Published:Updated:

படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?

படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?

பிரீமியம் ஸ்டோரி

கொஸ்டீன் ஹவர்
படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?
படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?
"படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?"

படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?

"பி.பி.ஏ., இரண்டாம் வருடத்தில் நுழைய இருக்கும் எனக்கும், என் தோழிகளுக்கும், கல்லூரி வேலை நேரம் மதியத்தோடு முடிந்து விடுகிறது. அதன்பிறகு, நிறைய ஓய்வு கிடைக்கிறது. அதை எப்படி பயனுள்ளபடி கழிப்பதென்று தெரியவில்லை. டிகிரி முடிக்கும்போது வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், கம்ப்யூட்டர் கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் போல நடைமுறையில் பயனளிக்கும் மற்ற பயிற்சிகள் பற்றி விளக்க முடியுமா..?"

ஆர்.ஜெயலட்சுமி, விருதாச்சலம்

எம்.ராபின்சன், உதவிப் பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி

"கிடைக்கும் நேரத்தை பயனுள்ளபடி கழிக்க முடிவெடுத்துள்ள உங்கள் குழுவுக்கு முதலில் வாழ்த்துகள். போட்டி உலகில் வெறும் டிகிரி என்பதைவிட, கல்லூரி படிப்போடு, இணையாக கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வதுதான் தனித்துவம் தரும். அதேசமயம், கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்துக் கொள்வதும் முக்கியம்.

புற்றீசல் போல் பெருகியிருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களில் வெறுமனே சேர்ந்து, ஏதாவது ஒரு கோர்ஸ் படிப்பது என்பதைவிட, உங்களது கல்லூரிப் படிப்பை ஒட்டிய கம்ப்யூட்டர் கோர்ஸ்களை செலக்ட் செய்வதே நல்லது. எந்த டிகிரியானாலும் தற்போதைய கல்லூரிப் பாடத் திட்டத்திலேயே அடிப்படை கம்ப்யூட்டர் கல்வியும் உள்ளடங்கி இருக்கிறது. எனவே, சிறப்பு கம்ப்யூட்டர் கோர்ஸ்களை மட்டும் கவனித்து செலக்ட் செய்யவும்.

தொழில் சார்ந்த படிப்புகளாகவும், புராஜெக்ட் வொர்க் மற்றும் பிராக்டிகலுக்கு முக்கியத்துவம் அளிப்ப தாகவும், அங்கு பெறப்படும் சான்றிதழ்கள் அங்கீகாரம் பெற்றவையாகவும் இருப்பது நல்லது. உதாரணத்துக்கு, 'கேட்', 'கேம்' படிப்புகள் மற்றும் மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, சன், ஐ.பி.எம்., ஆரக்கிள், நாவல் போன்ற கம்ப்யூட்டர் ஜாம்பவன்களின் சர்டிஃபிகேஷன் கோர்ஸ்களை படிக்கலாம். இவற்றை வெளி நிறுவனங்களில் சேர்ந்தும் படிக்கலாம். அல்லது உங்களின் கூட்டு முயற்சியால் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி, அல்லது லைப்ரரி, லேப் என்று ஒரு பொது கம்ப்யூட்டர் உதவியுடன் கல்லூரியில் கிடைக்கும் குறிப்பு உதவி நூல்களை வைத்தும் படிக்கலாம். இணையப் பெருவெளியில் இதற்கான ஸ்டடி மெட்டீரியல்ஸ் மற்றும் இலவச ஆன்லைன் தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. இவையெல்லாம் பொருளாதார ரீதியில் கைகொடுக்கக் கூடியவை. சாஃப்ட்வேர் படிப்பதோடு... கூடுதலாக ஹார்ட்வேர் படிப்புகளையும் சேர்த்துக் கொள்வது உங்களது சி.வி-யை (C.V-curriculum vitae) மதிப்புள்ளதாக்கும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் மேற்படிப்பைத் தொடர விரும்புபவர்கள் வெறுமனே ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளோடு நின்றுவிடாமல், அதற்கான தகுதித் தேர்வான டோஃபல் (TOEFL), ஐ.இ.எல்.டி.எஸ். போன்றவற்றுக்கான பயிற்சிகளை பெறுவது நல்லது. வெளிநாட்டு மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான GRE, GMAT, SAT போன்றவற்றுக்கான பயிற்சிகளையும் பெறலாம்.

படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?

ஆங்கிலம் மட்டுமல்ல... ஃபிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானீஸ் என்று ஏதாவதொரு சர்வதேச மொழியையும் கற்றுக்கொள்ளலாம். பரந்துபட்ட உலகமயமாக்கலில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை 'எம்.என்.சி'யாக முன்னிறுத்துவதால் கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது. தவிர, இந்தி கற்றுக்கொள்ள மத்திய அரசே இலவச தபால் வழி படிப்புகளை நடத்துகிறது. தேர்வுக் கட்டணம் தவிர, அனைத்தும் இதில் இலவசம். இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிகிரி முடித்ததும் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. போன்ற போட்டித் தேர்வுகள் மூலம் வேலை வாய்ப்புக்குத் திட்டமிடுபவர்கள்... இப்போதிருந்தே அதற்கான பயிற்சியையும் கல்லூரிப் படிப்புக்கு இணையாக மேற்கொள்ள வேண்டும். இப்போதிருந்தே அதற்கான பயிற்சி நிறுவனங்களின் உதவியையும் நாடலாம்.

அனைத்து மாணவர்களின் தொழிற்கல்வித் தகுதிக்காக, கல்லூரியில் டிகிரி படித்துக்கொண்டே பாலிடெக்னிக் படிப்பையும் ஒருசேர படிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. உங்களது கல்லூரி படிப்பை ஒட்டிய அல்லது உங்களது ஆர்வத்தை ஒட்டிய ஒரு தொழிற்படிப்பை தேர்ந்தெடுத்து ஒருசேர படிப்பதன் மூலம் பயன் பெறலாம்.

உங்களது தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்ள கோர்ஸ்களில் சேர்ந்துதான் பலனடைய வேண்டும் என்பதில்லை. பகுதி நேரப்பணி ஒன்றில் சேர்வதன் மூலமும் தகுதி மற்றும் வருமானம் என இரட்டை ஆதாயங்களைப் பெறலாம். இன்ஷுரன்ஸ், பரஸ்பர நிதி மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளை ஒட்டிய சிறு தேர்வுகளை எழுதி, அங்கீகாரத்துடன் உங்களை பதிவு செய்து கொள்வதன் மூலம், ஓய்வு நேரத்தில் குறிப்பிட்ட வருமானம் பார்க்க முடியும்.

உதாரணத்துக்கு, இன்ஷுரன்ஸ் நிறுவன ஏஜென்டாக விரும்பினால், ஏதேனும் ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் உங்கள் பகுதி கிளையை அணுகுங்கள். அவர்களே பயிற்சி, தேர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். உங்கள் ஏரியாவிலிருக்கும் சுய உதவிக் குழுக்கள், ஆடிட்டர் அலுவலகம் போன்றவற்றையும் அணுகி, பகுதி நேர வேலை வாய்ப்பையும் அதற்கான பயிற்சியையும் பெறலாம்.

துடிப்பான ஆர்வம், குறைந்த சம்பளம், புதிய யோசனைகள் என நிறுவனத்துக்கும் அனுகூலங்கள் கிடைப்பதால், உங்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொள்ள முன்னுரிமை தருவார்கள். உங்கள் படிப்பை ஒட்டியே இந்த பகுதிநேரப் பணி மற்றும் பயிற்சி இருக்க வேண்டும் என்பதையும், இவற்றால் உங்களது படிப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அடுத்ததாக, ஒரு மாணவர் தன்னுடைய தனித் திறமைகள் மற்றும் ஈடுபாட்டைப் பொறுத்தும், திறமை களை வளர்த்துக்கொள்ளவும், கூடுதல் படிப்பு பயிற்சிகளைப் பெறலாம். உதாரணத்துக்கு சென்னை, லயோலா கல்லூரியில் 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்'டில் ஒரு வருட மற்றும் மூன்று மாத பயிற்சி வழங்கப்படுகிறது. இதுதவிர, பத்து நாட்களே நடைபெறும் பயிற்சி பட்டறைகளையும் வழங்குகிறது. இந்தப் பயிற்சிகளைப் பெற சொற்ப கட்டணமே வசூலிக்கப் படுவது சிறப்பம்சம்.

மாஸ் கம்யூனிகேஷன், பேங்கிங், அக்கவுன்டிங், பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், தடயவியல், விளம்பரத்துறை, டூரிஸம், தியேட்டர் வொர்க்ஷாப், கவுன்சிலிங், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் போன்ற 'ஆட்-ஆன்' கோர்ஸ்களும் பல்வேறு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இவற்றில் சேர்ந்தும் உங்கள் தகுதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம்."

படிப்பு, வேலை வாய்ப்பு, கன்சல்டன்ஸி நம்பகத்தன்மை, நேர்காணல்கள், நுழைவுத் தேர்வுகள், அரசுப் போட்டித் தேர்வுகள், பகுதி நேர வேலை விவரங்கள், மாடலிங் வாய்ப்புகள், 'பியூட்டி கொர்ரி’க்கள், மனவியல் குழப்பங்கள், காதல் சிக்கல்கள், நட்பு துரோகங்கள், இணைய தளம் மூலமாக வரும் பிரச்னைகள்... என்று மாணவ சமுதாயத்தின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை தருகிறோம் இங்கே... விளக்கமாக! கேளுங்கள்... காத்திருக்கிறோம்!
படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?
 
படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?
படிக்கும்போதே வேலைக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்வது எப்படி ?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு