Published:Updated:

என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !

என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !

என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !

என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !

Published:Updated:

வாசகிகள் பக்கம்
என் டைரி-222
என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !
என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நன்றி மறந்த நாத்தனார்கள்!
என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !

வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் 35 வயது பெண்மணி நான். என் கணவர்தான் வீட்டுக்கு மூத்தவர். அவருக்கு நான்கு தங்கைகள். கணவரின் அன்பும், புகுந்த வீட்டினரின் பாசமும் எனக்கு பனங்கற்கண்டாக இனித்தது. ஆரம்பத்தில் அப்படி, இப்படி என்று இருந்தாலும், பத்து ஆண்டுகளாக இனிமையாக போய்க் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில், இப்போது புயல் வீச ஆரம்பித்திருக்கிறது... நான்கு நாத்தனார்களால்!

என் அண்ணி, எனக்கு பலவிதங்களில் கொடுமை புரிந்திருக்கிறார். அதையெல்லாம் அனுபவித்த நான், மறந்தும்கூட நம்முடைய நாத்தனார்களுக்கு எந்தவிதத்திலும் பிரச்னை கொடுத்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருந்தேன். அதற்காகவே அவர்கள்மீதெல்லாம் கூடுதலாக அக்கறைப்பட்டேன். பல இடங்களில் கடன் வாங்கி அவர்களின் திருமணத்தை நடத்தினேன்.

அருமையான கணவரை தந்த இறைவன் குழந்தை பாக்கியத்தை மட்டும் எனக்கு அளிக்க மறுத்துவிட்டான். எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும் பலன் இல்லை. 'நாம் இருவர், நமக்கெதற்கு மற்றொருவர்?' என்று ஆறுதலாக பேசியே அந்த விஷயத்தை மறக்கடிப்பார் என்னவர். 'என் தங்கைகளோட குழந்தைகள், உன் உறவுக்காரர்களின் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள் போலத்தான்' என்றும் சமாதானப்படுத்துவார். அதற்கேற்றாற்போல... ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் நாத்தனார்கள் குடும்பத்துடன் வந்து சந்தோஷத்தை இரட்டிப்பாக்குவார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு சம்மர் லீவுக்கு வந்தவர்கள், குடும்பத்தையே இரண்டாக்கும் அளவுக்கு கொளுத்திப் போடுவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. நான் வீட்டில் இல்லாதபோது... பீரோ முதல் வீட்டில் உள்ள அத்தனையையும் அலசி ஆராய்ந்துள்ளனர். அது தெரிந்தும் நான் பெரிதுபடுத்தவில்லை. அதன்பிறகும்கூட, அவர்கள் விரும்பிக் கேட்ட பாத்திரம், பட்டுப் புடவை என்று எல்லாவற்றையும் கொடுத்தேன். அப்படியிருந்தும்கூட, "உங்க அண்ணனோட மகளுக்கு மோதிரம் போட்டீங்களாமே? என் அண்ணனுக்குனு ஒரு குழந்தை இருந்திருந்தா, இப்படி வாரி இறைக்க முடியுமா? அப்பவே, அண்ணனுக்கு வேற கல்யாணம் பண்ணியிருந்தா, வீட்டுக்கும் வாரிசு வந்திருக்கும்' என்றெல்லாம் பேசி, என் மனதைக் குத்திக் கிழித்து விட்டனர். எப்போதும் ஆறுதலாக பேசும் கணவருக்கு இதெல்லாம் தெரிந்தும்கூட, பட்டும்படாமல் விட்டுவிட்டார். இத்தனைக் கால சம்பாத்தியத்தை கணவர் வீட்டு உறவுகளுக்கே அதிகமாக அள்ளிக் கொடுத்துவிட்டு, நயாபைசாகூட எனக்கென்று சேமிக்காமல், தாலி சரடு மட்டுமே சுமந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். 'உறவுகள்தான் முக்கியம்' என்று அவர்களையெல்லாம் உயரத்தில் வைத்துப் போற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், வார்த்தைகளால் என் இதயத்தை சுக்கு நூறாக்கிவிட்டார்கள்... நன்றி மறந்த நாத்தனார்கள். அவர்களை எல்லாம் நினைத்தாலே நெஞ்சு அடைக்கிறது. முதியோர் இல்லத்தில் முடங்கிவிடலாமா என்று மனம் ஏங்குகிறது.

என்ன செய்யட்டும் தோழிகளே..?
- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !
 
என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !
என் டைரி 222 - நன்றி மறந்த நாத்தனார்கள் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism