Published:Updated:

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

Published:Updated:

"ஓசியில யோசிக்காதீங்க...சொந்தமா யோசிங்க...."
ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...
ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் புராஜெக்ட்டிலும் மார்க் மழை பொழியும்

ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்ஸுக்கு இந்த செமஸ்டர்... 'புராஜெக்ட் பரபர செமஸ்டர்'! கலை, அறிவியல், பொறியியல் என்று எல்லா துறை மாணவர்களையும் கனவிலும் நனவிலும் 'புராஜெக்ட்', 'டெட்லைன்', 'வைவா', 'பிரசன்டேஷன்' போன்ற வார்த்தைகள்தான் துரத்திக்கொண்டுஇருக்கும்.

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

ஆனால், 'புராஜெக்ட் என்றாலே டென்ஷன், ஸ்ட்ரெஸ்தானா? 'ஈஸி ஹேண்ட்'டாக அதை கடக்க முடியாதா..? என்றால்...

"கண்டிப்பா முடியும்! அதுக்குத் தேவை கொஞ்சம் பிளானிங், கொஞ்சம் உழைப்பு, கொஞ்சம் சமயோஜித புத்தி! இந்த 'கொஞ்ச'மெல்லாம் சேர்ந்து நம்மள நிறைவா புராஜெக்ட்டை முடிக்க வெச்சுடும்!" என்று எனர்ஜி வார்த்தைகள் தரும் மதுரையைச் சேர்ந்த ஸ்வாதி, பி.எஸ்சி-யில் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்! இப்போது சென்னையில் படிக்கும் ஒரு எம்.எஸ்சி., ஐ.டி. ஸ்டூடன்ட்!

"என்னோட யு.ஜி. புராஜெக்ட் ஸ்கோர்... 93%!" என்று தெம்பாகக் கூறும் ஸ்வாதி, அவரின் அனுபவங்களை இங்கே புராஜெக்ட் டிப்ஸ் ஆக்குகிறார்!

"புராஜெக்ட்ல முதல் படி, நமக்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்கறது. 'இந்த தலைப்பை எடுத்தா, என் கஸின் ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கான்', 'சீனியர் அக்கா செஞ்சுருக்காங்க...', 'ஃப்ரெண்ட் இதைத்தான் எடுக்கச் சொன்னா'ங்கற காரணத்துக்காக எல்லாம் ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்காம, எனக்குத் தெரிஞ்ச கான்செப்ட்ல ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தேன். எங்கப்பா வெச்சுருக்கற மளிகைக் கடையை களமா வச்சு, 'கிராசரி ஸ்டாக் மேனேஜ்மென்ட்'ங்கற தலைப்பை, 'டாட்-நெட்' லேங்குவேஜ்ல பண்ணினேன்" என்றவர் தொடர்ந்து,

"நான் புராஜெக்ட் டைட்டிலை தேர்ந்தெடுத்தது, ஃபைனல் இயர்ல ஃபைனல் செமஸ்டர்ல இல்ல. புராஜெக்ட்டுக்கான வேலைகள நான் செகண்ட் இயர்லயே ஆரம்பிச்சுட்டேனுதான் சொல்லணும். ஆமா... செகண்ட் இயர்லயே எங்க சீனியர் அக்காகிட்ட அவங்க பண்ற புராஜெக்ட்ஸ் பத்தியெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக் கிட்டதுல புராஜெக்ட் பத்தி ஒரு ஐடியா கிடைச்சது.

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...
ஸ்வாதி

'நாம 'டாட்-நெட்' லேங்குவேஜ்ல புராஜெக்ட் பண்ணலாம்...'னு நினைச்சதால, ஃபோர்த் செமஸ்டர் லீவ்லயே 'டாட்-நெட்' கிளாஸ் போக ஆரம்பிச்சுட்டேன். ஃபிஃப்த் செமஸ்டர்ல, புராஜெக்ட்டுக்கான தலைப்பை முடிவு பண்ணி, அதுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டினேன். டாட்-நெட் கிளாஸ் போயிருந்ததால, ஃபிஃப்த் செமஸ்டர் லீவுலயே பாதி புராஜெக்ட் வேலைகள் முடிஞ்சுடுச்சு" என்று சொன்ன ஸ்வாதி, ஃபைனல் செமஸ்டரில் இன்னும் ஸ்பீடு எடுத்திருக்கிறார்.

"ஃபைனல் செமஸ்டர்ல என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் 'என்ன தலைப்புல புராஜெக்ட் செய்யலாம்...?'னு படபடனு இருந்த நேரத்துல, நான் பரபரனு சில சேப்டர்களே முடிச்சுட்டேன்! என் 'கைடு'கிட்ட போய் ஆலோசனைகள், திருத்தங்கள் கேட்டேன். அதையும் சேர்த்து, புராஜெக்ட்டை இன்னும் தெளிவாக்கினேன். புராஜெக்ட் பத்தி எனக்கு குழப்பங்கள், சிக்கல்கள், நேரமின்மைனு எந்தப் பிரச்னையும் ஏற்படாததால, ரெகுலர் கிளாஸ்கள்லயும் என்னால கவனம் செலுத்த முடிஞ்சுச்சு. இன்னொரு பக்கம், டெட்லைனுக்கு முன்னதாவே, முழு திருப்தியோட புராஜெக்ட்டை முடிச்சு சப்மிட் பண்ணிட்டேன்..!" என்பவருக்கு அப்படியும் 'வைவா'வில் வந்திருக்கிறது ஒரு சிக்கல்!

"எனக்கு 'வைவா'வுக்கு வந்த சார், "டாட்-நெட்' லேங்குவேஜ் ஓ.கே! ஆனா, எல்லாருக்கும் புரியற மாதிரி பவர் பாயின்ட் பிரசன்டேஷன்லயும் உன் புராஜெக்ட்டை விளக்கு'னு சொல்லிட்டாங்க. 'அய்யோ...'னு பதறாம, டக்னு சுதாரிச்சு, 'வித் ப்ளஷர் சார்'னு சொல்லிட்டு, கடகடனு வேலைகளைப் பார்த்து பவர் பாயின்ட் பிரசன்டேஷன் பண்ணினேன்" என்றவருக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததா?

"ஒருவழியா புராஜெக்ட் வைபவம் எல்லாம் முடிஞ்சு என்னோட மார்க் கையில கிடைச்ச போது, ரொம்ப திருப்தியா இருந்தது. காரணம், நான் புராஜெக்ட்டுக்காக வொர்க் பண்ணிட்டு இருக்கும்போதெல்லாம், 'ஏம்ப்பா இவ்ளோ கஷ்டப்படற... ஒரு புராஜெக்ட்டை விலைக்கு வாங்கினா மேட்டர் ஓவர்!'னு சாவகாசமா இருந்த பொண்ணுங்களுக்கும் எனக்கும் இருந்த மார்க் வித்தியாசம்... அவங்களுக்கான சரியான பதிலா இருந்தது! அதனால, எப்பவுமே நாம நம்மள நம்பறதுதான் பெஸ்ட்!" என்றார் கட்டை விரல் உயர்த்தி!

காட் இட்?!
- இர.ப்ரீத்தி
படங்கள் ஜெ.தான்யராஜு

'கைடை பார்த்தால் ஓடி ஒளியாதீர்கள்!'

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...

ஒரு புராஜெக்ட்டுக்கே இவ்வளவு அனுபவம் என்றால், பல ஆயிரம் மாணவர்களின் புராஜெக்ட்டுகளை வழி நடத்தும் பேராசிரியர்களின் அனுபவம் எத்தனை பெரியது?! மதுரை, லேடி டோக் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் ரேச்சல் பர்னாபாஸ், தன் இருபத்தி ஆறு வருட டீச்சிங் அனுபவத்தில் வழங்கும் புராஜெக்ட் கைடன்ஸ் இங்கே -

"உங்களுக்குப் பிடித்த பாடத்தில்இருந்து தலைப்பைத் தேர்ந்தெடுத்தால், புராஜெக்ட்டை ஆர்வமாகச் செய்யலாம்! கைடைப் பார்த்தால் பதறி ஒழியாமல், வாலன்டரியாகச் சென்று உங்களுக்கு புராஜெக்ட்டில் உள்ள சிக்கல்கள், சந்தேகங்கள், தேக்கங்களை அவர்களிடம் தாராளமாகக் கேளுங்கள். மாறாக, கடைசி நேரத்தில் பிழைகளுடன் புராஜெக்ட்டை அவர்களிடம் ஒப்படைத்தால், இருவருக்குமே வீண் டென்ஷன்.

முக்கியமான விஷயம், பல மாணவர்களும் 'புராஜெக்ட் டென்ஷன்பா...' என்று ஃபைனல் செமஸ்டரில் படிப்பில் கோட்டை விட்டு விடுவார்கள். அது தவறு. புராஜெக்ட் வொர்க், படிப்பை பாதித்துவிடாமல் 'டைம் மேனேஜ்மென்ட்' செய்துகொள்வது முக்கியம்! வார நாட்களில் படிப்பு, வார இறுதி நாட்களில் புராஜெக்ட் வேலைகள் அல்லது வாரத்தில் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் புராஜெக்ட் வேலைகள் என்று உங்களின் படிப்பை பொறுத்து புராஜெக்ட்டுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்; அதைப் பின்பற்றுங்கள்; பதற்றம் இல்லாமல் புராஜெக்ட்டை முடியுங்கள்! வாழ்த்துக்கள்!"

ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...
 
ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...
ஓசியில் யோசிக்காதீங்க....சொந்தமா யோசிங்க...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism