாதிரிதான் பார்க்கறாங்க, நடத்துறாங்க. அவங்ககூட வேலை பார்க்கறது எங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு'னு எங்க ஆபீஸ் ஆண் ஊழியர்கள் எல்லாம் எங்கிட்ட வருத்தப்படறாங்க. ஷீ நீட்ஸ் எ ட்ரீட்மென்ட் ஐ திங்க்...'' என்று சாந்தியை என்னிடம் அனுப்பி வைத்தார் அவளின் சீனியர் மேனேஜர் நித்யா.

சாந்தியிடம் பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக இவள் எத்தனை ஆண்களை காயப்படுத்தியிருப்பாளோ என்று தோன்றியது எனக்கு. அத்தனை கசப்பு அவளுக்கு ஆண் வர்க்கத்தின் மீது!

இப்படிச் சிலருக்கு ஆண் இனத்தின் மீது ஆழ்மனதில் வெறுப்பு படிய, சமூகம் அவர்களுக்குத் தந்த அனுபவங்கள், அவமானங்கள், அச்சங்கள், காயங்கள் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு பெண் குழந்தை சிறு வயதிலிருந்தே ஆணாதிக்கம் செலுத்தும் தன் அப்பாவை பார்த்து வளர்வதாலோ, அதன் வெளிப்பாடாக தன் அம்மாவை அவர் அடி, உதை என அடிமையாக நடத்துவதைக் சகிக்க முடியாததாலோ, வீட்டில் அண்ணன், தம்பி என்று தன்னுடன் பிறந்த ஆண்களுக்கு மட்டும் சகல உரிமைகளும் தரப்பட, தனக்கு மட்டும் அனைத்தும் மறுக்கப்பட்ட ஏமாற்றத்தாலோ, பள்ளியில் கொடுங்கோலரான ஒரு ஆசிரியரிடம் ஏற்பட்ட பயத்தினாலோ, சிறு வயதில் அல்லது வளரிளம் பருவத்தில் பாலியியல் கொடுமைக்கு ஆளாகியிருந்தாலோ... இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் அந்தப் பெண் குழந்தைக்கு ஆண் இனம் பற்றிய ஒரு வெறுப்பு மனதில் ஊறிப்போகும்.

காலில் குத்திய முள்ளை உடனே எடுத்துவிட்டால் பிரச்னை இல்லை. அதுவே நீர்கோத்து, சீழ் பிடித்து, புரையோடிப் போகும் வரை விட்டுவிட்டால், பின் சிகிச்சை சிரமம்தானே? அப்படித்தான் மனமும். ஆண்கள் மேல் கொண்ட அழுக்கு பிம்பத்தைத் துடைக்கும் வாய்ப்புக்குப் பதிலாக, அதை உறுதிப்படுத்தும் சூழ்நிலைகளையே அவர்கள் தொடர்ச்சியாக கடக்க நேரிடும்போது, அந்தப் பிம்பம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. அதன் வெளிப்பாடுதான் ஆண்களின் மேல் அவர்கள் காட்டும் எரிச்சல், கோபம், அருவருப்பு, ஆத்திரம் எல்லாம்... நம் சாந்தியைப் போல!

சரி... எப்படி மீட்பது இவர்களை?! சிகிச்சையைவிட, அன்புதான் இவர்களுக்கான அருமருந்து. இவர்கள் மனதில் பரிபூரண அன்பை, முழு நம்பிக்கையை, சக மரியாதையை வளர்க்கும் ஆண்களின் நேசம், இவர்களை மாற்றும்!

எனவே, இனி எங்கேனும் சாந்தியைப் போன்ற பெண்களை பார்க்க நேரிட்டால், 'திமிர் பிடிச்சவ' என்று பட்டம் தராதீர்கள். அவர்கள் என்னென்ன வலிகளை வாங்கிக் கொண்டவர்களோ என்ற புரிதலுடன் அவர்களிடம் அனுசரித்துப் போங்கள். ஏனெனில், நேசம் கிடைக்கும்வரை அவர்கள் அப்படித்தான்!

ஃபீலிங்.. ஹீலிங்...!
- ஃபீல் பண்ணுவோம்...
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism