Published:Updated:

ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....

ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....

பிரீமியம் ஸ்டோரி

ம.பிரியதர்ஷினி
படம் து.மாரியப்பன்
ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....
ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....
ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....

ஐ.டி. படிப்பு... நம் மாணவ சமுதாயத்தின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம்! ஆனால், நாட்டின் மிக முக்கிய, தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றான அதில் சேர்வதற்கு சரியான வழிகாட்டல்கள், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் இல்லாததால், இங்கு பலருக்கும் அது கானல் நீராகவே உள்ளது. அப்பர் கிளாஸ் மாணவர்கள், பல ஆயிரங்கள் செலவழித்து, நுழைவுத் தேர்வுக்கான 'கோச்சிங்' முடித்து, ஐ.ஐ.டி. வளாகம் நுழைந்துவிடுகின்றனர். ஆனால், மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ் மாணவர்கள் ஏக்கம் சுமந்த கண்களுடன் கைவிடப்படுகின்றனர்.

ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....

''இந்த நிலைமையை மாற்றத்தான் ஏழு வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறேன். அதற்கான பாஸிட்டிவ் பலனையும் அறுவடை செய்துகொண்டுள்ளேன்...'' என்று இளைய சமுதாயத்துக்கு நம்பிக்கை தந்து பேசுகிறார் பீகாரைச் சேர்ந்த ஆனந்தகுமார். கடந்த ஏழு வருடங்களாக அந்த மாநிலத்தில் உள்ள ஏழை மாணவர்களை (சாதி வேறுபாடு இல்லாமல்) தேர்ந்தெடுத்து, இலவச கோச்சிங் மூலம், 'ஐ.ஐ.டி. கிராஜுவேட்ஸ்' ஆக்கிக் கொண்டிருக்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திரம்.

சென்னையில் இருக்கும் 'ஃபல்கிரம் கோச்சிங்'அமைப்பு, ஐ.ஐ.டி. கோச்சிங் கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வறுமை நிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு இலவச கோச்சிங் வழங்கப்படுகிறது. அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, 'சீக்ரட் ஆஃப் சக்ஸஸ் இன் ஐ.ஐ.டி.- ஜே.இ.இ.' என்ற பயிலரங்கத்தில் வகுப்பெடுப்பதற்காக சமீபத்தில் வந்திருந்தார் ஆனந்தகுமார்!

'''என்னுடைய பள்ளிக் காலம், வறுமை சூழ்ந்ததாகத்தான் இருந்தது. கேம்பிரிட்ஜ்ல இருந்தெல்லாம் எனக்கு கல்விக்கான வாய்ப்புகள் வந்தபோது, கணிதப் பட்டப்படிப்பை முடிக்கவே பொருளாதார ரீதியாக நான் அதிகம் திணறிக் கொண்டிருந்தேன். அந்தச் சூழ்நிலையிலதான், என் படிப்பையே முதலீடாக்கி, என் படிப்புக்கான செலவுகளை சமாளித்தேன். அதாவது, பலருக்கும் டியூஷன் எடுத்து சம்பாதித்தேன். அப்போதான், 'திறமை இருந்தும் பணம், வழிகாட்டுதல் இல்லாததால், இனி இன்னொரு ஆனந்தகுமார் பாதிக்கப்படக்கூடாது' என்று மனதில் ஒரு நெருப்பு பற்றிக் கொண்டது.

ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....

நான் நடத்திவரும் 'ராமனுஜம் ஸ்கூல் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ் டியூஷன், கோச்சிங் சென்டர்' என்பதன் மூலமாகவே, ஏழை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. கோச்சிங் கொடுப்பது என்று முடிவு செய்தேன். என்னுடைய பயிற்சியும், அவர்களின் உழைப்பும் ஒரே புள்ளியில் வெறியோட பயணிக்க, முதல் வருடமே 30 மாணவர்கள் ஐ.ஐ.டி-க்குள் வெற்றிகரமாக நுழைந்தார்கள். அடுத்தக் கட்டமாக, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மிக மிக ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, உணவு, உறைவிடமும் இலவசமாக கொடுத்து 'ஐ.ஐ.டி' நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்தினேன். வசதியுள்ள மாணவர்களுக்கு டியூஷன், கோச்சிங் எடுப்பதன் மூலமாக கிடைத்த வருமானம், இந்த 'இலவச கோச்சிங் சென்டர்' செலவுகளைச் சமாளிக்க கை கொடுக்கிறது. இதுவரை 182 ஏழை மாணவர்களை, ஐ.ஐ.டி. கிராஜூவேட் ஆகியுள்ளனர். அவர்கள்தான் என்னுடைய முயற்சிக்கு நம்பிக்கை நீர் ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள்!'' என்று நெகிழ்ந்தார் ஆனந்தகுமார்.

செழித்து வளரட்டும் இந்த ஆலமரம்!

ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....
 
ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....
ஏழை மாணவர்களுக்கு இலவச ஐ.ஐ.டி.கோச்சிங்....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு