பிரீமியம் ஸ்டோரி

ஃப்ளாஷ்பேக்!
ஒவ்வொன்றுக்கும் பரிசு 150
ஃப்ளாஷ்பேக்!
ஃப்ளாஷ்பேக்!
தோழிகள் வைத்த போக்கிரி பொங்கல்!
ஃப்ளாஷ்பேக்!

கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்திருந்த எங்களுக்கு, அன்றைய தினம் மன்த்லி டெஸ்ட். பெல் அடித்ததும் அவரவர் இருக்கையில் டென்ஷனாக உட்கார்ந்து விட்டோம். வினாத்தாளை ஆசிரியை கொடுத்துக் கொண்டிருக்க... கையில் வாங்கிய அனைவரிடமும் சலசலப்பு. 'ஐயோ! அவுட் ஆஃப் போர்ஷன்' (Out of portion) போல என்று பயந்து கொண்டே வாங்கிப் பார்த்தால்... வினாத்தாளே வேறு ஒரு பாடத்துக்கு உரியது. முடிந்தவரை வினாக்களை ஊடுருவி விட்டு (அடுத்த எக்ஸாம் அதுதானே... எப்பூடி!), "மேம், கொஸ்டீன் பேப்பரை மாத்திக் கொடுத்திட்டீங்க" என்றோம் கோரஸாக. அவரோ... "இல்லையே, இன்னிக்கு இந்த எக்ஸாம்தானே" என்று வைத்தார் வேட்டு (இப்பூடி!). மூளையைக் கசக்கி பிழிந்து ஒருவழியாக எழுதி முடித்தோம். வெளியில் வந்ததும் நோட்டீஸ் போர்டு டைம்டேபிளை பார்த்தபோதுதான் தெரிந்தது... அதை தப்பாக காப்பி பண்ணி கிளாஸ் போர்டில் எழுதிய விஷயம். அதை எழுதியது அடியேன்தான். அதனால், அன்று 'போக்கிரி பொங்கல்' கொண்டாடிவிட்டனர் தோழிகள்!

- ஜுமானா ஜுல்ஃபிகார், கீழக்கரை


பரஸ்பர உதவியும்... பந்தாடிய தலைவலியும்!

ஃப்ளாஷ்பேக்!

பள்ளியில் 'வாயாடி' என்று பெயரெடுத்த தோழி, கல்லூரியிலும் (பி.ஏ. சோஷியாலஜி) என்னுடன் படிக்க வந்துசேர்ந்தாள். அவளுக்கு பட்டப் பெயர், 'வாய்க்கொழுப்பு வனஜா'. முதல் நாள் பாடம் எடுத்த லெக்சரர் "நாம் எல்லோருக்கும் உதவவேண்டும். நாம் பிறவியெடுத்ததே பிறருக்கு உதவுவதற்காகவே!" என்று துவக்கினார்.

வா.கொ.வனஜா கேட்டாள். "அப்போ பிறரெல்லாம் எதுக்கு பிறந்தாங்க, மேடம்?"

"அது.. வந்து... அவங்க வேறு யாருக்காவது உதவுவாங்க..."

"ஏன் மேடம் நாம அவங்களுக்கு உதவினா, அவங்க நமக்கு உதவக்கூடாதா?"

"ஓ.. அப்படியும் வெச்சுக்கலாமே!"

"அதாவது மேடம், உதாரணமா... வெஜிடேரியனான நான், வேற ஒருத்தருக்கு என்.வி. சமைச்சுத் தந்தா... அவங்க எனக்கு வெஜ் சமைச்சு உதவி செய்வாங்க... அப்படித்தானே மேடம்?"

"அது.. வந்து..."

"தலையெழுத்தா மேடம் எனக்கு? என் சாப்பாட்டை நானே சமைக்கிறேன். அவ சாப்பாட்டை அவளே சமைக்க வேண்டியதுதான். எதுக்கு இந்த பரஸ்பர உதவியும்... தொல்லையும்?"

மேடத்துக்கு தலைவலி வந்து, கிளாஸைவிட்டே சட்டென்று கிளம்பிவிட்டார்!

- ஆர்.மாலதி, சென்னை-106

ஃப்ளாஷ்பேக்!
 
ஃப்ளாஷ்பேக்!
ஃப்ளாஷ்பேக்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு