"பகலிலும் உங்களைத் தூக்கம் தூக்கிக் கொண்டு போகும் இந்தப் பிரச்னைக்கு இரண்டு பொதுவான காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அதிக எடை உடையவர்களுக்கு சீராக மூச்சு விட முடியாமல், ஆக்ஸிஜன் லெவல் குறைந்து, கார்பன்&டை&ஆக்ஸைடு லெவல் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த சமயம் தன்னையும் அறியாமல் அவர்கள் மயக்கம் போட்டு விழுவதற்கு வாய்ப்பு அதிகம். அந்த மயக்கத்தை நீங்கள் தூக்கமாக புரிந்து கொண்டிருக்கலாம்.
அல்லது, சிலருக்கு கழுத்துப் பகுதியில் அதிக சதை இருந்தால், இரவு நேரங்களில் சீராக மூச்சுவிட முடியாமல், புரண்டு புரண்டு படுப்பார்கள். இதனால், தூங்க வேண்டிய நேரத்தில் தூங்க முடியாமல் போய், பகல் நேரங்களில், பொது இடங்களில் அவர்களையும் அறியாமல் தூங்குவார்கள்.
மற்றொன்று, வலிப்பு நோயின் காரணமாகவும் மயங்கி விழ வாய்ப்பு உண்டு. நீங்கள் உங்களுக்கு வலிப்பு நோய் உள்ளதாக எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்களின் 'அதிக எடை'யே இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். எனினும், உங்களின் பிரச்னையை சரியாக உறுதிப்படுத்திக் கொள்ள உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது ஒரு பொது மருத்துவரின் வழிகாட்டலின் கீழ், 'ஸ்லீப் லேப்' என்று சொல்லப்படுகிற, தூக்கத்தை மானிட்டர் பண்ணக்கூடிய லேப்பில் பரிசோதனை செய்யுங்கள். அதன் முடிவைப் பொறுத்து நீங்கள் சிகிச்சை பெறவேண்டிய மருத்துவரை உங்களின் டாக்டரே பரிந்துரைப்பார்!"
ஆரோக்கியம் குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தருகிறார்கள். கேள்விகளை 'டியர் டாக்டர்' என்று தலைப்பிட்டு 'அவள் விகடன்' முகவரிக்கு அனுப்புங்கள். மருத்துவப் பதிவுகள் எதையும் சேர்த்து அனுப்ப வேண்டாம். |
|