வருடம் முழுக்க பாட புத்தகங்களுக்குள் புதைந்து, இறுதித் தேர்வுக்கு இரவு பகலாக கண்விழித்துப் படித்து, மார்ச் மாத இறுதியில் மொத்தமாக எனர்ஜி டவுன் ஆகிப்போகிறார்கள் பள்ளிக் குழந்தைகள். ஆனால், அடுத்து வரும் இரண்டு மாத கோடை விடுமுறை, அவர்களுக்கு குதூகல சொர்க்கம்; தங்களை ரீ-சார்ஜ் செய்துகொள்ளும் உற்சாக ஊற்று!
முன்பெல்லாம் கோடை விடுமுறையில் கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்குத் துள்ளலுடன் படையெடுப்பார்கள் குழந்தைகள். ஆனால், இப்போதோ 'சம்மர் கேம்ப்' செல்கிறார்கள்! 'ரெண்டு மாசமும் வெயில்ல அலையாம, டி.வி. முன்னாடியே விழுந்து கிடக்காம, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ்னு வெட்டியா கழிக்காம 'சம்மர் கேம்ப்' போய் ஏதாச்சும் ரெண்டு விஷயத்தைக் கத்துக்கிட்டா, ஃப்யூச்சருக்கு உதவும்ல?!' என்று தங்கள் தரப்பு விருப்பத்தைக் கூறும் பெற்றோர்கள், அதற்காக ஒரு பட்ஜெட் ஒதுக்கி குழந்தைகளை சம்மர் கேம்ப்பில் சேர்த்து விடுகிறார்கள்.
ஆனால், கேம்ப்பில் பிள்ளைகளை சேர்த்துவிடும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும், பிள்ளை களின் விடுமுறை விருப்பமும் ஒரு புள்ளியில் சந்திக்கிறதா, இதற்கான கட்டணங்கள் மிடில் கிளாஸ் பெற்றோர்களின் பட்ஜெட்டுக்கு உட்படுகிறதா, என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகின்றன இந்த கேம்ப்பில் என... கேள்விகளுடன் இவர்களைச் சந்தித்தோம்.
சென்ற வருட சம்மர் கேம்ப்பில் தன் ஏழு வயது மகன் சந்தோஷை சேர்த்துவிட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் திருச்செந்தூரைச் சேர்ந்த சண்முகப்ரியா.
"போன வருஷம் நாங்க சென்னையில இருக்கற எங்க அம்மா வீட்டுக்கு லீவுக்குப் போயிருந்தப்போ, என் மகனை 'சம்மர் கேம்ப் டான்ஸ் கிளாஸ்'ல சேர்த்துவிட்டேன். அவனும் ரொம்ப இன்ட்ரஸ்ட்டா கத்துக்கிட்டான். ஆனா, இருபது நாள்ல அந்த கேம்ப் முடிஞ்சுடுச்சு. அப்புறம் லீவும் முடிஞ்சு நாங்க எங்க சொந்த ஊரான திருச்செந்தூருக்கு வந்துட்டோம். இங்க அந்த டான்ஸ் கிளாஸை |