Published:Updated:

ராசிபலன்கள்!

ராசிபலன்கள்!

ராசிபலன்கள்!

ராசிபலன்கள்!

Published:Updated:

ராசி பலன்
'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசிபலன்கள்!
ராசிபலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை

ராசிபலன்கள்!

எதிலும் வெற்றியை விரும்பும் நீங்கள், அதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.

புதனும், சுக்கிரனும் ராசிக்குள் நுழைந்திருப்பதால் வேகமாக பல காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங் கள் கை ஓங்கும். முகப்பொலிவு கூடும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். பணவரவு அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். ஏப்ரல் 2-ம் தேதி மதியம் 3 மணி முதல் 4-ம் தேதி வரை வீண் விவாதங்களைத் தவிருங்கள். குரு பகவான் வலுவாக நிற்பதால் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்ப தால் கோபப்படுவீர்கள். 6-ம் தேதி முதல் சந்திரன் சாதகமாக வருவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

நினைத்ததை முடித்துக் காட்டும் நேரமிது.

ராசிபலன்கள்!

'விழுவதெல்லாம் எழுவதற்கே' என நினைக்கும் நீங்கள், கடின உழைப்பால் உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பவர்கள்.

சூரியன் வலுவாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். 12-ம் வீட்டில் சுக்கிரனும், புதனும் நுழைந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கணவர் அவ்வப்போது கோபப்பட்டாலும், அன்பு குறையாது. ஏப்ரல் 5,6 ஆகிய தேதிகளில் வீண் டென்ஷன், மன உளைச்சல் ஏற்படலாம். செவ்வாய் வலுவாக இருப்பதால் பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 10-ல் குரு நிற்பதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழி தர வேண்டாம். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் அசதி, சோர்வு வந்து நீங்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

சாதித்துக் காட்டும் காலமிது.

ராசிபலன்கள்!

உதிக்கும்போதே விதித்ததை உணரும் ஆற்றல் கொண்ட நீங்கள், தடை வந்த போதும் தளர மாட்டீர்கள்.

11-ம் வீட்டில் புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவர் உங்களுக்கு சாதகமாக பேசுவார். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். குரு பகவான் வலுவாக இருப்பதால் மழலை பாக்கியம் கிட்டும். உங்கள் பரந்த மனதை உறவினர்கள் புரிந்து கொள்வார்கள். ஏப்ரல் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி இரவு 8 மணி வரை சிறு சிறு வாக்குவாதங்கள் வரக்கூடும். சூரியன் 10-ல் இருப்பதால் அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

கடின உழைப்பால் வெற்றி பெறும் வேளையிது.

ராசிபலன்கள்!

யாருக்கும் அஞ்சாமல் அதிரடி முடிவெடுக்கும் நீங்கள், மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நினைப்பீர்கள்.

சனி வலுவாக இருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்களால் ஆதா யம் உண்டு. சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் சகோதரருடன் கருத்து வேறுபாடு, தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். பூர்விக சொத்தை மாற்றி புது வீடு, மனை வாங்குவீர்கள். கணவர் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார். ராகு சாதகமாக நிற்பதால் வேற்று மாநிலத்தவர்கள், மதத்தவர்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரனும், புத னும் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணம் வரும். ஏப்ரல் 9-ம் தேதி இரவு 8 மணி முதல் 11-ம் தேதி வரை அவசர முடிவுகளைத் தவிருங்கள். 12-ல் கேது இருப்பதால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில், புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமையுடன் செல்வாக்கும் உயரும்.

எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் நேரமிது.

ராசிபலன்கள்!

'எல்லோரும் நல்லவர்களே' என்று நினைக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் தடைகள் நீங்கும். புதிய யோசனைகள் பிறக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குரு வலுவாக இருப்பதால் அறிஞர்களின் நட்பு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். 8-ல் சூரியன் மறைந்ததால் காரிய தாமதம், உடல் உபாதை வந்து போகும். ராசிக்கு 12-ல் செவ்வாய் நிற்பதால் கோபத்தால் உடல்நிலை பாதிக்கப்படலாம். பாதச்சனி நடைபெறுவதால் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியா பாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிருங்கள். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

சமயோஜித புத்தியால் சாதிக்கும் காலமிது.

ராசிபலன்கள்!

மனக்கோட்டை கட்டும் நீங்கள், அதிகாரத்தைவிட அன்புக்கு அடி பணிவீர்கள்.

சுக்கிரனும், புதனும் 8-ல் மறைந்தாலும் சனியின் பார்வையை விட்டு விலகியதால் உங்கள் பலம் - பலவீனத்தை உணர்வீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். கணவர் நல்லபடியாக நடந்து கொள்வார். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். செவ்வாய் வலுவாக நிற்பதால் சகோதரிக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி தொடர வாய்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குரு 6-ல் நிற்பதால் மன உளைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். சூரியன் 7-ல் இருப்பதால் கணவருக்கு மருத்துவச் செலவுகள், திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள், அவமானங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

ராசிபலன்கள்!

யாருடைய சொந்த விஷயத்திலும் தலையிடாத நீங்கள், எல்லோரிடமும் பெருந்தன்மையாகப் பழகுவீர்கள்!

சூரியன் 6-ல் தொடர்வதால் எதிலும் வெற்றி அடைவீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த வங்கியிலிருந்து கடன் கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். தள்ளிப்போன வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் முகப்பொலிவு கூடும். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. வாக னத்தை மாற்றுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மாமனார், மாமியார் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் மறதி, சோர்வு, உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயரதி காரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

சிக்கல்களில் இருந்து விடுபடுவதுடன் புதிய பாதையில் பயணிக்கும் நேரமிது.


ராசிபலன்கள்!

ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எப்போதும் இதயத்தில்இருந்து பேசுவீர்கள்.

சுக்கிரன் 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மாமனார், மச்சினர் வகையில் உதவி உண்டு. 4-ல் குரு நிற்பதால் வீண்பழி, விரக்தி வரக்கூடும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. 5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளை களை நினைத்து வருந்த நேரிடலாம். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். புதனால் வீண் அலைச்சல், மன உளைச்சல் இருக்கும். பால்ய சிநேகிதிகளால் மன வருத்தம் உண்டாகலாம். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிதாக முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் இழந்த சலுகை களை மீண்டும் பெறு வீர்கள். புது வாய்ப்புகள் வரும்.

கடின உழைப்பால் வெற்றி பெறும் வேளையிது.

ராசிபலன்கள்!

சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள், அவ்வப்போது எதிர்மறையாக சிந்திப்பீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். நட்பு வட்டம் விரியும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சொத்து சேரும். பழைய சிக்கல்கள் தீரும். கணவ ருக்கு அலைச்சலுடன் ஆதா யமும் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியன் 4-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செல வுகள் குறையும். குரு 3-ல் நிற்பதால் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களைக் குறை கூறுவார்கள். வாழ்க்கையில் சிக்கனத்தை கடைபிடியுங்கள். செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் சகோதரர்களிடையே சச்சரவு வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

புது திட்டங்கள் நிறைவேறும் நேரமிது.

ராசிபலன்கள்!

யாரையும் காயப்படுத்தாமல் பேசும் குணம் கொண்ட நீங்கள், தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறுபவர்கள்.

2-ல் குரு நிற்பதால் தைரியம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுக மாக முடியும். வீடு வாங்கு வது, கட்டுவதற்கு லோன் கிடைக்கும். கணவர் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார். 3-ல் சூரியன் இருப்பதால் கடன் பிரச் னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். கண்டு கொள்ளாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 12-ல் ராகு நிற்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். அக்கம் பக்கத்தாருடன் இணக்கமாக செல்லவும். 7-ல் செவ்வாய் இருப்பதால் முன்கோபம், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். சகோதரர் கோபித்துக் கொள்ளக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சமங்களை சொல் லித் தருவார்.

புதிய முயற்சிகள் வெற்றி பேறும் வேளையிது.

ராசிபலன்கள்!

உள்ளன்று வைத்து புறமொன்று பேசாத நீங்கள், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென நினைப்பீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். ஆடை, ஆபரணம் சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக் கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். செவ்வாய் வலுவாக இருப்பதால் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த கணவர் வழி சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. ஜென்ம குருவும், அஷ்டமத்துச் சனி யும் நடப்பதால், கணவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி னால் பெரிதாக்க வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண் டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். இடமாற்றம் உண்டு.

எண்ணங்கள் ஈடேறும் நேரமிது.

ராசிபலன்கள்!

தீர்க்கமாகவும், திடமாகவும் முடிவுகளை எடுக்கும் நீங்கள், அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உடனடியாக பணவரவு ஏற்படும். பழைய சிநேகிதிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். மார்ச் 31-ம் தேதி காலை 9.30 மணி முதல் ஏப்ரல் 2-ம் தேதி மதியம் 3 மணி வரை வீண் விவாதங்களை தவிர்க் கப் பாருங்கள். கணவரின் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வாகனப் பழுது சரியாகும். மகளின் உயர் கல்வி நல்ல விதத்தில் அமையும். சகோதரி உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார். புதுத் தொழில் தொடங்குவீர்கள். வழக்கு காரணமாக இருந்து வந்த பயம் விலகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. பங்குதாரர்களின் எதிர்ப்பு அடங்கி விடும். உத்யோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த வேலைச் சுமை குறையும். சலுகைகளும், சம்பளமும் உயரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

போராட்டத்தில் வெற்றி பெறும் நேரமிது.

ராசிபலன்கள்!
 
ராசிபலன்கள்!
ராசிபலன்கள்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism