Published:Updated:

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

Published:Updated:

ரேவதி
உற்சாகமூட்டும் உழவாரப்பணி !
உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

'கடவுள் மக்கள் முன் தோன்றி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ஒரு தொகையை அன்பளிப்பாகத் தருவதாகக் கூற, அனைவரும் மகிழ்ந்தனர். உடனே, 'நான் 720 ரூபாய் தருகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் எவ்வளவு தொகையை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த விரும்புவீர்கள்?' எனக் கடவுள் கேட்டதும், அனைவரும் கலந்து ஆலோசித்து 25 சதவிகிதம்... அதாவது 180 ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டனர்.

இறைவன் புன்னகையோடு, 'அதுகூடத் தேவையில்லை. வெறும் 5 ரூபாய் மட்டும் மாதந்தோறும் தர இயலுமா?' என்று கேட்டபோது, தயக்கமின்றி ஒப்புக் கொண்டனர்.

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

உண்மையில் மாதந்தோறும் ஆண்டவன் நம் அனைவருக்கும் 720 மணி நேரம் அன்பளிப்பாக தந்திருக்கிறார். ஆனால், அதில் 5 மணி நேரமாவது நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துகிறோமா என்றால், பலரும் சொல்லும் பதில்.... Ôஇல்லைÕ என்பதாகத்தான் இருக்கும். இனியாவது அதைத் துவங்குவோம்'

- இப்படியரு சேவை நோக்கத்தில் தொடங்கி, இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் 'ஸ்மைல்' என்ற தன்னார்வத் தொண்டு மையம்.

2001-ல் தொடங்கிய இந்த அமைப்பு, பொதுச்சேவையில் ஆர்வமுள்ளவர்களை திரட்டி, ஒருங்கிணைத்து, அவர்களைஎல்லாம் கோயில்களைச் சுத்தம் செய்வது, பழைய துணிகள், பொருட்களைச் சேகரித்து ஏழை, எளிய குடும்பங்களுக்கு விநியோகிப்பது, கண் சிகிச்சை முகாம், கால்நடை முகாம், ரத்ததான முகாம், தண்ணீர் சேமிப்பு ஆலோசனை, கண் பார்வையில்லாதவர்களுக்கு பாடம் கற்பிப்பது என்று பலவிதமான சேவைகளில் ஈடுபட வைத்து, ஆத்ம திருப்தியையும், நிரந்தர நிம்மதியையும் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது.

துறைமுகத்தில் வேலை பார்த்து கட்டாய பணி ஓய்வு பெற்றவர் நிர்மலா. இவர் தற்போது ஏற்றுக் கொண்டிருப்பது... உழவாரப் பணிகளுக்கு சேவகர்களை ஒருங்கிணைக்கும் வேலையைத்தான்.

''இந்த அமைப்பு ஆரம்பிச்சதுலேர்ந்து நான் இருக்கேன். இந்த உழவாரப் பணியால நாங்க எல்லாம் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவங்களா உணர்றோம். ஒரு குக்கிராமத்துல சிதிலமடைஞ்சு கிடந்த கோயில்ல இருந்து சிங்கப்பூர் கோயில் வரை நாங்க உழவாரப்பணிக்குப் போயிருக்கோம். ஆண்டவன் சந்நிதானத்தை பெருக்கறது, கழுவறது, கோலம் போடறது, கோயில் விளக்குகளை சுத்தம் செய்றது, வர்ற பக்தர்களுக்கு சேவை செய்றதுனு இந்த வாய்ப்பெல்லாம் எங்களுக்கு கிடைச்ச பாக்கியம்'' என்றவர்,

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

''ஒருமுறை காரைக்குடி கோயில்கள்ல உழவாரப்பணியை முடிச்சிட்டு திரும்பும்போது, டிரெயின்ல ரிசர்வேஷன் கிடைக்கல. அவசரத்துல, ஊனமுற்றோருக்கான பகுதியில ஏறிட்டோம். அங்கிருந்தவங்க, எங்கள இறங்கச் சொல்ல, அதுல இருந்த ஒரு பெண்மணி எங்களை அடையாளம் கண்டுகிட்டு, 'கண் பார்வையில்லாத என் கணவருக்கு நீங்கதான் பாடம் எடுத்து, எக்ஸாம் எழுதவும் உதவினீங்க. அவர், பாஸாகி நல்ல வேலையிலயும் சேர்ந்துட்டாரு'னு நன்றியோட சொன்னாங்க.

இதனால எங்கள புரிஞ்சுக்கிட்ட மத்தவங்களும், 'பொதுவா எங்களை இந்தச் சமூகம் எந்த இடத்துலயுமே ஒரு இரண்டாம்தர மனநிலையோடவேதான் நடத்தும். அந்தக் கோபத்தோடதான் உங்களை இறங்கச் சொல்லிட்டோம். ஆனா, உங்கள மாதிரி ஒருசிலர் இருக்கறதாலதான், எங்களுக்கு வாழ்க்கை மேல இருக்கற நம்பிக்கைக் குறையாம இருக்கு!'னு நெகிழ்ந்தப்போ, என்னோட பிறப்புக்கு ஒரு அர்த்தம் கிடைச்ச நிம்மதி எனக்கு!'' என்று நெகிழ்ந்தார் நிர்மலா.

இல்லத்தரசி மைதிலி பார்த்தசாரதிக்கு, இந்தச் சேவை அவதாரம் தந்திருப்பது... ஆத்மார்த்தமான நிம்மதி.

''மருத்துவ சிகிச்சை முகாமுக்கு நான் வாலண்டியரா இருந்திட்டிருக்கேன். இங்க 'இதுதான் உன் பொறுப்பு'னு யாருக்கும் பதவியெல்லாம் இல்லை. விருப்பப்பட்டு ஏத்துக்கறதுதான். ஆரம்பத்துல எனக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும். இந்தக் குணத்தை மாத்திக்கணும்னு நெனைப்பேன். ஆனா, சேவைக்காக பல இடங்களுக்கும் போகும்போது, நோய், குடும்ப பிரச்னைகள், பணப் பிரச்னைகள்னு ஒவ்வொரு பிரச்னைகளையும் சுமந்திட்டிருக்க மனுஷங்க, அதை மறைச்சு, சிரிச்சு வாழற அழகை பார்த்ததுக்கு அப்பறம், என் கோபத்தையெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டேன்!'' என்றார் அனுபவப்பூர்வமாக!

இல்லத்தரசியான சாவித்திரி, "கடன்ல மூழ்கி, எங்க இடத்தையே விக்கணும்கிற நிலைமைக்கு எங்க குடும்பம் வந்துட்டுது. அதை சரிக்கட்ட பேங்க் லோனுக்கு அப்ளை பண்ணேன். ஆனா, அது கைகூடி வரவேயில்ல. மனசு கிடந்து அலைபாய்ஞ்சுகிட்டே இருக்க, அந்த நேரம் பார்த்து ஸ்ரீவாரி சேவைக்காக திருப்பதிக்கு கூப்பிட்டாங்க. மன அமைதியும் கிடைக்குமேனு கிளம்பிப் போனேன். அன்னதான செக்ஷன்ல லட்டு கொடுக்கற வேலைதான் எனக்கு. ஒரு வார சேவையை முடிச்சிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தா... லோன் சாங்ஷன் லெட்டர் வந்திருந்துது" என்று நெகிழ்ந்தவர்,

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !

"2003-ம் வருஷத்துல அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்ல ஃபைல்களை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு, இந்த அமைப்புல இருக்கற நாராயணசாமி சார் தலைமையில ஒரு குழு இங்கேருந்து போயிருந்தாங்க. கிட்டத்தட்ட 3 லட்சம் ஃபைல்கள் இறைஞ்சி கிடந்தது. தினமும் ஆபீஸ§க்கு போற மாதிரி ஆறு மாசம் அங்க போய், எல்லா ஃபைல்களையும் ஒழுங்கு படுத்தி, 57 அலமாரியில அடுக்கி, கம்ப்யூட்டர்ல என்ட்ரி போட்டு பர்ஃபெக்டா செஞ்சு கொடுத்தோம். அந்த ஆஸ்பத்திரியோட சேர்மன் சாந்தா அம்மையார், 'இதுக்கு முந்தியெல்லாம் நோயாளிகள் ரெண்டு அல்லது மூணு மணிநேரம் காத்திருந்துதான் டாக்டரைப் பார்க்க முடியும். இப்பல்லாம், பத்தே நிமிஷத்துல நோயாளியோட ஃபைலை ஈஸியா ரெஃபர் பண்ண முடியுது'னு நன்றி தெரிவிச்சுக் கடிதம் எழுதி இருந்தாங்க. அதுதான் எங்களுக்குக் கிடைச்ச கௌரவம்'' என்றார் பெருமையுடன்!

இப்படிப்பட்ட பணிகளை மேற்கொண்டிருக்கும் 'ஸ்மைல்' அமைப்பை நடத்தி வருபவர்... பிரபல சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.பி.நாகராஜனின் மகன் பரமசிவம்.

''சேவைகளை செய்ய, கலந்தாலோசிக்க, தொடர்பு கொள்ள ஒரு களம்தான் இந்த 'ஸ்மைல்'. பள்ளிச் சிறுமியிலேர்ந்து பல் போன தாத்தா வரை 2,000 பேருக்கு மேல இந்த பொதுச்சேவையில ஈடுபட்டுட்டு இருக்காங்க. பணம் வாங்கறதோ, கொடுக்கறதோ இல்லாததால கணக்கு வழக்குங்கிற பேச்சும் இல்லை. சேவை செய்யற ஆர்வத்தோட இருக்கறவங்களோட பெயர், முகவரி, தொலைபேசி விவரம் எல்லாம் எங்ககிட்ட இருக்கும். கோயில், மருத்துவமனை, பள்ளிகள்லேர்ந்து எங்களுக்கு அழைப்பு வரும். வாலன்டியர்ஸ்ல அந்த சேவைக்கு விருப்பம், நேரம் இருக்கறவங்களை அனுப்பி வைப்போம். சேவையில ஈடுபடுறவங்க, தங்களோட போக்குவரத்து செலவை மட்டும் ஏத்துக்கிட்டா போதும். உணவு, தங்கும் வசதிகளையெல்லாம் அந்தந்த நிர்வாகமே கவனிச்சுக்கும்'' என்றார்!

பல கை ஓசை!

உற்சாகமூட்டும் உழவாரப்பணி !
படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக்
உற்சாகமூட்டும் உழவாரப்பணி !
உற்சாகமூட்டும் உழவாரப்பணி !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism