பிரீமியம் ஸ்டோரி

காலேஜ் ஸ்டார் !
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் கேம்பஸ்

பூஞ்சோலை பக்கங்கள் !

திருவண்ணாமலை, கம்பன் பொறியியல் கல்லூரி மாணவியான பவித்ராவை நமக்கு அறிமுகப்படுத்தின அவங்க தோழிகள், "இவ எங்க காலேஜ் ஸ்டார் இல்ல"னு ஆரம்பிக்க, நிமிர்ந்து பார்த்தோம் நாம. "தி ஒன் அண்ட் ஒன்லி சன்!"னு வச்சாங்க ஒரு ஸ்டார்ட்டர் பன்ச்! ஸ்ஸப்பா.... முடியல!

காலேஜ் ஸ்டார்!

பேட்டியை ஆரம்பிக்கறதுக்கு முன்னால பி.டெக்., ஐ.டி. மூன்றாம் வருடம் படிக்கற பவித்ராவோட புரொஃபைல் பார்த்துடுவோமா..?! ஹை ஜம்ப்ல ஸ்டேட் சாம்பியன், கபடி, வாலிபால், தடகளம்னு ஸ்போர்ட்ஸ்ல ஆல் ரவுண்டர், பேச்சுப் போட்டி, என்.எஸ்.எஸ்., ஆர்.ஆர்.சி. (ரெட் ரிப்பன் கிளப்) கல்ச்சுரல்ஸ், படிப்புனு எல்லாத்துலயுமே பெஸ்ட் பெர்ஃபார்மர்!

பவித்ராவோட பேச்சு, ஃபாஸ்ட் ட்ராக் ஸ்பீட்!

"என்னோட சொந்த ஊர் ஆம்பூர். ரெண்டு அண்ணன்களுமே நேஷனல் லெவல் அத்லெடிக் பிளேயர்ஸ்ங்கறதால, சின்ன வயசுல இருந்தே எனக்கும் ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட். எங்க ஸ்கூல் உடற்கல்வி ஆசிரியரும் கடுமையா கோச்சிங் கொடுக்க... கலந்துகிட்ட போட்டிகள்ல எல்லாம் கப் வாங்கிட்டு வந்தேன்.

தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட எல்லா ஊர்களுக்கும் விளையாடப் போயிருக்கேன். ஆனா, 2005-ம் வருஷம் சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்துல ஹை ஜம்ப்ல ஸ்டேட் சாம்பியன் பட்டம் வாங்கினதுதான் எனக்கான ஸ்பெஷல் பூஸ்ட். ரொம்ப போராடி கிடைச்ச அந்த வெற்றிதான்... அடுத்தடுத்து தடதடனு என்னை ஓட வச்சுது - வெற்றிகளை நோக்கி. ஸ்டேட் லெவல்ல ஹை ஜம்ப், தடகளம்னு 25 தங்கப் பதக்கங்கள், 40 வெள் ளிப் பதக்கங்கள் வாங்கி குவிச்சிருக்கேன்.

லாங்க் ஜம்ப், ஓட்டப் பந்தயம், வாலிபால், ஜாவ்லின் த்ரோனு மத்த ஸ்போர்ட்ஸ்லயும் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்"னு நிறுத்தாம பேசற பவித்ரா, தமிழ் வளர்ச்சிக் கழகம், பெரியார் விழானு பல போட்டிகள்லயும் பரிசுகளைக் குவிச்சிருக்காங்க. இன்டர் காலேஜ் காம்படிஷன்கள்ல எல்லா போட்டிகளுக்கும் பெயர் கொடுத்து, அவங்க கல்லூரிக்கு பாயின்ட்டுகளை குவிச்சுக் கொடுக்கற சமர்த்துப் பெண் இவங்க. காலேஜோட ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல் இண்டிவிஜுவல் ரெண்டுலயும் சாம்பியன்... பவித்ராதான்.

"இப்படி பரிசுகளைக் குவிச்சாலும், என்.எஸ்.எஸ்-ஸுக்காக பக்கத்து கிராமத்துல இருந்து டார்ஜிலிங் வரைக்கும் போய் சேவை செய்யும்போது கிடைக்கற சந்தோஷமே தனிதான்!"னு நெகிழ்ற பவித்ராவுக்கு, பிடிக்காத ஒரே விஷயம்... பயம்!

"பெண் பிள்ளைங்கள அப்படி தைரியமா, தன்னம்பிக்கையோட வளர்க்கறதுல பெரும் பொறுப்பு, அம்மாவுக்குத்தான். அந்த வகையில எங்க அம்மா... சூப்பர் அம்மா!"னு சென்ட்டிமென்ட் டச் கொடுத்து முடிச்சாங்க பவித்ரா!

சூப்பரு!

- யா.நபீசா
படம் பா.கந்தகுமார்

காலேஜ் ஸ்டார்!
 
காலேஜ் ஸ்டார்!
காலேஜ் ஸ்டார்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு