Published:Updated:

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

பிரீமியம் ஸ்டோரி

இது கவுன்சிலிங் காலம்...
வெற்றிக்கு பாஸ்வேர்ட்!
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

உங்களுக்கு எந்த காலேஜில் இடம் கிடைக்கும் ?

பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தவேளையில், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

தமிழ்நாட்டில் மட்டும் 2009-ம் ஆண்டு கணக்கின்படி சுமார் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, மே மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. 'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' எனப்படும் கவுன்சிலிங் முறையில்தான் சேர்க்கை நடைபெறுகிறது என்பதால், மாணவர்கள் பலவகைகளிலும் தயாராக இருப்பது நல்லது. கவுன்சிலிங் நடைமுறை, அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் சுயநிதி (தனியார்) கல்லூரிகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தர வித்தியாசம்; சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் ஃபார்முலா என்று இவற்றில் தெளிவான விழிப்பு உணர்வு பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இல்லை என்பது வருத்தமான விஷயமே.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. சென்னையிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழகக் கண்காணிப்பின் கீழ்தான் தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன (நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நீங்கலாக) என்பதால், பொறியியல் கல்லூரிக்கான விண்ணப்பங்களை சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்குதான் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை பரிசீலித்து, கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். கட் ஆஃப் மதிப்பெண் என்பது, மேத்ஸ், பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரியில் ஒரு மாணவர் பெற்றுள்ள மதிப்பெண்களின் கூட்டு மதிப்பெண்ணை, இருநூறு மதிப்பெண்களுக்கு மாற்றும் சராசரி கூட்டுத்தொகை (உங்களுடைய மேத்ஸ் மதிப்பெண்களை இரண்டால் வகுக்கவும். பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி மதிப்பெண்களை தனித்தனியாக நான்கால் வகுக்க வேண்டும். கிடைக்கும் எண்களின் கூட்டுத் தொகைதான் கட் ஆஃப் மதிப்பெண்கள்).

இதன்படி, ஒரே கட் ஆஃப் மார்க்கில் நிறைய மாணவர்கள் இருக்கும்பட்சத்தில், அவர்களின் கம்யூனிட்டி, மேத்ஸ் மதிப்பெண், பிசிக்ஸ் மதிப்பெண், ஃபோர்த் ஆப்ஷனல் சப்ஜெக்ட் (மேத்ஸ், பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி போக நான்காவதாக பயாலஜி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் என நீங்கள் எடுத்திருக்கும் நான்காவது பாடம்), பிறந்த தேதி, மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு இருக்கும் ரேண்டம் நம்பர் (கட் ஆஃப் மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருக்கும்போது, தகுதி அடிப்படையில் கொடுக்கப்படுவது) ஆகிய அம்சங்களின் அடிப்படையிலும் அவர்களின் தகுதி ஆராயப்பட்டு, தரநிலை (ரேங்க்) நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்கள் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்

'சிங்கிள் விண்டோ சிஸ்டம்' எனப்படும் இந்த கவுன்சிலிங் முறையானது, ஒளிவு மறைவில்லாமல், வெளிப்படையாக மாணவர்களைச் சேர்க்கும் ஓர் உயரிய வழிமுறை. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள கோர்ஸ்களுக்கான காலியிட விவரங்களை, கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 'பப்ளிக் ஸ்க்ரீன்' மூலம் தெரிந்து கொள்வார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். பின்னர் தங்களுடைய ரேங்கைப் பொறுத்து, தாங்கள் விரும்பும் கல்லூரி, கோர்ஸை தேர்வு செய்வார்கள்.

கவுன்சிலிங் ஓ.கே! அடுத்து, கல்லூரிகளுக்கான தர முக்கியத்துவம் பற்றிப் பார்ப்போம். அதில் அண்ணா பல்கலைக்கழகம் டாப் மோஸ்ட் என்பது நாமறிந்ததே. அதற்கடுத்த தரவரிசையில்... 'அண்ணா பல்கலைக்கழகத்தின் கான்ஸ்டிடூயன்ட் காலேஜ்' என்றழைக்கப்படும், உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தன்னாட்சி கல்லூரிகள், அரசு தன்னாட்சி கல்லூரி, மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் (சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், காரைக்குடி, சென்ட்ரல் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி-சென்னை), அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி (தனியார்) பொறியியல் கல்லூரிகள்.

இந்தக் கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களின் ரேங்க், விருப்பத்தின் அடிப்படையில் இடம் கிடைக்கப் பெறுவார்கள். முதல் வரிசை ரேங்க் வைத்திருப்பவர்களுக்கு, முதல் வரிசை கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பது நடைமுறை. அத்தகைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பும் விரைவாகவும் தரமாகவும் இருக்கும்என்பதும் கண்கூடு.

இதில் கவனிக்க வேண்டியதொரு விஷயம், கல்லூரியின் தரத்தைப் பொறுத்து சிலபஸ் மற்றும் ரேங்கிங் சிஸ்டமும் (பர்சன்டேஜ், கிரேடு) மாறுபடும். இருந்தாலும், எந்த அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்தாலும், அந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்க் ஷீட் மற்றும் சர்டிஃபிகேட் ஆகியவை 'அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது' என்றுதான் இருக்கும். ஒருவிதத்தில் உங்களுடைய தகுதியை இது உயர்த்திக் காட்டும். ஆனால், வேலைக்கு எடுப்பவர்கள், நீங்கள் தனியார் கல்லூரிகளில் படித்தீர்களா என்பதை உங்கள் பர்சன்டேஜை வைத்துக் கணிக்க முடியும். எனவே, எந்தக் கல்லூரிகளில் படிக்கிறோம் என்பது மிக முக்கியம். அதாவது தரமான கல்லூரிகளில் படிக்கவேண்டும்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி என்ற வரிசையில் வரும் கல்லூரிகளில் நீங்கள் சேர வேண்டுமானால்... அதிகமான கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருக்க வேண்டும். இங்குள்ள பாடத்திட்டங்கள் தற்காலத்துக்கு ஏற்றாற்போல அட்வான்ஸ்டாகவும், லேட்டஸ்ட் அப்டேட்களுடனும் இருக்கும். கிட்டத்தட்ட இதேபோலத்தான் இருக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நடைமுறையும். பார்ப்பதற்கு இது கடினமாக தோன்றினாலும், இத்தகைய கல்லூரிகளில் படித்து முடித்து நீங்கள் வெளியே வரும்போதே அப்பாயின்ட்மென்ட் ஆர்டருடன்தான் வருவீர்கள். வாழ்த்துகள்!

@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
- மீண்டும் சந்திப்போம்...
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
@ வெற்றிக்கு பாஸ்வேர்ட்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு