Published:Updated:

டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !

டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !

பிரீமியம் ஸ்டோரி

டியர் டாக்டர்
டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !
டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !
கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ்!

டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !

"நான் வெயிலில் சென்றாலே என் கண்கள் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி என படாய்ப்படுகிறது. அதுவும் கோடையில் இந்தப் பாதிப்புகள் அதிகம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்..? இதிலிருந்து கண்களுக்கு எப்படி விடுதலை பெறுவது?"

டாக்டர் டி.சுனிதா, சிறப்பு கண் மருத்துவர், திண்டுக்கல்

"தலை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் தனிப்பட்ட சுகாதார பராமரிப்பும், கண்களை எப்போதும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். அதேபோல, நேரடி வெயிலைவிட, வைரஸ் மற்றும் பேக்டீரியா தொற்றுகளும்கூட கண்பாதிப்புகளை ஊக்குவிக்கின்றன. கோடைகாலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும்.

டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !

முதலில் தலையைப் பற்றி பார்ப்போம். தலை பொடுகு காரணமாக இமையிலும் பொடுகு பரவினால், கண்ணுக்கான உயவுப்பொருளை சுரக்கச் செய்வதற்காக இமையின் அருகிலிருக்கும் சுரப்பிகளில் கொப்புளங்கள் ஏற்படும். சீழ் பிடிக்கும். இந்த பாதிப்பிலிருந்து வெளியேற, பொடுகுக்கு முதலில் நிவாரணம் தேட வேண்டும். பேபி ஷாம்பூவில் வெந்நீர் கலந்து காது குடையும் பட்ஸால் இமைப்பொடுகை நீக்கலாம். பாதிப்பு தீவிரமாக இருந்தால் மருத்துவ ஆலோசனையின் பேரில் ஆன்டிபயாட்டிக் ஆயின்மென்ட்டுகளை கொண்டு மசாஜ் செய்து நிவாரணம் பெறலாம்.

அடுத்தாக, பேக்டீரியா தொற்றால் இமையின் உட்புறம் வீங்கிப் போவதுதால், கண் கட்டிகள் ஏற்படலாம். இதற்கு கர்சீப்பில் சுடு தண்ணீர் தொட்டு ஒத்தடம் கொடுத்தாலே போதுமானது. நாமக்கட்டியை குழைத்துப்போடுவது போன்ற கைவைத்தியங்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். கோடைக்கே உரிய தூசுகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் கண்களுக்கு பிரச்னை வரும். கண்கள் சிவந்துபோவதுடன், எரிச்சலோடு அரிப்பும் இருக்கும். சொட்டுமருந்துகள் முதல் ஸ்டீராய்டு மருந்துகள் வரை பாதிப்பைப் பொறுத்து இதற்கு தீர்வுகள் உள்ளன.

இவை தவிர, வெளிக்காரணிகள் எவையும் இன்றி இயல்பிலேயே சிலர் வறண்ட கண்களைப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு கோடை மிகவும் வேதனையாக இருக்கும். இவர்கள் தங்களின் கண்கள் வறட்சிக்கு காரணமான கண்ணீர் சுரப்பியின் அடைப்பு நீங்க, பரிசோதனைக்குப்பின் செயற்கையாகக் கண்ணீரைத்தூண்டும் டிராப்ஸ் மற்றும் ஆயின்மென்ட்டுகளை பயன்படுத்தலாம்.

கூடவே, பணி நிமித்தம் வறண்ட கண்களுக்கு வரவேற்பு சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதில் முக்கியமாக கம்ப்யூட்டர் தொடர்பான பணியில் இருப்பவர்கள் கண்சிமிட்டலுக்கான பிரத்யேக பயிற்சியினை மேற்கொள்ளலாம். கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்க்கும் கண்களுக்கு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய இடைவெளி கொடுத்து, இருபது முறை வேகமாக கண்களை சிமிட்டிவிட்டு பணியைத் தொடரலாம். மேலும், கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து வெளியாகும் கதிர்கள் கண்களைப் பாதிக்காவண்ணம் அதற்கான ஸ்பெஷல் கோட்டிங்குடனான கண்ணாடி அணிந்தும் காப்பு பெறலாம்.

அதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களையும் கண் வறட்சி பாதிக்கும். டூ&வீலர் உபயோகிப்பாளர்கள் ஹெல்மட் அல்லது கண்களை மறைக்கும் கண்ணாடி அணிந்துகொள்வது நல்லது.

கண்களுக்கான தினசரி பயிற்சியாக... எப்போதும் முகம் கழுவும்போது கண் பிராந்தியத்தை சுற்றிலும் எல்லோருமே லேசாக மசாஜ் செய்வது நல்லது."

ஆண்டுக்கணக்கில் நீளும் சிக்குன்குனியா மூட்டுவலிக்கு தீர்வு ?

டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !

"ஒன்றரை வருடங்களுக்கு முன் சிக்குன்குனியா தாக்கியது. காய்ச்சலில் இருந்து ஒரே வாரத்தில் மீண்டுவிட்டேன். ஆனாலும், எலும்பு ஜாயின்ட்டுகளில் அவ்வப்போது படுத்தும் வலி இன்று வரை விட்டபாடில்லை. டாக்டரிடம் சென்றால் வலி நிவாரணியைத் தான் பரிந்துரைக்கிறார். இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா?"

டாக்டர் வி.பி.சரவணன், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், தஞ்சாவூர்

"பெரும்பாலும் மழை மற்றும் குளிர்காலங்களில் தேங்கி நிற்கும் நீரில் பல்கிப்பெருகும் கொசுக்கள் கடிக்கும்போது பரவும் வைரஸ் தொற்றுதான், சிக்குன்குனியா காய்ச்சலைத் தருகிறது. கைகால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கமும் இருக்கும். காய்ச்சல் குறைவதற்கும் மூட்டு வலிக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதோடு அதிகம் நீர் அருந்துவதும், காரம் இல்லாது உணவு உட்கொள்வதும் நல்லது. சில நாட்களில் காய்ச்சல் விலகினாலும் மூட்டு வலியானது தனி நபரைப் பொறுத்து சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கும். வைரஸானது மூட்டுகளின் குருத்தெலும்புகள் மற்றும் ஜவ்வில் ரணத்தையும் வீக்கத்தையும் உண்டுபண்ணுவதே இதற்குக் காரணம்.

என்றாலும், மூட்டு வலி நீடித்துக் கொண்டே இருந்தால், உடனடியாக எலும்பு சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது. எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை மூலம் பாதிப்புக்குக் காரணம் சிக்குன்குனியாதானா என்பதை முதலில் அவர் உறுதிப்படுத்துவார். ஏனெனில் மூட்டு தேய்மானம் மற்றும் அடிபடுவதாலும் இந்த மூட்டு வலியானது வரலாம். பின் டாக்டரின் மேற்பார்வையில் வலி நிவாரணி மற்றும் ரணத்தை குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதும், பிஸியோதெரபிஸ்ட் மூலம் மெழுகு ஒத்தடம் மற்றும் குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நிவாரணம் தரும்.

சிக்குன்குனியாவால் ஏற்படும் மூட்டுவலிக்கு நிரந்தர மருத்துவம் கிடையாது. தனிப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புசக்தி மற்றும் காய்ச்சல் அடித்த«பாது அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து நிவாரணம் அமையும். அதேசமயம், ‘இதனால் நிரந்தர பாதிப்பு வந்துவிடுமோ’ என்கிற கவலை தேவையில்லை.

எப்போதும்போல உடலியக்கம் மேற்கொள்வதும், தனிப்பட்ட உடல் நோய் எதிர்ப்புத் திறனில் அக்கறை கொள்வதும், வலி வரும்போதெல்லாம் டாக்டர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் பரிந்துரைகளை சரியாக பின்பற்றுவதும் விரைவான நிவாரணத்துக்கு வழிசெய்யும். கோடையோ மழையோ, எந்தக் காலத்திலும் கொசுக்கடி வாய்ப்புகளைத் தவிர்ப்பதும் புத்திசாலித்தனம்."

டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !
 
டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !
டியர் டாக்டர் - கண்களைப் பாதுகாக்கும் கண் மசாஜ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு