பிரீமியம் ஸ்டோரி

ஃபீலிங்... ஹீலிங்!
சி.ஆர்.எஸ். 14
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
என்னைக் காதலிக்க யாருமே இல்லையே ?!
ஃபீலிங்.. ஹீலிங்...!

இந்த சினிமாக்கள் காதல் வசப்படும் பெண்களை தேவதைகளாக கொண்டாடுகின்றன. அப்படியெனில், காதல் வாசமே நுகராத பெண்கள் தேவதைகளாக தகுதியற்றவர்களா..?! 'எனக்கும் ஒரு காதல் வாய்க்காதா?' என்ற ஏக்கத்தில் இருக்கும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? வர்ஷினியை (பெயர் மாற்றப் பட்டுள்ளது) பார்க்கும்வரை நான் அறியவில்லை.

"ஒண்ணு... எதுக்கெடுத்தாலும் கோவத்துல கத்தறா டாக்டர். இல்லைனா, எப்பவும் உம்முனு இருக்கா..."

- இதுதான் அவளைப் பற்றி, அவளுடைய அம்மா என்னிடம் கூறிய கம்ப்ளெயின்ட்.

ஒன்றல்ல, இரண்டல்ல... நான்கைந்து சிட்டிங்குகள் பேசிப் பேசித்தான் பிரச்னையை அறிய முடிந்தது. அவள் பாதிக்கப்பட்டிருந்த ஃப்ளாஷ்பேக் இதுதான் ...

சிறுவயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட, தாயிடமே வளர்ந்தவள் வர்ஷினி. ஒரு ஆணின் அன்பு, அக்கறை, கண்டிப்பு, குதூகலம்... இதெல்லாம் எப்படியிருக்கும் என்று அறிந்திருக்கவில்லை. மாமா, தாத்தா, சித்தப்பா போன்ற ஆண் சொந்தங்களிடம்கூட, 'நல்லா இருக்கேன்', 'நல்லா படிக்கறேன்' போன்ற நல விசாரிப்பு பழக்கம் மட்டுமே.

பெண்கள் பள்ளியில் படித்துவிட்டு கோ-எட் கல்லூரியில் சேர்ந்தவள்... அங்கே தன் சில தோழிகளும் நண்பர்களும் காதலர்களாகி கசிந்துருகியதை கண்டபோது, 'நானும் காதல் கொள்ள வேண்டும்; காதலிக்கப்பட வேண்டும்' என்று ஆசையோட்டத்தை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டாள்.

'உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன் தெரியுமா?', 'இந்த பிங்க் சுடிதார் உனக்கு சூப்பர்பா...', 'ரெண்டு நாள் ஊருக்குப் போறியா... நோ சான்ஸ். உன்னப் பார்க்காம என்னால இருக்க முடியாது...' என்றெல்லம் ஓர் ஆண் மகனால் தானும் கொண்டாடப்பட வேண்டும் என்று மனது ஏங்கியது. விளைவு... காதல் வைத்துக் காத்திருந்திருக்கிறாள்.

ஆனால், அவளிடம் எந்தப் பையனும் 'ப்ரபோஸ்' பண்ணவில்லை. அட்லீஸ்ட் யாரும் அவளை 'சைட்' அடிப்பதாகக்கூட அவளுக்குத் தோன்றவில்லை. 'மூக்கும், முழியும், நிறமுமாக இருக்கும் பெண்கள் பின்னால்தான் தனுஷ்களும், சிம்புக்களும் சுற்றுவார்களா..? கொஞ்சம் மாநிறமாக, அளவான உயரத்துடன், கட்டை முடியுடன் இருக்கும் என் மேல் இறுதிவரை யாருக்கும் காதல் வராதா..?' என்று தவித்திருக்கிறாள்.

விளைவு, ஏதாவது ஒரு விக்கெட் விழுந்துவிடாதா என்று அடர் நிற லிப்ஸ்டிக்கும், உடலைப் பிடிக்கும் உடைகளுமாக மாறிப் பார்த்திருக்கிறாள். ஆனால், அவளின் வித்தியாசத்தை கவனித்த அவள் வகுப்பு பையன்களோ... இன்னும் ஒதுங்கிப் போக, மேலும் வெதும்பிப் போனாள் வர்ஷினி. தாழ்வு மனப்பான்மையில் சோர்ந்து, தனக்குள்ளேயே அழுதிருக்கிறாள். பின் தன் சோகத்தை கோபமாக மாற்றி, வெறுப்பு மண்டி, கல்லூரி, வீடு என்று எங்கும் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டவள், தன்னிலை இழக்கும் சமயத்தில்தான் என்னிடம் அழைத்து வரப்பட்டாள்.

கதையைக் கேட்டபின், வர்ஷினி காதல் ஆசையில் பித்தேறி இருக்கிறாள் என்று நினைத்தால், அது தவறு. வயசுக் கோளாறும் இல்லை. அவள் தனக்கான அடையாளத்தை, அங்கீகாரத்தை தேடுகிறாள் என்பதுதான் அவள் பிரச்னையின் மனோதத்துவ புரிதல். 'எந்த ஆணாலும் காதலிக்கப்படாத பெண், பெண்ணாக இருப்பதற்கே தகுதியற்றவள்' என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து, இப்படி இயல்பு மாறிபோயிருக்கிறாள்.

ஏகப்பட்ட கவுன்சிலிங், ட்ரீட்மென்ட்டுகள் என்று தேற்றிய போதும் பலன் பாதிதான். அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யச் சொன்னோம். அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்றாலும், வந்த மணமகன் உலகப் பொது விதிப்படி தன் மனைவியாகிய வர்ஷினியின் அன்புப் பிடிக்குள் சரண்டராக, இன்று அழகான ஒரு வாழ்க்கை வாழ்கிறாள் வர்ஷினி.

கமல் ஸ்டைலில் சொல்வதென்றால், ஹார்மோன்களின் கலாட்டாதான் காதல். அது உங்கள் அன்பு, அழகு... ஆகியவற்றுக்கான அங்கீகாரம் அல்ல!

ஃபீலிங்.. ஹீலிங்...!
- ஃபீல் பண்ணுவோம்...
ஃபீலிங்.. ஹீலிங்...!
ஃபீலிங்.. ஹீலிங்...!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு