Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு 150
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு !

''விட்டமின்-ஏ, கேப்பிட்டலா... ஸ்மாலா?''

குட்டீஸ் குறும்பு!

என் மகன் விஜய் கிருஷ்ணாவுக்கு நான்கு வயதானபோது, அன்று வழக்கம்போல் சாப்பிடுவதற்கு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடம், ''இந்த கேரட் ஒரு வாய் வாங்கிக்கோடா. இதுலதான் 'விட்டமின்-ஏ' நிறைய இருக்கு'' என்றேன். ஒருகட்டத்தில் என் சமாதானத்துக்குப் பணிந்து சாப்பிட ஆரம்பித்தவன், ''அம்மா... கேரட்ல 'விட்டமின்-ஏ' இருக்குனு சொன்னீங்கள்ல... கேப்பிட்டல் ஏ-யா, ஸ்மால் ஏ-யா..?!'' என்று கேட்க, சிரிப்பை அடக்க முடியவில்லை எனக்கு.

அப்போதுதான் அவனுக்கு கிளாஸில் கேப்பிட்டல், ஸ்மால் லெட்டர்ஸ் சொல்லிக் கொடுத்திருந்தார்கள் என்பதால், இப்படி ஒரு ஸ்மார்ட் கேள்வி ஐயாவிடம்இருந்து!

- ஆர்.உமாமகேஸ்வரி, சென்னை-54

 

சனிக்கிழமை சர்க்கஸ்!

குட்டீஸ் குறும்பு!

எங்கள் ஊரில் சர்க்கஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ''இன்று மாலை, குழந்தையுடன் சர்க்கஸ் போகலாம்'' என்று பேசிக் கொண்டிருந்த நானும் என் கணவரும் வேறு வேலைகளுக்காக அதைக் கைவிட்டோம். இதில் முதல் அத்தியாயத்தை மட்டும் கேட்டுவிட்ட எங்களுடைய எல்.கே.ஜி. சின்னு, ''சர்க்கஸ் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே...'' என்று மாலையில் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். ''இன்னிக்கு சனிக்கிழமைடா. கூட்டம் ரொம்ப இருக்கும். டிக்கெட் கிடைக்காது'' என்று சமாளிக்கப் பார்த்தேன். உடனே, ''கம்ப்யூட்டர்ல (நெட்) புக் பண்ணலாமே'' என்று கேட்க, அவள் வயதுக்கு இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளே என்று வியந்த நான், ''சர்க்கஸ் கம்பெனி வெப் சைட் அட்ரஸ் தெரியாதேடா...'' என்றேன்.

உடனே கம்ப்யூட்டர் முன் சென்று அமர்ந்த சின்னு, ''அம்மா! new.circus.lion,tiger,elephant.... இதுதானே அட்ரஸ்..?!'' என்று என்று தன் மழலையில் கேட்க, ஒரு கணம் ஆச்சரியத்தில் அசந்து போன நான், அவளுடைய 'ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட்' பற்றி பூரித்து, முத்த மழை பொழிந்தேன்!

- ஜே.உமா, வடவள்ளி

போடா... போடி..!

குட்டீஸ் குறும்பு!

எங்கள் வீட்டு மூன்றரை வயது சமர்த்துக் குட்டி அது. அவ்வப்போது தான் கேட்கும் கேள்விகளால் எல்லோரையுமே திக்குமுக்காடச் செய்துவிடுவதில் கில்லாடி குட்டியும்கூட!

சமீபத்தில் வந்த Ôகந்தசாமி' படத்தின் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த சமர்த்து கேட்ட கேள்வி இதுதான்...

''நீங்க எங்கிட்ட யாரையும் 'போடா, போடி'னு எல்லாம் கூப்பிடக்கூடாதுனு சொன்னீங்கள்லம்மா..?! ஆனா, இந்தப் பாட்டுல அந்த ஆன்ட்டியும் அங்கிளும் மட்டும் 'போடா, போடி' சொல்றாங்க... அவங்க அம்மா அவங்கள திட்ட மாட்டாங்களா..?!'

- கே.சீதாலட்சுமி, திருநெல்வேலி

குட்டீஸ் குறும்பு!
 
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு