Published:Updated:

கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....

கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....

பிரீமியம் ஸ்டோரி

கல்லூரியில் ஒரு கண்...கைத்தொழிலில் மறு கண்...
கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....
கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....
பி.காம் மாணவியின் பார்ட்டைம் பிஸினஸ் !

'அடச்சே, இந்த ஸ்வீட் பாக்ஸை எதுக்காக இத்தனை நாளா கட்டிக்கிட்டு அழறே...?', 'ம்... உடைஞ்சு போன பிளாஸ்டிக் தட்டை வெச்சுக்கிட்டு என்னதான் பண்ணப் போறியோ?'

- இப்படியெல்லாம் நொந்தபடியே வேஸ்ட் பொருட்களை வீதிக்கோ... அல்லது காயலான் கடைக்கோ தாரை வார்ப்பதுதான் பலருக்கும் வழக்கம். ஆனால், 'வேஸ்ட்' என்று எந்தப் பொருளையும் வீசி எறியாமல்... கண்களைக் கவரும் அழகுப் பொருளாக மாற்றி, அதன் மூலமாகவே பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் பெரியதுரைச்சி. இதில் விஷேசம் என்னவென்றால்... ஆத்தா, பி.காம் மாணவி!

கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படிக்கும் பெரியதுரைச்சியின் வீட்டுக்குப் போனால், வேஸ்ட் பொருட்கள் பலவும் அழகழகான பொருட்களாக குவிந்து கிடக்கின்றன!

"ஆறாம் வகுப்பு படிக்குறப்பவே தையல் கிளாஸுக்கு போனேன். அங்க 'ஃபேஷன் டிசைனிங்' கிளாஸும் நடந்துது. நான் சின்னவங்கறதால எனக்குச் சொல்லித் தரல. அதனாலயே 'எப்படியாவது ஃபேஷன் டிசைனிங்' கத்துக்கணும்னு சபதம் போட்டேன். நானாவே டிசைனிங் புக்ஸ், டி.வி. புரோகிராம் இதைஎல்லாம் பார்த்து அதைக் கத்துக்கிட்டேன். பிறகு... டிராயிங், பெயின்ட்டிங், கூடை பின்றது, எம்ப்ராய்டிங்னு பலதையும் கத்துக்கிட்டேன்.

இதைப் பார்த்துட்டு, அக்கம் பக்கத்துல பொருட்களை செஞ்சு தரக் கேட்டாங்க. ஒரு தடவை கூடை ஒண்ணு செய்து கொடுத்தேன். அது பெங்களூரு வரைக்கும்போக... அங்கிருந்து 50 கூடைக்கு ஆர்டர் கிடைச்சுது. அதுதான் என்னோட மொத துருப்புச் சீட்டு. அதைச் சரியா செய்து கொடுக்கவே... இப்ப மாசா மாசம் கூடைக்கான ஆர்டர் வந்துகிட்டே இருக்கு. இதுபோக எம்ப்ராய்டரி, சமிக்கி வொர்க், ஃபிளவர் வாஸ், புராஜெக்ட்டுக்கான பொருளுங்க (டீச்சர் டிரெய்னிங், பி.எட், பாலிடெக்னிக், காலேஜ் படிப்பவர்களுக்காக) செய்து கொடுக்கிறேன்'' என்று பெருமையாகச் சொல்லும் பெரியதுரைச்சி, கல்லூரிக்கு சென்று வரும் பஸ் செலவு, படிப்பு செலவு என்று எல்லாவற்றையும் இதிலிருந்தே

கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....

முடித்துக் கொள்கிறார். மிச்சத்தில் வீட்டுக்கு ஒரு தொகையைக் கொடுப்பதோடு, சேமிக்கவும் செய்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே!

''இதோ... காதுல போட்டிருக்கற ஜிமிக்கி என் சம்பாத்தியத்துல வாங்கினதுதான்'' என்று உற்சாகப் புன்னகையோடு சொல்லும் அம்மணி, இன்டர் காலேஜ், யூனிவர்சிடி, ஸ்டேட் என்று நடைபெறும் 'புராடெக்ட் ஃபிரம் வேஸ்ட்' (Product from Waste) போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் குவித்திருக்கிறார்.

''இந்த வெற்றிக்கெல்லாம் மூலகாரணம் என் தாத்தாதான். அடிக்கடி ஊக்கப்படுத்திட்டே இருப்பாங்க. காலேஜ் போயிட்டு வந்த பிறகு கிடைக்கற ஓய்வு நேரம், லீவு நேரம்னு மொத்தமும் இதுலதான் செலவிடறேன்'' என்று சொல்லும் பெரியதுரைச்சி, தன் எதிர்கால குறிக்கோளையும் சொன்னார். அது -

''பி.காம் முடிச்சதும், ஃபேஷன் டிசைனிங்ல டிகிரி படிக்கணும். அப்புறம் ஷோரூம் ஆரம்பிக்கணும்.''

அவருடய கண்களில் ததும்பும் தன்னம்பிக்கை சொல்கிறது - 'நிச்சயம் அதெல்லாம் நடக்கும்!'

- இ.கார்த்திகேயன் படங்கள் எல்.ராஜேந்திரன்

கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....
 
கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....
கல்லூரியில் ஒரு கண்....கைத்தொழிலில் மறு கண்....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு