Published:Updated:

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

Published:Updated:

லாவண்யா
எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !
எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண் சிமிட்டும் கனவுத் தொழிற்சாலை...


"எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !"

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

சினிமா... கனவுகள் சுமந்து ஆயிரமாயிரம் பேர் சுற்றிவரும் ஒரு புதிர் உலகம். இங்கு வெற்றியை ருசித்தவர்களைவிட, எல்லா மட்டங்களிலும் ஏமாற்றங்களால் விரட்டப் பட்டவர்கள்தான் அதிகம். அதில் ஒரு புதைகுழிதான்... மோசடி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள்!

"ஹீரோ, ஹீரோயின் ஆகணுமா..? எங்ககிட்ட வாங்க. டெபாஸிட் அஞ்சு லட்சம் கட்டினா, அடுத்த படத்துக்கு உங்களையே ஹீரோயினா போட்டுடறோம்..."

- இந்த ரீதியில் மாயவலை விரிக்கும் மோசடிப் பேர்வழிகள் இங்கு ஏராளம்.

சமீபத்தில், சென்னை தி.நகரில் 'மிர்ரர் விஷன்' என்ற பெயரில் 'திரைப்பட பயிற்சிக் கல்லூரி மற்றும் தயாரிப்பு நிறுவனம்' நடத்தியவர் அரவிந்த் ஜி.மேத்தா. இவர் தங்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஐந்து பேர் போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளனர். அதில் மூன்று பேர் பெண்கள்!

இதேபோன்ற இன்னொரு அதிர்ச்சி செய்தி... சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த புஷ்பா, தன் பருவ வயதிலிருந்தே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். ஆண்டுகள் உருண்டோட, ஹீரோயின் கேரக்டரில் ஆரம்பித்து அண்ணி, அம்மா, பாட்டி கேரக்டர்களாவது கிடைக்கும் எனக் காத்திருந்தவருக்கு, ஏமாற்றம் மட்டுமே பரிசாகக் கிடைத்திருக்கிறது. வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் தானே சினிமா தயாரித்து நடிக்கலாம் என முடிவு செய்து அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி... கஞ்சா கடத்தல். சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது, கண்ணீருடன் அவர் சொன்ன இந்த Ôசினிமா ஆசைக் கதைÕ, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன், சங்கீதா என்ற இளம்பெண், தன்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, தன்னை ஏமாற்றிய டைரக்டரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

ஆசையுடன் வரும் பெண்களுக்கு... ஏமாற்றம், கள்ளம், குரோதம் என இப்படி திருப்பிக் கொடுக்கும் அதே சினிமா ஊடகத்தில்... இசை, பாடல்கள், தொழில்நுட்பம், இயக்கம், நடிப்பு என பல பிரிவுகளிலும் பெண்கள் 'பளிச்' என தற்போது முன்னேறி வருவதும் கண்கூடு. இந்த நிலையில், சினிமா துறை என்பது உண்மையில் பெண்களுக்கு எத்தனை சதவிகிதம் நம்பிக்கையானது, பாதுகாப்பானது என்பது பற்றி பெண் இயக்குநர்கள் இருவரிடம் பேசினோம்.

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

முதலில் பேசுபவர்... 'கண்டநாள் முதல்', 'கண்ணாச்சி மூச்சி ஏனடா' படங்களின் இயக்குநர் பிரியா. அப்பா... புரொட்யூசர், அக்கா... புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் எந்தப் பின்புலமும் இல்லாமல், தன் திறமையால் சினிமா உலகுக்குள் வந்திருப்பவர்.

"ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... இந்தத் துறையில அலர்ட்டா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். அதுவும் 'காசு கொடுங்க, சான்ஸ் கொடுக்கறோம்'னு யாராச்சும் கேட்டா, அது சினிமா ஏக்கத்தோட இருக்கற ஏமாளிகளுக்கான வலைனு புரிஞ்சுக்கணும். பணத்தை அடிப்படை திறமையா வெச்சு, இங்க யாருக்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கறது இல்லைங்கறதுதான் உண்மை!

நடிப்பைப் பொறுத்தவரை... அழகு, திறமை இதுதான் மிகப் பெரும்பாலும் இங்க அதுக்கான குவாலிஃபிகேஷனா இருக்கு. அடுத்ததா, இயக்கம், டெக்னிக்கல் சைடுனு சினிமா துறையில எந்த வேலைக்கு வந்தாலும், அதுக்கான ஆசை மட்டும் போதாது... நம்மள தகுதிப்படுத்திக்கறதும் முக்கியம். தரமான படைப்பாளிகள்கிட்ட பயிற்சி எடுத்துக்கணும். எந்த குறுக்கு வழிகள் மேலயும் நம்பிக்கை வைக்காத நம்மளோட தன்னம்பிக்கை, தீவிரமான தேடல், தளராத முயற்சி இதெல்லாம்தான் நமக்கான வாய்ப்பை வாங்கிக் கொடுக்கும்... கொஞ்சம் காலதாமதம் ஆனாலும்கூட!" என்றார் அனுபவசாலியாக.

'திருதிரு துறுதுறு' படத்தின் இயக்குநர் நந்தினியும் சினிமாவுக்கு வந்திருக்கும் முதல் தலைமுறை படைப்பாளிதான். "டாக்டராகணும், இன்ஜினீயர் ஆகணுங்கற மாதிரி சினி ஃபீல்டுக்குப் போகணுங்கறதும் ஒரு நியாயமான ஆசைதான். ஆனா, அதை அடையறதுக்கான பாதைகள்... எந்த வரையறைகளோ, உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லாததுங்கறதும் உண்மை. அதனால, இங்க ரிஸ்க்குகளும் அதிகம். ஆனா, சினிமா ஆர்வத்தால துடிக்கற சிலர் பணத்தைக் கொடுத்தாவது திரையில தலைகாட்டணும்னு நினைக்கறாங்க. மோசடி ஆட்களும் அதைப் பயன்படுத்தி பணம் பார்க்கறாங்க" என்ற நந்தினி,

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !

"பெண்களைப் பொறுத்தவரை நடிகையாகணுங்கற கனவோட இருக்கறவங்க, சினிமாவுல சான்ஸ் வாங்க இப்படி பணம் கொடுத்து ஏமாறதுல இருந்து தெளியணும். முதற்கட்டமா... மாடலிங், டி.வி. காம்பய ரிங்னு படிப்படியா முன்னேறதுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கணும். சேனல், எஃப்.எம், பத்திரிகை, சினிமானு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கு. திறமையான இளைஞர்கள் துணிச்சலா வாய்ப்புகள் தேடலாம். அதேசமயம், மாடலிங் துறையும், சினிமாத் துறையும் கவர்ச்சியின் அடிப்படையில அமைஞ்சது. அதனால உங்களோட எல்லைகளைத் தீர்மானிக்க வேண்டியதும் நீங்கதான். வாய்ப்புக் கேட்டுப் போகும்போது சரியான நபர்களைத் தேர்வு செய்றது உங்க பொறுப்பு" என்றார் எச்சரிக்கையாக.

வெற்றி பெற்ற இந்த இருவரின் அனுபவப் பாடங்களை மனதில் ஏற்றிக் கொள்ளும்போதே... பிரபல இயக்குநர் ஒருவர் சொன்ன இந்த உண்மைக் கதையையும் அழுத்தமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

"என் முதல் படத்துக்காக ஒரு புதிய முகம் தேடினேன். சான்ஸ் கேட்டு வந்துச்சு அந்தப் பொண்ணு. மிஞ்சிப்போனா பதினேழு வயசு இருக் கும். 'எப்படியாச்சும் சான்ஸ் கொடுங்க சார்'னு சொன்ன அந்தப் பொண்ணை, 'ஸ்க்ரீன் டெஸ்ட்' எடுத்துப் பார்த்தப்போ, எங்க படத்துக்கு பொருந்தாத தால, தேர்வு செய்யல. இருந்தாலும், 'நடிக்கற ஆசை யில போய் கிணத்துல விழுந்துடாம, நல்ல கம் பெனி படமா இருந்தா மட்டும் நடிம்மா'னு சொல்லி அனுப்பி வச்சேன். ஆனா, எங்க படம் ரீலீஸ் ஆகற துக்குள்ளயே ஒரு 'ஏ' சர்டிஃபிகேட் படத்துல அந்தப் பெண்ணை கதாநாயகியா பார்த்தேன். தொடர்ந்து அந்தப் பொண்ணுக்கு அதே டைப் படங்கள்லதான் நடிக்க சான்ஸ் கிடைச்சது. அதோட வாழ்க்கையும் வீணாப்போச்சு. எல்லாத் துக்கும் காரணம், தவறான ஒரு ஆள்கிட்ட போய் சேர்ந்ததுதான்" என்றார் வருத்தத்துடன்.

கார், பங்களா, பகட்டு வாழ்க்கை என்ற ஆசையில் கனவுத் தொழிற்சாலை மீது பலருக்கும் ஆசை அரும்புவது இயல்புதான். ஆனால், அதில் கால் பதிக்கும் முன், கவனம் கொள்வது நல்லது. இல்லையேல் உங்கள் கனவு, கனவாகவே கருகிவிடும்!

எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !
 
எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !
எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாறுவது நிச்சயம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism