கோ-எட் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில், 'வெல்கம் பார்ட்டி' மூடில் முதலாம் வருட மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகத்தில் மிதந்தோம். அதிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா குஷியோடு இருந்த மாணவர்கள், காலேஜ் நிறுவனர் சிலைக்கு போடப்பட்டிருந்த மாலையை எடுத்து, ஒருவர் மாற்றி ஒருவர் கழுத்தி வீசி, "மாப்ள மாதிரி இருக்கடா..." என்று விளையாடிக் கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மாலை சர்ரென்று சுழன்று வந்து என் கழுத்தில் விழ, அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன் நான். மாணவர்களும் கப்சிப். எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம். விநாடிக்குள் சுதாரித்துக் கொண்ட நான் மாலையை மறுபடியும் மாணவர்கள் பக்கமே வீசிவிட்டு எழுந்து சென்று விட்டேன்.
அந்த மூன்று வருடங்களில் எல்லா கொண்டாட்ட, கும்மாளங்களையும் மறுபடி மறுபடி சொல்லிச் சிரித்த மாணவர்கள் இந்த 'மாலை' மேட்டரை மட்டும் நைஸாக 'டெலிட்' செய்துவிட்டனர். நானும்தான்!
- ப.மகாலெட்சுமி, மணப்பாறை
ஃபைனல் இயர் குறும்புக்கு எக்ஸ்கியூஸ்!
|