Published:Updated:

வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !

வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !

பிரீமியம் ஸ்டோரி

வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !
வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !
வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !
வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !

'புராஜெக்ட், செமஸ்டர்னு பியூட்டி பார்லர் போறதுக்கெல்லாம் டைமே இல்லப்பா...' என்று பரபரப்பவராகவோ, 'ஆயிரமாயிரம் கொடுத்துதான் அழகா மாறணுமா..?' என்று அலுத்துக் கொள்பவராகவோ, 'பார்லர் போய்தாம்பா எனக்கு இன்னும் அதிகமா பிம்பிள் வந்துடுச்சு...' என்று குறைபட்டுக் கொள்பவராகவோ, 'நான் இதுவரை பார்லரே போனதில்ல... இனியும் போகமாட்டேன்...' என்று சபதம் எடுத்துவிட்டு, 'தெரியாத்தனமா வீரவசனம் பேசிட்டேனோ..?' என்று உள்ளுக்குள் மருகுகிறவராகவோ.... இப்படி யாராக இருந்தாலும் சரி... உங்களுக்காகவே 'வீட்டிலேயே பார்லர்' என்றபடி டிப்ஸ்களை வழங்குகிறார் திருவல்லிக்கேணி, சஹானா பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் மீனா கிருஷ்ணமூர்த்தி.

"அழகு நிலையத்துக்குச் செல்வது ஆடம்பரமான விஷயமில்லை. இப்போதைய உலகில் அது அவசியமான விஷயமாகிவிட்டது. இருந்தாலும், ஏதோ சில காரணங்களால் பார்லர் செல்ல இயலாதவர்கள், ஏதாவது விசேஷம், பார்ட்டி என்று வெளியே கிளம்புவதற்கு முன் வீட்டிலேயே இந்த எளிமையான 'மினி ஃபேஷியல்' செய்து கொள்ளலாம்...'' என்று ஆரம்பித்த மீனா, அதனை விளக்கினார்.

"மினி ஃபேஷியலுக்கு க்ளென்சிங் மில்க், மசாஜ் க்ரீம், ஸ்டீமர், ஸ்க்ரப், பேக் பவுடர் போன்றவை தேவைப்படும். கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் இவற்றையெல்லாம் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். முதலில் க்ளென்சிங் மில்க்கை முகத்தில் தடவி, முகத்தில் உள்ள அழுக்குகளை காட்டனால் துடைத்து எடுத்துவிட வேண்டும். பின் முகத்தில் மசாஜ் ஜெல் அல்லது மசாஜ் க்ரீமை தடவி, ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

அடுத்ததாக, ஸ்டீமர் போட்டு, அதன் ஆவியை முகத்தில் பிடிக்க வேண்டும். இப்போது, பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்களை, குறிப்பாக மூக்கு மற்றும் உதட்டின் ஓரங்களில் இருப்பனவற்றை அழுந்தத் தேய்த்தெடுத்தால்... சுலபமாக நீங்கிவிடும். பின் ஸ்க்ரப் பவுடரை முகத்தில் மெதுவாக ஐந்து நிமிடங்களுக்குத் தடவ வேண்டும். கடைசியாக, ஏதேனும் ஒரு 'பேக்'கினைப் போட்டு, காயவிட்டு அலசினால்... ஃபேஷியல் முடிந்தது!

'க்ளென்சிங் மில்க், ஸ்டீமர், ஸ்க்ரப்னு எல்லாம் ஏற்பாடு பண்ண முடியாதே...' என்று தயங்குபவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது... பால்! இங்கே இதுதான் க்ளென்சிங் மில்க்! பருக்கள் இருப்பவர்கள் காய்ச்சாத பாலையும், பருக்கள் இல்லாதவர்கள் காய்ச்சின பாலையும் பயன்படுத்துவது நலம். முதலில் பாலை பஞ்சில் நனைத்து, முகத்திலிருக்கும் அழுக்குகளைத் துடைத்து எடுத்துவிட வேண்டும். பின் ஏதாவது ஒரு மசாஜ் க்ரீமை அப்ளை செய்து, மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, சுடு தண்ணீர் வைத்து முகத்தில் வியர்க்க வியர்க்க ஆவி பிடித்துக் கொண்டால்... அதுதான் ஸ்டீமர்!

பிறகு, சர்க்கரை மாவு (சீனியை அம்மியில் வைத்து நைஸாக அரைத்தது) அல்லது அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஸ்க்ரப். இதை முகத்தில் மெதுவாக தடவியபின், கடலை மாவு, பயத்த மாவு, முட்டையின் வெள்ளைக் கரு, கோதுமை இதில் ஏதேனும் ஒன்றை முகத்தில் குழைத்துப் போட்டுக் கொண்டால்... அதுதான் பேக்!'' என்று ஈஸி ஃபேஷியல் டிப்ஸ் கொடுத்த மீனா, முகத்தை 'பளபள'வாக்க வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய இன்னும் சில பியூட்டி டிப்ஸ்களையும் வழங்கினார்.

"வாரம் ஒரு தடவை ஏதாவது ஃபேஸ் பேக் போட்டுக் கொள்வது நல்லது. கடலை மாவு, பயத்த மாவு, முட்டையின் வெள்ளைக் கரு, கோதுமை மாவு, பழங்கள், முல்தானிமட்டி என்று ஏதாவது ஒன்றை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தலாம்.

வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !

ஏதேனும் ஒரு பழத்தினை நன்றாக மசித்து, அதனுடன் முல்தானிமட்டி, கொஞ்சம் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி, கொஞ்ச நேரம் கழித்து கழுவுங்கள். பிறகு, ஆவி பிடித்துவிட்டு, கடலை மாவு பேக் போட்டு காய்ந்த பின்னர் கழுவுங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.

இரண்டு உருளைக்கிழங்குகளை தோலோடு அரைத்து, இன்னுமொரு உருளைக்கிழங்கினை ஸ்லைசாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஸ்லைஸ்களாக எடுத்து, அரைத்து வைத்துள்ள கிழங்கை அதில் தடவி, முகம் முழுவதும் ஒட்டினாற்போல வைத்துவிடுங்கள். 'பளிச்'சாகும் முகம்.

கண்களில் கருவளையம், கழுத்தில் கறுப்பு படர்ந்தவர்கள், விட்டமின்-ஈ கேப்ஸ்யூல்ஸ் வாங்கி, அந்த கேப்ஸ்யூல்ஸின் உள்ளிருக்கும் எண்ணெயை கண்களைச் சுற்றிலும், கழுத்திலும் அப்ளை செய்தால், கருமை மறையும்.

எண்ணெய் வாகான சருமம் கொண்டவர்கள் கோதுமை மாவுடன், காய்ச்சாத பாலைக் கலந்து, அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதை தினமும் செய்து வந்தால் முகத்தில் ஆயில் கன்ட்ரோல் ஆகும்.

பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் நீங்குவதற்கு பச்சரிசி மாவுடன் தண்ணீர் கலந்து, அவை இருக்குமிடங்களைச் சுற்றிலும் போட்டு, பின் அரை மணி நேரம் காயவிட்டுத் துடைத்தெடுங்கள். ஹெட்ஸ் நீங்கும்.

வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !

கை, கால், கன்னம் என தேவையில்லாத ரோமம் அப்பிக் கிடப்பவர்கள், குப்பைமேனி இலையை மஞ்சள்தூளுடன் அரைத்து தடவி, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். அல்லது வெள்ளைக் கருவுடன் சர்க்கரை, மைதாவை கலந்து நன்றாகக் கலக்கி, தடவி, அரை மணி நேரம் காயவிட்டு உறித்தெடுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால்... முடி வளர்வது கட்டுப்படுவதுடன், முடி வேருடன் உதிர்ந்துவிடும்!"

ம்ம்ம்... இனி வீடே பார்லர்.... நீங்களே ப்யூட்டிஷியன்!

- செ.மனோ, படங்கள் து.மாரியப்பன்
மாடல்கள் சந்தியா ரவி, சந்தியா

வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !
 
வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !
வீடே பார்லர்....நீங்களே பியூட்டிஷியன் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு