Published:Updated:

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

Published:Updated:

ம.பிரியதர்ஷினி
அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...
அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...'

ஒரு வீட்டைக் கட்டும்போது, ஆண்களைவிட அந்த வீட்டில் அதிக நேரம் புழங்கக்கூடியவர்கள் பெண்கள் என்பதால், அவர்களின் வசதி, விருப்பம் கேட்டே எல்லா வேலைகளும் நடக்கும். ஆனால், இந்த வழக்கத்தின் அழகிய முரணாகிஇருக்கிறது... நம் புதிய தலைமைச் செயலகம்!

ஆம்! தற்போதைக்கு பெரும்பாலும் ஆண்களே ஆட்சி செய்துகொண்டிருக்கும் (எதிர்காலத்துல 33% வருவோம்ல) இந்த பிரமாண்ட 'தமிழக அரசு வீட்டை'க் கட்டியிருப்பதில் மரியாதைக்குரிய பங்கு, பெண் கட்டடக் கலைஞர்கள் இருவருக்கு உண்டு! ரஜினி பிள்ளை மற்றும் தீபா சத்தியராம்... இவர்கள்தான் அந்தப் பெருமைக்குரிய பிரம்மாக்கள்!

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

மிக பிரமாண்டமாக எழும்பி நிற்கும் தலைமைச் செயலகத்தின் வரவேற்பறை, எத்தனை சிறப்புடையதாக இருக்க வேண்டும்?! பாரம்பரியம், பிரமிப்பு, தரம் என அதனை அத்தனை அம்சங்களுடனும் செதுக்கியிருக்கிறார் ரஜினி பிள்ளை. 'மியூரல்' எனப்படும் டெரகோட்டா டைல்ஸ் கொண்டு அவர் உருவாக்கிஇருக்கும் சுவர் சித்திரத்தில் மின்னும் வள்ளுவர் கோட்டமும், டைடல் பார்க்கும் நம் கண் நிறைத்து ரசிக்க வைக்கின்றன!

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அழகிய வேலைப்பாடுகளுக்கு அவர் பயன்படுத்தியது... புகழ்பெற்ற இன்ஜினீயர்களோ, ஆர்க்கிடெக்ட்டுகளோ, இன்ட்டீரியர் டிசைனர்களோ இல்லை... மண்ணைக் குழைத்து ஜீவன் நகர்த்தும் குயவர் இன மக்கள் என்பதுதான் இங்கு ஹைலைட்!

வேலைப்பாட்டை போலவே ரஜினி பிள்ளையின் துறுதுறு பேச்சையும் நம்மால் ரசிக்க முடிகிறது! ''எனக்கு சொந்த ஊர் சென்னைதான். எம்.பி.ஏ. முடிச்சுட்டு ஒரு பேங்க்ல வேலை பார்த்துட்டு இருந்தப்போ, கேரளாவைச் சேர்ந்த ஜின்னன் என்பவரோட அறிமுகம் கிடைச்சது. கேரளாவுல மண் சிற்பங்கள் வடிக்கற குயவர்களோட எண்ணிக்கை அதிகம். ஆனா, அவங்களோட எதிர்காலம் கேள்விக்குறியாத்தான் இருக்கு. அதனால அவங்களோட முன்னேற்றத்துக்காக 'கும்பாரா'ங்கற அமைப்பை ஆரம்பிச்சிருக்கறவர்தான் இந்த ஜின்னன். மண் சட்டி, பானை, பொம்மை செஞ்சுட்டிருந்த அவங்களை 'டெரக்கோட்டா'ங்கற சுடுமண் அலங்கார பொருட்களை செய்ய வச்சு, அதன் மூலமா அவங்களோட வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கார்.

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

ஒரு வேலை விஷயமா 'கும்பாரா'வுக்கு போனபோதுதான் அவர் பழக்கமானார். அப்படியே அந்த மக்கள் மேல கரிசனமும், அவங்க கலைகள் மேல மரியாதையும் ஏற்பட்டுச்சு. 'இனி இவங்ககூட சேர்ந்து நாமளும் இயங்கலாம்'னு முடிவு பண்ணி, அவங்க உருவாக்கற கலைப்பொருட்களோட மார்க்கெட்டிங் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். அவங்களுக்கு டெக்னீஷியன்கள் மூலமா தொழில்நுட்பம் கத்துக்கொடுக்க... டெரக்கோட்டா பொம்மைகள் மட்டுமில்லாம, 'மைக்ரோவேவ் அவன்'ல வைக்கற மண் பாத்திரங்கள், மியூரல் வொர்க்னு இன்னும் பல பொருட்களையும் அவ்வளவு நேர்த்தியா வடிவமைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ அவங்களோட புராடக்ட்ஸ் எல்லாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆயிட்டு இருக்கு!" என்ற ரஜினி பிள்ளை, தலைமைச் செயலகத்தில் செய்திருப்பது 'மியூரல் வொர்க்'தான்.

''களிமண்ணை டைல்ஸ் வடிவத்துல குழைச்சு, நமக்குத் தேவையான சித்திரங்கள அதுல உருவேற்றி, அதை சூளையில வச்சு சுடும்போது, நாம விரும்பின உருவங்கள் டைல்ஸ்களா கிடைக்கும். அதைச் சுவர்ல பொருத்திக்கலாம். இதுதான் மியூரல் வொர்க். சொல்றதுக்கு சுலபமா இருக்கலாம். ஆனா, ரொம்ப கடினமான வேலை. இஞ்ச் பிசகினாலும் மொத்த வேலையும் வீணாப்போயிடும்" என்றவர்,

''இப்படி 'கும்பரா'வுல உருவாக்கின களிமண் டைல்ஸ் சுவர் சித்திரங்கள்தான் கேரளாவுல இருக்கற பெரும்பாலான பிரபல ஹோட்டல்களை அலங்கரிக்குது. அதுல எங்களுக்குக் கிடைச்ச பேரும் பாராட்டும்தான் எங்களுக்கு இந்தத் தலைமைச் செயலகத்தை அலங்கரிக்கற மிகப் பெரிய பொறுப்பையும் வாங்கிக்

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

கொடுத்தது" என்றவர், அந்த அனுபவங்களைப் பேசினார்.

"இருபது நாட்களுக்குள்ள இந்த 600 சதுர அடி இடத்தை அலங்கரிக்கணும்'ங்கறதுதான் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பொதுவா, இது நாப்பது நாள் எடுத்துக்கக்கூடிய வேலை. ஆனாலும், நம்ம முதல்வரே அவரோட அத்தனைப் பணிகளுக்கு நடுவுலயும் அவ்வளவு ஆசையோட இந்த கட்டடப் பணிகள்ல காட்டின ஆர்வத்தைப் பார்த்தப்போ, எங்களுக்கும் வேகம் வந்தது. தூக்கம்கறதையே மறந்து இரவு, பகலா ஓய்வில்லாம வேலைகளைப் பார்த்தோம்" என்றவர், முதல்வரின் நேரடி விசிட் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

''அன்னிக்கு 'விசிட்' வந்த முதல்வர், வள்ளுவர் கோட்ட சித்திரத்தைப் பார்த்துட்டு, 'இந்த தேர்ல இந்த மணி இப்படி வரணும்'னு சொன்னப்போ, அந்த 'எரர்' பத்தின பதற்றத்தைவிட, அந்த நுணுக்கமான கரெக்ஷனை அவர் கண்டுபிடிச்சு சொன்ன பிரமிப்புதான் எனக்கு அதிகமா இருந்துச்சு. புரிஞ்சுக்கிட்ட அவர், 'திருவாரூர்க்காரனுக்கு தேர் பத்தி தெரியாதா?! கூடவே, வள்ளுவர் கோட்டத்துல என் பங்கும் இருக்கறதால அங்க ஒவ்வொரு சதுர அடியும் எனக்கு மனப்பாடம்'னு எளிமையா சொல்லிட்டு நகர்ந்துட்டார். அந்தத் தவறை சரிப்படுத்திட்டு அவரோட அடுத்த விசிட்டுக்காக காத்திருந்தோம். வந்து பார்த்தவர், 'நல்லா பண்ணியிருக்கீங்க'னு மொத்த 'கும்பாரா'வையும் பாராட்டிட்டார்!" என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சொன்னார் ரஜினி. இவரின் கணவர் டூர் சம்பந்தமான வேலையில் இருக்க, மகன் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் டெக்னிக்கல் ஹெட்!

உலகம் வெப்பமயமாவதை குறைப்பதற்காக தற்போது உலகெங்கும் வீடு, அலுவலகங்களில் உபயோகப்படுத்தும் விளக்கு, ஏ.சி, கார்பெட், சேர் என அனைத்துமே இயற்கையை பாதிக்காத வகையில் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய பசுமைக் கட்டடமாக, அமெரிக்காவின் 'க்ரீன் பில்டிங் கவுன்சில்' வழங்கும் தங்க தர நிர்ணயச் சான்றிதழைப் பெற்று இருக்கிறது நம் தலைமைச் செயலகம். அந்த வேலைகளின் முதுகெலும்பு, தீபா சத்தியராம் மற்றும் அவருடைய கணவர் சத்தியராம். இருவருமே பொறியாளர்கள்!

உற்சாகமாகப் பேசினார் En3 என்ற கம்பெனியின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் மற்றும் க்ரீன் பில்டிங் கன்சல்டன்ட் தீபா சத்தியராம்!

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...

''உலகம் வெப்பமயமாவதை முடிந்தளவு குறைக்கற முயற்சியில இறங்கியிருக்கற எங்க நிறுவனத் துக்கு, தலைமைச் செயலகத்தை க்ரீன் பில்டிங் ஆக்க வேண்டிய பொறுப்பு கிடைச்சதை, எங்களோட மைல் ஸ்டோன்னுதான் சொல்லணும்.

தலைமைச் செயலக சுவர்கள்ல பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் எல்லாமே லோ இ (Low -E) வகை கண்ணாடிகள். இதன் சிறப்பு என்னனா, கண்ணாடியில சூரியக் கதிர்கள் பட்டு துவாரங்கள்ல நுழையும்போது, வெளிச்சம் கிடைக்கும். ஆனா, வெப்பம் அறவே இருக்காது. இதனாலயே ஏ.சி-யோட தேவை அதிகம் இருக்காது. ஸோ, இயற்கையும் அதிகம் மாசுபடாது!

இந்தியாவில டியூப் லைட்டுகளே பயன்படுத்தாத கட்டடங்கள்ள இதுவும் ஒண்ணு. இங்க நாங்க பொருந்தியிருக்கறது எல்லாமே 'சி.எஃப்.எல்' ரக லைட்டுகள். குறைந்தளவு மின்சாரத்திலும் இயங்கி மின்சாரத்தை பெருமளவு சேமிக்கும் திறன் கொண்டவை இந்தக் கட்டடத்துல செலவாகிற 100 சதவிகித கழிவு நீர், சுத்திகரிக்கப்பட்டு இங்க இருக்கற தோட்டம், லான் எல்லாத்துக்கும் பயன்படுத்தப்படுற மாதிரி அமைச்சுருக்கோம்" என்று சொல்லும் தீபா, கழிவுநீர் மறுசுழற்சிக்கான தொழில்நுட்பப் படிப்பை அமெரிக்காவில் கற்றுள்ளாராம்.

''இங்க பயன்படுத்தப்பட்டிருக்கற கார்பெட்டுகள் சுத்தமான சணலால் ஆனது. நாற்காலிகள் எல்லாம் இயற்கையான மரங்களால செதுக்கினது. இந்தக் கட்டடத்தினுள் புகைப்பிடிக்கறது தடை செய்யப்பட்டிருக்கு. இது எல்லாருடைய உடல்நலனையும் பாதுகாக்கற விஷயம். இந்த சுவத்துல பூசியிருக்கற வர்ணங்கள்கூட கெடுதல் தராத ரசாயன கூட்டுப்பொருளால் ஆனது. அதனால ரசாயன நாற்றம் குறைக்கப்படுறதோட, காற்றின் தூய்மையும் பாதுகாக்கப்படுது. மொத்தத்துல, இந்தக் கட்டடம் இந்தியாவுலயே முன்மாதிரியான அரசுக் கட்டடமா எழுந்து நிக்கணும்னு நினைச்ச முதல்வரோட தீவிர விருப்பத்துக்கு ஈடு கொடுக்க, எங்களோட பங்கை நிறைவா செஞ்சு கொடுத்து, அவரோட திருப்தி புன்னகையை சர்டிஃபிகேட்டா வாங்கியிருக்கோம்!" என்று பெருமையுடன் கூறும் தீபாவுக்கு, வீட்டுக்குள் சந்தோஷம் கொடுப்பது... எல்.கே.ஜி. படிக்கும் அவருடைய மகன் சர்வத்!

ஆக, பல கை ஓசையாக எழும்பியிருக்கும் அந்தப் பிரம்மாண்ட கட்டடத்துக்கு, ரஜினியும் தீபாவும் கொடுத்திருப்பது துல்லிய ஒலி என்பதில் நிறைவான பெருமை அவர்களுக்கு!

அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...
 
அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...
அழகுக்கு ரஜினி...பசுமைக்கு தீபா...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism