"உங்கள் கணவரை தினமும் காலை ஒன்றரை மணி நேரம் வியர்த்து விறுவிறுக்கும் அளவுக்கு நடக்கச் சொல்லுங்கள். நடைப்பயிற்சி இல்லாத நாளே இருக்கக்கூடாது என்பதை அவருக்கு வலியுறுத்துங்கள். இரண்டு, மூன்று கிலோ மீட்டர்களுக்குள் செல்லும் வேலைகள் வாய்த்தால்... பஸ், ஆட்டோ என நாடாமல்... நடந்தோ, சைக்கிளிலோ செல்லச் சொல்லுங்கள். தவிர, ஸ்கிப்பிங், ஸ்விம்மிங், சூரிய நமஸ்காரம் என மற்ற எளிய உடற்பயிற்சிகளையும் செய்தால் இன்னும் நலம்.
உணவைப் பொறுத்தவரை, உங்கள் கணவர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் கொலஸ்ட்ரால் நிறைந்த நட்ஸ் வகைகள், நெய், டால்டா, பாம் ஆயிலில் பொரித்த உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள். எண்ணெயைப் பொறுத்தவரை சன்ஃப்ளவர் ஆயில் அல்லது ரைஸ் ப்ரான் ஆயில் (தவிட்டு எண்ணெய்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அசைவம் சாப்பிடுபவராக இருந்தால்... படிப்படியாகக் குறைப்பது நலம். மேலும், ஒரு நாளைக்கு இரண்டு கப்களுக்கு மேல் காபி, டீ வேண்டாம். அதற்குப் பதிலாக வெஜிடபிள் சாலட், வெஜிடபிள் சூப், மோர் போன்றவற்றை அருந்தக் கொடுக்கலாம். மது, சிகரெட் பழக்கங்கள் |