Published:Updated:

சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !

சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !

சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !

சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !

Published:Updated:

அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம் !
சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !
சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில் இருக்கு தீர்வு !


சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !

'தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்'னு சொல்வாங்க. எதுவுமே அனுபவிச்சுப் பாத்தாதான் தெரியும். அதை அனுபவிக்கறதுக்கு முன்ன... தப்பிக்கறதுக்கு வழியைத் தெரிஞ்சுக்குவோம். இந்தத் தடவை தலைவலி பத்தி சொல்றேன்... கேட்டுக்கோங்க.

நேரத்துக்கு சாப்பிடாம இருந்தாலும் தலை வலிக்கும். வெயில்ல அலைஞ்சுட்டு வீட்டுக்குள்ள நொழைஞ்சதும் ஐஸ் தண்ணிய எடுத்து மடமடனு குடிச்சாகூட சிலருக்கு தலை வலிக்கும். இன்னும் சில பேருக்கு ஜலதோஷம் தொடங்குற நேரத்துல தலை வலிக்கும். இப்பிடி எல் லாம் தலைவலி பல ரூபத்துல வரும்.

தலைவலினு தெரிஞ்ச ஒடனே சுக்கை எடுத்து, கொஞ்சம் தண்ணி விட்டு இழைச்சி (உரசி) நெற்றிப்பொட்டுல கனமா பத்து போடுங்க, கொஞ்சம் தகதகனு எரியும். கொஞ்சம் நேரத்துல தலைவலி வந்த எடம் தெரியாம பஞ்சா பறந்துரும்.

ஓமவல்லி இலையை எடுத்து சாறு பிழிஞ்சு, அதோட கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றிப்பொட்டுல பத்து போட்டா... தலைவலி சரியாப் போயிரும் மல்லிகைப்பூவை தலையில வெச்சுக்கற பொண்ணுங்களுக்கு தலைவலி வராது. வந்தாலும் கொஞ்ச நேரத்துல சரியாயிரும். ஆம்பளைங்களுக்கு தலைவலினா... மல்லிகைப்பூவை தலையணையில வெச்சு தூங்கினா... சரியாகிடும்.

நாலு மிளகை தண்ணி விட்டு அரைச்சு, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெத்தியில பத்து போட்டா... தலைவலி சரியாயிரும்.

சிலருக்கு சைனஸ் காரணமாகூட தலைவலி வரும். அப்படிப்பட்டவங்க ராத்திரி தூங்குறப்ப... தலையணையில நொச்சி இலையை வெச்சு தூங்கினா... நாளடைவுல தலைவலி சரியாப் போகும்.

சைனஸ் குணமாகணும்னா நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நல்லா காய்ச்சி, சூடு ஆறினதும் தலைக்கு தேய்ச்சு ஒரு மணி நேரம் கழிச்சு வெந்நீர்ல குளிக்கணும். இதை, வாரத்துக்கு ஒருநாள் இல்லைனா ரெண்டு நாள்னு... ரெண்டு மாசம் வரைக்கும் செஞ்சாலே... சைனஸ் சரியாப் போயிரும். தலைவலியும் சரியாயிரும்.

இந்த ஒற்றைத் தலைவலி வந்தா... உயிரே போற மாதிரி இருக்கும். வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைச்சி, முன் நெற்றியில பத்து போட்டு, சூரியன் உதிக்கறப்ப வர்ற வெளிச்சத்துல காட்டிட்டு வந்தா.. மூணே நாள்ல சரியாப் போயிரும்.

- இன்னும் சொல்றேன்...

சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !
 
சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !
சைனஸ் பிரச்னைக்கு நொச்சியில இருக்கு தீர்வு !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism