Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
படம் என்.விவேக்
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
"கிராமப்புற அரசு மருத்துவமனை பிரசவம்...பாதுகாப்பானதா? "

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

"இரண்டு மாத கர்ப்பிணியான என் மனைவி, தன் பெற்றோருடன் கிராமத்தில் இருக்கிறாள். மருத்துவமனைகள் எதுவும் இல்லாத அந்த ஊரின் அரசு, ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சைகள், பரிசோதனைகள், மருந்துகள் எடுத்துக் கொள்வதாகவும் கூறுகிறாள். அலுவல் காரணமாக பெருநகரத்தில் தங்கியுள்ள எனக்கோ, அதைப் பற்றிக் கவலையாக இருக்கிறது. நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு இணையாக அங்கு பிரசவத்துக்கான உதவிகள் கிடைக்குமா?" என்று கோவையில் இருந்து கலக்கத்துடன் கேட்டிருக்கும் பாஸ்கரனுக்கு பதில்அளிக்கிறார் திருச்சி மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் ஆர்.வசந்தா.

"கருவுற்றதிலிருந்து பிரசவம் வரையிலும் ஒரு பெண்ணுக்குத் தேவையான எல்லா சிகிச்சைகளும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிடைக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அதைப் பற்றி விரிவாகவே சொல்கிறேன்.

இரண்டு மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள், ஒரு மருந்தாளுநர்... இவர்களைக் கொண்டதுதான் ஆரம்ப சுகாதார நிலையம். கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவர்களை கிராம சுகாதார செவிலியரே தேடி வந்து பதிவு செய்வார்கள். கூடவே உயரம், எடை, சிறுநீர் பரிசோதனை, கர்ப்ப வரலாறு, ரத்தத்தில் இரும்புச்சத்து போன்றவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதிப்பார்கள். கர்ப்பக் காலத்தில் குறைந்தது மூன்று முறை ரத்த சர்க்கரைக்கான பரிசோதனை, ஹெச்.ஐ.வி. டெஸ்ட், ஸ்கேன் போன்றவையும் எடுக்கப்படும்.

ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் தினத்தன்று கர்ப்பிணி பெண்ணுக்கு அங்கேயே ஊட்டச்சத்து மிக்க மதிய உணவும் வழங்கப்படும். முதல் கர்ப்பமாக இருப்பின் ஒரு மாத இடைவெளியில் ரண ஜன்னி தடுப்பூசி போடப்படும். இரும்புச்சத்து குறைவாக இருப்பின் (9 கிராமுக்கு குறைவாக) அதற்கென சிறப்பு ஊசியும் போடப்படும். சரியான டயட் குறித்த ஆலோசனைகளோடு இலவச இரும்புச்சத்து மாத்திரைகளும் வழங்கப்படும்.

இங்கு பதிவு பெற்ற கர்ப்பிணிகளுக்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் வளைகாப்பும் நடத்தப்படுகிறது. தாய்-சேய் நலனுக்காக வீட்டுப் பிரசவத்தை தவிர்த்து ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை கர்ப்ப அபாய அறிகுறிகள் கண்டறியப்பட்டால், உடனடியாக 108 துரித சேவையை பயன்படுத்தி அரசு தலைமை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பிரசவத்துக்குப்பின் குறைந்தது இரண்டு நாள் நிலையத்திலேயே இருந்து பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைக்கு போலியோ, காசநோய் மருந்துகள் மற்றும் தாய்க்கு வைட்டமின்-ஏ திரவம் அளிக்கப்படும். அடுத்து வரும் 42 நாட்களுக்குள் குறைந்தது 6 முறையேனும் செவிலியரே வீடு தேடி வந்து தாய்-சேய் நல ஆலோசனை மற்றும் சிசு மரண அபாயத்தை தடுப்பதற்கான மருத்துவ பரிந்துரைகளை மேற்கொள்வார். பிறப்பு சான்றிதழையும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

இதன் பின்னரும் குடும்ப நல ஆலோசனையாக தற்காலிக மற்றும் நிரந்தர கர்ப்பத் தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்படும். இதுதவிர, வரந்தோறும் திங்கட்கிழமைகளில் கிராம நலவாழ்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தாய்-சேய் நலம் குறித்த பராமரிப்பு ஆலோசனைகளைப் பெண்கள் பெறலாம். நாடு தழுவிய தடுப்பூசி அட்டவணையில் கண்டுள்ளபடி பிறந்தது முதல் ஒன்றரை வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும் இங்கு வழங்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம்... அலோபதி மருந்துகள் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ அல்லது விருப்பத்தைப் பொறுத்தோ மாற்று மருத்துவமாக சித்த மருத்துவ மருந்துகளும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகின்றன. எனவே, உங்கள் மனைவிக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகளும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும். எனவே, பெரிதாக எந்தச் செலவும் இல்லாமல், எளிமையான பிரசவம் அங்கே உறுதி செய்யப்படும். கவலையே வேண்டாம்.'

சாம்பாரில் இருந்து சாட்டிலைட் வரை உங்கள் கேள்வி எதுவாயினும்
எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
044- 42890002 என்ற 'வாய்ஸ் ஸ்நாப்' சேவையிலும் உங்கள் கேள்வியை
உங்கள் குரலிலேயே பதிவு செய்யலாம். நிபுணர்கள் தகுந்த விளக்கம் தருவார்கள்!

 

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
 
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு