Published:Updated:

இனி எல்லாம் சுகப்பிரசவமே !

இனி எல்லாம் சுகப்பிரசவமே !

பிரீமியம் ஸ்டோரி

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
இனி எல்லாம் சுகப்பிரசவமே !
இனி எல்லாம் சுகப்பிரசவமே !
பகுதி 3
ரேகா சுதர்சன்

படங்கள் பொன்.காசிராஜன்

இனி எல்லாம் சுகப்பிரசவமே !

இனி எல்லாம் சுகப்பிரசவமே !

பொதுவாகவே பருவமடைந்த பெண் பிள்ளைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள், 'மல்லாந்து படுக்காதே', 'கையை ஊன்றி எழுந்திரிக்காதே...', 'சாயங்காலம் அரச மரத்தடி பிள்ளையாருக்கு விளக்கு போட்டு, சுத்தி வா...' என்றெல்லாம் அதட்டிக் கொண்டே இருப்பார்கள். காரணம், அவளை அடுத்த கட்டமான தாய்மைக்குத் தயார்படுத்தத்தான்.

ஒரு பெண்ணுக்கு, அவள் கர்ப்பமடைந்த பின் ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவதைவிட, திருமணத்துக்கு முன்பிருந்தே அப்படி வளர்ப்பது... அவளுக்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் பல வகைகளில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

'கர்ப்பமாக இருக்கும் பெண் மல்லாக்கப் படுக்கக் கூடாது. கொடி சுற்றிக் கொள்ளும்' என்பார்கள். இதற்கான அறிவியல் காரணம், தண்டுவடத்தின் வலது பக்கத்தில் செல்லும் பெருஞ்சிரை (Vena cava) எனப்படும் ரத்தநாளம் மிக நுட்ப மானது. இது மல்லாந்து படுக்கும் போது அழுந்துவதால் ரத்த ஓட்டம் குறைந்து, தாய்க்கு மட்டுமல்ல... வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஆக்ஸிஜன் குறையும். இதனால் சோர்வு உண்டாகும் என்பதாலேயே மல்லாந்து படுக்க வேண்டாம் என்பார்கள்.

அதேபோல 'கையை ஊன்றி சாப்பிடாதே, கையை ஊன்றி உட்காராதே' என்பார்கள். நாம் காலை மடக்கி உட்காரும்போது தன்னிச்சை யாக நம் கைகள் தரையில் ஊன்றிக் கொள்ளும். அப்போது நம் மொத்த உடம்பும் நேராக இல்லாமல் வளைந்து நிற்கும். அப்படி வளையும்போது வயிற்றில் இருக்கும் குழந்தை, அழுத்தத்துக்கு உள்ளாகும் என்பதாலும், அப்படியே உட்கார்ந்திருந்தால் இடுப்பு பகுதியிலும் முதுகிலும் வலி ஏற்படும் என்ப தாலும்தான் கையை ஊன்றி உட் கார 'தடா'!

மாலை நேரங்களில் கோயிலில் விளக்கேற்றி, சுற்றி வரச் சொன்னதற்குக் காரணம், காலாற நடப்பது புத் துணர்ச்சியை தரும், நல்ல பசி எடுக்கும், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஹார்மோன் சுரப்பிகளினால் வரும் தூக்கமின்மையைத் தவிர்க்கும் என்பதற் காகவே.

இனி எல்லாம் சுகப்பிரசவமே !

இப்படி நம் மூத்தோர் சொன்ன விஷயங்கள் பலவற்றில் நன்மைகள் பல இருந்தன. இந்த யோசனைகள், அறிவுரைகள் எல்லாம் வீட்டு வேலைகளாக, ஆசனங்களாக, யோக முத்திரைகளாக, பிரணாயாமமாக நம் இந்திய கலாசாரத்தில் ஊறிய விஷயங்கள்தான். ஆனால், இன்றைக்கு மேலை நாடுகளில் அறிவியல்பூர்வமாக இதை நிரூபிக்கிறார்கள். அதைக் கேட்டதுமே... நமக்கு ஆச்சர்யம் பொங்குகிறது. 'ஆகா, அமெரிக்காவிலேயே சொல்லிவிட்டார்கள்' என்று அவர்களை பெருமையோடு பார்க்கிறோம். பாட்டி, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா என்று சுற்றம் சூழ 'எக்டெண்டெட் ஃபேமிலி' (Extended family) என வாழ்ந்த நாம், அதையெல்லாம் விட்டு விலகி, 'நியூக்ளியர் ஃபேமிலி' (Nuclear family) என்கிற சிறு வளையத்துக்குள் வாழ்கிறோம். அதனால்தான் பாரம்பரியமாக நாம் கடைபிடித்து வந்த நல்ல பல விஷயங்களைக்கூட எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை. அப்படியே சொல்வதற்கு ஆள் இருந்தாலும், அதையெல்லாம் கேட்பதற்கும் நேரம் இல்லை. இப்படி ஆகிவிட்ட பிறகு... அமெரிக்காவைப் பார்த்து ஆச்சர்யப்படத்தானே செய்வோம்! ஆனால், அந்தக் காலத்தில் நம்மூரில் சொல்லி வைத்தவற்றைத்தான், தற்போது 'பிரசவ கால உடற் பயிற்சி' என்ற பெயரில் சொல்லிக் கொடுக்கிறோம் நாங்கள்.

கர்ப்பக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சக்தி அதிகமாகும். எதையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறும். மூளையில் சுரக்கும் 'எண்டார்ஃபின்' எனும் நன்மை தரும் ஹார்மோன் (Natural pain killer harmone) அதிகமாகச் சுரந்து உடலும் மனமும் லேசாகும். பெருங்குடல், சிறுகுடல் ஆகியவற்றின் வேலைகளைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைகளைக் குறைக்கும். இடுப்பு, தொடை, பின்பக்கப் பகுதிகளில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து, இடுப்பு வலியைக் குறைக்கும்.

இனி எல்லாம் சுகப்பிரசவமே !

பிரசவத்தின்போது மூட்டுப்பகுதி யில் ஏற்படும் பிளவுகளைக் குறைக் கும். ஆழ்ந்த உறக்கத்தைத் தந்து மன அழுத்தத்தைக் குறைக்கும். தோல் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி, புதுப்பொலிவைத் தரும். இத யத்தை உறுதியாக செயல்பட வைக்கும். பிரசவத்தின் போதும், பிரசவ வலியின்போதும் இதயத் தசைகளைப் பலப் படுத்தும். எல்லா வற்றையும்விட, வலி குறைந்த பிரசவத்துக்கு வழிவகுக்கும்.

கர்ப்பக் காலத்தில் மட்டுமல்ல... பிரசவத்துக்குப் பிறகும் எளிய உடற்பயிற்சிகளை தொடர்வதன் மூலம் கர்ப்பத்துக்கு முன்பிருந்த அதே உடல் நிலையை நாம் பராமரிக்க முடியும்.

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை 'நடைபயிற்சி'யில் இருந்தே தொடங்கலாம். கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்தே விடியற்காலை வேளை யில் முப்பது நிமிடங்களில் இருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை மிதமான வேகத்தில் மூச்சிரைப்பு வராமல் நடப்பது நல்லது. நடக்கத் தொடங்குவதற்கு முன் கால் டம்ளர் பால் அல்லது பாதி ஆப்பிள் சாப்பிட்டுக் கொள்வதுடன், தாகம் ஏற்படும்போது தொண்டையை நனைத்துக் கொள்ள கையில் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள்.

அடுத்த முக்கியமான விஷயம்... உட்காரும் நிலை. முன்பெல்லாம் சோஃபா ஏது, சமையல் மேடை ஏது, வாஷிங் மெஷின் ஏது, வெஸ்டர்ன் டாய்லெட்தான் ஏது? உட்கார்ந்து செய்யும் வேலைகளை உட்கார்ந்த நிலையில்தானே செய்தோம்?! இன்று தரையில் உட்காருவதென்பதையே மறந்துபோயுள்ள நம் பெண்களுக்கு, அதற்கும்கூட பயிற்சி தர வேண்டியுள்ளது.

கர்ப்பமான பெண்கள் என்றில்லை... எல்லாப் பெண்களும் உட்காரும்போது சம்மணமிட்டு முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து, இரண்டு கைகளை யும் கால் முட்டியின் மீது வைத்து அமர்வது (படம் 1) ஆரோக்கியத்தைத் தரும். கர்ப்பமான பெண்கள் எவ்வளவு நேரம் உட்கார முடியுமோ அவ்வளவு நேரம் உட்கார்ந்து கொள்ளலாம். இதனால் முன்பே சொன்னதுபோல் தண்டுவடத்தின் வலது பக்கத்தில் செல்லும் 'பெருஞ்சிரை' எனப்படும் ரத்தநாளம்... ரத்த ஓட்டத்தை சீராக்கி, புத்துணர்ச்சியைத் தரும்.

அடுத்த கட்டமாக கால்கள் இரண்டையும் இணைத்து, கால் விரல்களை கை விரல்களுக்கு அடியில் பிணைத்துக் கொண்டு 'டைமண்ட்' வடிவத்தில் உட்காருவது (படம் 2) 'பெல்விக் ஏரியா' எனப்படும் இடுப்பு பகுதி தசைகளையும், இடுப்பு எலும்புகளையும் லகுவாக்கி, பிரசவத்தின்போது ஏற்படும் அழுத்தத்தைச் சுலபமாக்கும். முக்கியமாக, கர்ப்பக் காலத்தில் மூட்டு பகுதிகளில் ஏற்படும் வலியைக் குறைக்கும். நடப்பதில் ஏற்படும் சிரமத்தை விரட்டும்.

மூன்றாவதாக, மிக எளிமையான மூச்சு பயிற்சி. இந்த பயிற்சியின்போது உள்ளங்கையை வயிற்றுப் பகுதியில் வைத்துக் கொண்டு (படம் 3), கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக் காற்றை உள்ளிழுங்கள். அப்படி இழுக்கும்போது, 'என் வயிற்றில் வளரும் பேபி உனக்காகவே, உன் ஆரோக்கியத்துக்காகவே அம்மா இதைச் செய்கிறேன். நீ சந்தோஷமாக இருக்கவே நான் இதைச் செய்கிறேன்...' என்று வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுவதில் கிடைக்கும் சந்தோஷத்துடன், மெள்ள காற்றை வெளியே விடுங்கள். மூச்சுக் காற்றை எந்த நேரத்திலும் வலுக்கட்டாயமாகவோ, தேவைக்கு அதிகமாக உள்ளிழுக்கவோ, வெளியிடவோ வேண்டாம். சுகமான சுவாசம் அமையட்டும். சுகமான பிரசவத்துக்கு இதெல்லாம் அடிப்படை ஆதாரங்கள்!

- கரு வளரும்...

இதைப் படிங்க முக்கியமா!

இங்கு சொல்லப்படும் பயிற்சிகள் யாவும் பொதுவானவை. ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல்நிலை மற்றும் கர்ப்பநிலை உள்ளிட்ட சில காரணங்களைப் பொறுத்து பயிற்சிகள் மாறலாம். எனவே, உங்கள் உடல்நிலையை மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு, அவரின் ஆலோசனையின் பின்பே பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக, கர்ப்பக் காலத்தில் ரத்தபோக்கு, திடீரென வாந்தி, தலைச்சுற்றல், மூச்சிரைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இனி எல்லாம் சுகப்பிரசவமே !
 
இனி எல்லாம் சுகப்பிரசவமே !
இனி எல்லாம் சுகப்பிரசவமே !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு