Published:Updated:

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

Published:Updated:

உஷார்...உஷார்
நாச்சியாள்
குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !
குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்பு எண்ணெய் !
குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

'சென்னையில், வயிற்றுப் பூச்சியை வெளியேற்றுவதற்காக, வேப்ப எண்ணெய் கொடுக்கப்பட்ட குழந்தை இறந்தது...'

- இது, சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி.

'இன்றும்கூட கிராமங்களில், 'வயித்துல பூச்சியா..? குடி வேப்ப எண்ணெயை', 'குழந்தைக்கு மலச்சிக்கலா..? வெளெக்கெண்ணெயை ஊட்டிவிடு' என்று பாட்டிமார்கள் கை வைத்தியம் செய்து கொண்டிருக்கும்போது... அந்தப் பழக்கம் இங்கு மரணம் வரை சென்றிருக்கிறதே..!' என்று அதிர்ந்த நாம்... தெளிவுபெற சென்னை, எழும்பூரில் உள்ள அரசு, குழந்தைகள் நல மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயச்சந்திரன் முன் ஆஜரானோம் அக்கறையுடன்.

'' 'குழந்தைக்கு வயித்துல பூச்சினு கடையில வாங்கி வேப்ப எண்ணெய் கொடுத்தேன். அதைக் குடிச்சதும் குழந்தைக்கு வலிப்பு மாதிரி வந்துருச்சு டாக்டர். எப்படியாவது காப்பாத்துங்க'னு அப்பப்ப சில தாய்மார்கள் அலறி அடிச்சு ஓடி வருவாங்க. அந்தக் குழந்தைங்கள்ல சிலரைக் காப்பாத்த முடியாமக்கூட போயிடும். இப்படி 50 குழந்தைங்க வரை எங்க ஹாஸ்பிட்டல்லயே இறந்திருக்கு'' என்று அதிர்ச்சியைக் கூட்டிய டாக்டர்,

''அதனாலதான் அலோபதி டாக்டர்ஸ் இந்த மாதிரி வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் சாப்பிடுறதை எல்லாம் கண்டிப்பா வேண்டாம்னு சொல்றோம். வேப்ப எண்ணெயை உள் மருந்தாவும் சாப்பிடக் கொடுக்கலாம்னு சொல்றதுக்கு அறிவியல் முறையில நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்ல. கூடவே, மருத்துவக் குணங்கள் வாய்ந்ததா இருந்தாலும்கூட இந்த எண்ணெய்கள் சுத்தப்படுத்தப்பட்டு, முறையான லேபிள் உள்ள மருந்துகளா விற்கப்படுறது இல்ல. அப்படிப்பட்ட எண்ணெய்களை பெரியவங்க சொன்னாங்கனு பிள்ளைகளுக்கு கொடுக்க, அது வலிப்பு நோய், நிமோனியா காய்ச்சல்னு குழந்தைங்க உயிரைக் காவு வாங்கிடுது'' என்று சொன்னார்.

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !

இதுபற்றி பேசிய சென்னையைச் சேர்ந்த சித்தமருத்துவர் ஜேம்ஸ் குமார், ''எங்கயாவது நடக்கற துர்சம்பவங்கள வெச்சு, அந்த மருத்துவ முறையே தப்புனு முடிவுக்கு வந்துடக்கூடாது. நாட்டு வைத்தியத்துல காலம் காலமா வயித்துப் பூச்சிக்கு வேப்ப எண்ணெயும், மலமிளக்க விளக்கெண்ணெயும் குழந்தைகளுக்கு கொடுத்துட்டுதான் வர்றாங்க. கிராமங்கள்ல வேப்பங்குச்சியால இன்னிக்கும் பல் விளக்கறாங்க. வேப்ப இலை துளிரை தினமும் சாப்பிடறவங்ககூட இருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம், வேம்புல இருக்கற மருத்துவ குணங்கள்தான். அதே காரணத்துக்காகத்தான், 'வேப்ப மரமே எங்களுது'னு காப்புரிமை (பேடன்ட்) வாங்கி வெச்சுக்க அலை மோதுது அமெரிக்கா. அதை வச்சு பெரிசா மருந்து பிஸினஸ் பண்ணலாம்ங்கறதுதான் அவங்க நோக்கம்.

இப்படியிருக்கறப்ப, வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் இதையெல்லாம் குறைச்சு எடைபோடக் கூடாது. அதேசமயம், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் இதையெல்லாம் சுத்தமானதானு தெரிஞ்சுக்காம வாங்கிக் கொடுக்கறது தப்பு. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்ங்கறதால, தக்க வழிகாட்டுதல் இல்லாம கொடுக்கக் கூடாது!'' என்று அறிவுறுத்தினார்.

காரணம் இல்லாமல் நம்மவர்கள் காலகாலமாக வேம்பைக் கொண்டாடவில்லைதான். அதேசமயம், காலம்கெட்டுப்போன காலமாகி, எல்லாவற்றிலும் கலப்படம் என்பதையும் மறுப்பதற்கில்லை. உஷாரக இருக்க வேண்டியது நாம்தான்!

குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !
 
குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !
குழந்தைகளைக் கொல்லும் கலப்பட வேப்ப எண்ணெய் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism