Published:Updated:

'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?

'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?

பிரீமியம் ஸ்டோரி

'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய்...?'
'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?
'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?
'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?

வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்ற பாடல் வரிகளை உச்சரித்ததைவிட...

சமீபகாலமாக டெலிவிஷன் சேனல்கள் அதிகமாக உச்சரித்த வாக்கியம்... 'சானியா மிர்ஸாவுக்கும் சோயப் மாலிக்குக்கும் கல்யாணம்' என்பதாகத்தான் இருக்கும்!

இந்தியாவின் டென்னிஸ் ராக்கெட் சானியா- பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரின் திருமணம், பலவித 'திக் திக்' திருப்பங்களோடு நடந்து முடிந்திருக்கிறது!

'பாகிஸ்தான் பையனா? இந்தியாவில் சானியாவுக்கு ஒரு மாப்பிள்ளையும் கிடைக்கவில்லையா... இல்லை, யாரையுமே பிடிக்கவில்லையா...?', 'திருமணத்துக்குப் பின் சானியா இந்தியாவுக்காக விளையாடுவாரா, பாகிஸ்தானுக்காக விளையாடுவாரா..?' என்றெல்லாம் எழுந்த க்ராஸ் கேள்விகளுக்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத சானியா, இறுதியாக வெட்கத்துடன் கழுத்தில் மணமாலையை வாங்கிக் கொண்டார்.

ஹைதராபாத் மாநகரிலிருக்கும் பிரபல 'தாஜ் கிருஷ்ணா' ஹோட்டலில்தான் தற்போதைய திருமண பைவம் நடந்தேறியது. இதே ஹோட்டலில்தான்... புதுமணத் தம்பதியின் கடந்த கால வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன! இந்தத் திருமணத்துக்கு முன், பள்ளியில் தனக்கு ஒரு வயது சீனியரான ஷோரப் மிஸ்ராவை திருமணம் செய்வதாக சானியா நிச்சயித்தது, இதே ஹோட்டலில்தான். பிறகு, 'இது சரிப்பட்டு வராது!' என்று இருவருமே திருமணத்தைக் கைவிட்டனர்.

ஏற்கெனவே ஆயிஷா என்ற பெண்ணுடன் தனக்கு நடைபெற்ற திருமணத்தை முதலில் மறைத்து, வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஒப்புக்கொண்டு, விவாகரத்து செய்த சோயப் மாலிக், 2002-ம் ஆண்டு ஆயிஷாவுடன் இதே ஹோட்டலில்தான் தங்கியிருந்தாராம்.

இதையெல்லாம் தன் நினைவில் இருந்து தூர எறிந்துவிட்டு, கடந்த 15-ம் தேதி சானியா - சோயப் திருமணத்துக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டது 'தாஜ் கிருஷ்ணா' ஹோட்டல்.

திருமணத்துக்கு என்ன உடை உடுத்துவார் சானியா என்பதுதான், அன்றைய தினத்தின் டாப் மோஸ்ட் எதிர்பார்ப்பு! காரணம்... டென்னிஸையும் தாண்டி, ஒரு ஃபேஷன் அம்பாஸடராகவும் மீடியாக்களால் கவனிக்கப்பட்டவர் சானியா என்பதுதான்!

'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே உலக டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியலில் தனி இடம் பிடித்தவர் சானியா. இந்த ஒரு காரணத்துக்காகவே இந்தியாவின் மிடில் கிளாஸ் பெண்கள் பலருக்கும் உதாரண ஸ்திரீயாக அவர் உருவெடுத்தார். சானியா மூக்கில் வளையம் அணிந்தால், இந்தியாவின் இளம் பெண்களின் மூக்கிலும் வளையம் சுற்றிக்கொண்டது. சானியாவின் ஆட்டத்தைவிட, அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், வெளிநாட்டு பெண்கள் மத்தியில்கூட பிரபலமானது.

அவர் பட்டையாக கண்ணாடி அணிந்தால், அதுவும் ஃபேஷனாகிப்போனது. அந்த 'ஜீரோ பவர்' டிஸைன் கண்ணாடிகளுக்கு, 'சானியா ஸ்பெக்ஸ்' என்ற பெயரே நிலைத்தது. வெளி, விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவர் அணிந்து வந்த உடைகள் அவரை இன்னும் கவனிக்க வைத்தது. இப்படி பேஷனுக்கு அத்தாரிட்டியாகவே மாறிவிட்ட சானியாவின் திருமண உடை பற்றி ஆவல் எழுவதில் ஆச்சரியம் இல்லைதானே?!

பாரம்பரிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு சிவப்பு நிறப் புடவை... இதுதான் சனியாவின் முகூர்த்த உடை! 'எழுபத்தி ஐந்து லட்ச ரூபாய் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது சனியாவின் திருமண உடை' என்று ஏற்கெனவே பரவியிருந்த செய்தியால், அந்தச் சிவப்பு புடவையைப் பார்த்து பரவசமாகி, 'இது எங்கு நெய்தது, யார் இந்தப் புடவைக்கு டிசைனர், எவ்வளவு ரூபாய்...?' என குறிப்பெடுக்க காத்திருந்தது மீடியா. ஆனால், சானியா அணிந்திருந்தது அவருடைய அம்மாவின் திருமணப் புடவையைத்தான் என்றதும் அனைவருக்குமே Ôசப்Õபென்றாகிப்போனது. ஆனால், 'இது என் சென்ட்டிமென்ட்டுகாக..!' என்று புன்னகைத்தார் சானியா!

முகூர்த்தம் தவிர, ரிசப்ஷன், நலங்கு (மெஹந்தி வைபவம்), சங்கீத் (நலங்கு பாட்டு) என பிற திருமண நிகழ்வுகளுக்கு சானியாவின் உடைகளை டிசைன் செய்யும் பொறுப்பு, டெல்லியின் புகழ் பெற்ற டிசைனர்களான ஷாந்தனு - நிகில் என்ற இரட்டையர்களுக்கு! அமிதாப், ஷாரூக், ஷில்பா ஷெட்டி, பிபாஸா பாஸ§ என்று பாலிவுட் ஸ்டார்கள் பலருக்கும் டிரெஸ் டிசைன் செய்பவர்கள் இந்த இரட்டையர்கள், ''சோயப்பின் ஷெர்வானியை அடக்கித்தான் வாசித்திருக்கிறோம். காரணம், அவருக்குப் பிடித்தது பாரம்பரியமான டிரெஸ்தான். சானியா அப்படியில்லை. அவர் ஒரு புதுமை விரும்பி. மென்மையான கலர்களைத்தான் அவர் விரும்புவார். சானியாவின் ஆடைகளில் மொகலாய வேலைப்பாடுகளை செய்திருக்கிறோம். பார்த்துவிட்டு பாராட்டுங்கள்'' என்றார்கள்.

மெஹந்தி வைபவத்துக்கு தனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற உடையில் வந்து, விரல் நுனி துவங்கி, வங்கி வரை மெஹந்தி வைத்துக் கொண்டார் அந்த பாகிஸ்தான் மருமகள்!

புயல் வேகம் பொதிந்திருக்கும் அந்த உள்ளங்கைக்குள் மிக அழகாகச் சிரித்தது மருதாணி!

- பி.ஆரோக்கியவேல்

'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?
 
'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?
'திருமணப் புடவையின் விலை 75 லட்ச ரூபாய் ..?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு