Published:Updated:

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.100
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

'பிள்ளை நிலா... இரண்டும் வெள்ளை நிலா!'

சுமார் 43 ஆண்டுகளுக்கு முன் நானும் என் இரண்டு குழந்தைகளும் எடுத்துக் கொண்ட படம். அப்போது பெரியவனுக்கு மூன்றரை வயது. சின்னவனுக்கு ஒன்றரை வயது. பெரியவன் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில், புகைப்படம் எடுப்பதற்காக வற்புறுத்தி அழைத்தோம். வேண்டா வெறுப்பாக வந்தவன், கோபம் குறையாத முகத்தோடு, என் மடியில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அழகைப் பாருங்கள். சின்னவனோ... எந்தக் கவலையும் இல்லாமல் போஸ் கொடுத்தான்.

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

இருவரும் வளர்ந்து, இன்று ஆலம் விழுதுகளாக நிற்கும் நிலையில், இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் பசுமையாக படர ஆரம்பித்துவிடுகிறது!

- சாவித்திரி விஸ்வநாதன், சென்னை-116

'புதிய வானம்... புதிய பூமி!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

சுவிட்சர்லாந்தில் என் மகன் பிஹெச்.டி படித்துக் கொண்டிருந்தபோது (2000-ம் ஆண்டு), அவனுடன் சேர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. அங்கு ஜெர்மனி நாட்டு எல்லையில் ப்ரோசென் (Frozen) என்ற ஆறு ஓடுகிறது. குளிர்காலத்தின்போது மொத்தமாக உறைந்து, கோடையில் உருகி ஓடும் அதிசய ஆறு இது. அதிக ஆழமும் அகலமும் கொண்ட இதன் அருகே பெரிய நீர் வீழ்ச்சியும் உண்டு. குளிர்காலத்தில் அந்த ஆற்றின் மீதே சிறுசிறு உணவு விடுதிகள் மற்றும் ஸ்நாக்ஸ், டீ, காபி, குளிர்பானங்கள் விற்கும் கடைகள் முளைத்துவிடும்... நம்ம ஊர் திருவிழா கடைகள் போல! கோடை மற்றும் குளிர் என இரண்டு பருவங்களிலும் இதன் அழகைக் கண்டு ரசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!

- தா.ஜேனட், தென்காசி

அச்சம் என்பது மடமையடா..!

சிங்கப்பூரில் உள்ள 'அண்டர் வாட்டர் வேர்ல்டு' என்ற இடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே மலைப் பாம்புடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். எல்லோரும் பயந்து நடுங்க, என் தம்பியின் மூன்று வயது மகன் முகிலன், படு கேஷுவலாக மலைப்பாம்பை கழுத்தில் மாட்டிக் கொண்டு, போஸ் கொடுத்தானே பார்க்கலாம்..!

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

''அட இந்த வாண்டே இத்தனை தைரியமா நிக்கறப்ப... நாம மட்டும் என்ன?'' என்றபடியே என் தங்கை கீதா, மெள்ள பாம்பை தொட்டுப் பார்த்தாள்... உள்ளூர நடுங்கியபடியே!

- வி.ராகிலா, சொக்கலிங்கபுரம்

'ஜிம்பலகா ஜிம்பலகா ஜிம்பக்கு ஜிம்பாலே!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

நான் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்த சமயம். எங்கள் பள்ளி ஆண்டு விழா, மயிலை டான்ஸ் அகாடமியில் நடந்தது. நான் 'பேம்பூ டான்ஸில்' கலந்துகொண்டேன். தரையில் இரண்டிரண்டு பேராக அமர்ந்து, பெரிய மூங்கில் கொம்புகளை கையில் பிடித்தபடி, இசைக்கேற்ப தரையில் தட்டுவார்கள். கட்டைகளின் இடைவெளியில் நாங்கள் கால்களை உள்ளேயும், வெளியேயும் மாறி மாறி வைத்து நடனமாட வேண்டும். தப்பாக ஆடி விட்டால் மூங்கில் கொம்புகளின் இடையில் கால் சிக்கிவிடும். இடமிருந்து வலம், மூன்றாவதாக இருப்பதுதான் நான்!

ஜாக்கிரதையா ஆடி, கைத்தட்டலை அள்ளிட்டோம்ல!

- ஜமுனா, சென்னை-56

'மரத்தை வெச்சவன்... தண்ணி ஊத்துவான்..!'

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!

சென்னை, திருவொற்றியூரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் என் மகன் கைலாஷ் சுந்தரம், காகிதப் பை போல் வேடமணிந்து பங்கேற்றான். பாலித்தீன் பைகளின் தீமையையும், காகிதப் பைகளின் நன்மையையும் எடுத்துக் கூறி, மேடையிலிருந்த அனைவருக்கும் காகிதப் பைகளை வழங்கினான். பிறகென்ன... அவனுக்குதான் முதல் பரிசு!

- எஸ்.நித்யகல்யாணி, சென்னை-16

சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் உங்கள் வீட்டுப் பரணிலும் இருக்கிறதா? எடுங்கள் அவற்றை. சம்பவங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். (குறிப்பு கடிதத்தில் உங்களின் முழு முகவரி, தொலை பேசி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம். புகைப்படங்களை கண்டிப்பாகத் திருப்பி அனுப்ப இயலாது).

முகவரி 'போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!'

அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002

போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
 
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
போட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு