ஸ்டார்ட் மியூஸிக்! டொய்ங்... டொய்ங்... டொய்ங்..! ரீட்டா வந்துட்டா!
கொஞ்சம் ஓவர்தான் இல்ல?! ஓ.கே... ஆரம்பத்துலயே ஒரு ஸ்பெஷல் நியூஸ் சொல்லி உங்களை கூல் பண்ணிடறேன் பாருங்க!
'ரமணி வெர்சஸ் ரமணி', 'மர்ம தேசம்', 'சிதம்பர ரகசியம்'னு சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்கள் கொடுத்த டைரக்டர் நாகா, சின்னத்திரையில இருந்து பெரிய திரைக்குப் போனதால அவரை நாம ரொம்பவே மிஸ் பண்ணினோம் இல்லியா?! இதோ... மறுபடியும் சின்னத்திரைக்கும் வந்துட்டாரு நாகா! கூடிய சீக்கிரம் பாலிமர் டி.வி-யில வெளிவரப்போகுது அவரோட அடுத்த சீரியல் 'அமுதசுரபி'!
''சீரியல் பத்தி அப்புறம் பேசலாம். சின்னத்திரை, பெரியதிரைனு வட்டம் போடற சீக்ரெட் என்ன..?!"னு நாகா சார்கிட்ட கேட்டா, தெளிவா வச்சுருக்கார் பதில்!
''சினிமாவுல இருக்கறவங்க சீரியலுக்கு வந்துட்டா, அவங்களுக்கு மார்க்கெட் இல்ல... சீரியல்ல இருக்கறவங்க சினிமாவுக்குப் போயிட்டா அவங்க சின்னத்திரையை மறந்துடணுங்கறது எல்லாம் மரபு இல்லை ரீட்டா. என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். கதையோட நிகழ்வுகளைப் பொறுத்து... சுருக்கமா சொல்றதுக்கு சினிமாவையும், விளக்கமா சொல்றதுக்கு சீரியல்லையும் நம்பறேன். இயக்குநர் ஷங்கரோட 'எஸ் பிக்சர்ஸ்' தயாரிப்புல 'ஆனந்தபுரத்து வீடு' படம் பண்ற சான்ஸ் கிடைச்சுது. படத்தை முடிச்ச சமயம், 'அமுதசுரபி'னு சீரியலுக்கு வந்துட்டேன்!"னு சொன்ன நாகாகிட்ட,
''புது சீரியல் எப்படி இருக்கும் சார்..?"னு கேட்க,
''நீங்க எதிர்பார்க்கற மாதிரியே த்ரில், திகில் கலந்த சீரியல்தான். இதில் எக்ஸ்ட்ரா எனர்ஜியா ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுச் சான்றுகளை சேர்த்திருக்கேன். என் குடும்ப நண்பரான நடிகை சங்கீதா, என் வேண்டுகோளுக்காக இதுல ஒரு சின்ன ரோல் பண்றாங்க!"னு ஸ்கூப் சொன்ன நாகாவுக்கு, இந்த ஏப்ரல் மாசம் மெகா சந்தோஷங்களைத் தரும்னு அவரோட ராசி பலன் சொல்லுது. யெஸ்! அவரோட 'ஆனந்தபுரத்து வீடு' படம், 'அமுதசுரபி' சீரியல்... ரெண்டுமே ஏப்ரல் ரிலீஸ்!
டபுள் ஷாட்!
''போன இஷ்யூல பப்லு பாலிமர் டி.வி-க்கு ரெண்டு சீரியல்கள் தயாரிக்கப் போறதா ஸ்கூப் நியூஸ் சொன்னியே... அந்த சீரியல்களோட கதை என்னனு ஃபாலோ பண்ண வேண்டாமா..?"னு எங்க எடிட்டர் என்னை விரட்ட, நான் பப்லுவை விரட்டிப் பிடிச்சேன்.
''கதை கேட்கறதெல்லாம் அநியாயம் ரீட்டா..."னு எஸ்கேப்பாகப் பார்த்த பப்லுகிட்ட, ''பரவாயில்ல... சொல்லுங்க பாஸ்"னு வேண்டுகோள் வைக்க, ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொன்னாரு பப்லு!
'' 'எஸ்.எம்.எஸ் (சவாலை முடிந்தால் சமாளி)', இது ஒரு சீரியல் 'ப்ளஸ்' கேம் ஷோ ரீட்டா. ஒரு பிஸினஸ்மேன் நெட்ல தான் நடத்தற சேனலுக்கு புரொக்ராமிங் வேலைகளுக்கு கிரியேட்டிவ் ஆட்கள் வேணும்னு விளம்பரம் பண்றார். வர்ற விண்ணப்பங்கள்ல ஆறு பேரை செலக்ட் பண்ணி, அந்த ஆறு பேருல ஒருத்தரை ஃபைனலா செலக்ட் பண்ண, அவங்களுக்கு ஒரு போட்டி வைக்கறார்.
|