பிரீமியம் ஸ்டோரி

நாட்டு வைத்தியம்
அன்னமேரி பாட்டி
நாட்டு வைத்தியம்
நாட்டு வைத்தியம்
காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய்!

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்னு அட்டவணைப் போட்டுக்கிட்டு சாப்பிட்டு வந்தாலே... இந்த மாதிரி நோய்களுக்கு இடமே இல்லை.

நாட்டு வைத்தியம்

இஞ்சி...

இஞ்சியை பலவழிகள்ல சாப்பிடலாம். சின்னத் துண்டு இஞ்சியை காலைல வெறும் வயித்துல சாப்பிடலாம். அப்படி இல்லைனா... இஞ்சி சாறு எடுத்து, அஞ்சு நிமிஷத்துக்கு அப்படியே ஒரு டம்ளர்ல வைங்க. அடியில வெள்ளையா படியும். தெளிஞ்ச சாறை மட்டும் எடுத்து குடிங்க. ரொம்ப கஷ்டமா தோணுச்சுனா... தேன், கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை இதையெல்லாம் அதுகூட சேர்த்துக் குடியுங்க. நித்தமும் இப்படி குடிச்சு வந்தா... நீங்கதான் சுறுசுறுப்புத் திலகம்.

இஞ்சி முரப்பா, இஞ்சி மிட்டாய்னு விக்கிறாங்க. எல்லாமே நல்லதுதான். இதை எந்த நேரத்துலயும் சாப்பிடலாம். அதேமாதிரி டீ குடிக்குறப்ப... இஞ்சியைத் தட்டிப்போட்டுக் குடிக்கலாம். வாய்வுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித்தொல்லைனு எல்லாம் இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.

சுக்கு....

நாட்டு வைத்தியம்

'சுக்கு-மல்லி காபி'னு கூவிக் கூவி விக்கிறத பார்த்திருப்பீங்க. சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து எல்லாத்தையும் பொடியாக்கணும். இதோட பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வச்சா... சுக்கு-மல்லி காபி ரெடி. சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப்பிடிப்பு எல்லாம் ஓடியேப் போயிரும். ஆடாதொடை இலை, துளசி, ஓமவள்ளியெல்லாம் கிடைச்சா, அந்த சுக்குமல்லி காபி யோட சேர்த்துக் காய்ச்சிக் குடிச்சா... கூடுதல் பலன் கிடைக்கும்! சுக்கு மிட்டாய்னு ஒண்ணு சில கடைகள் விக்கிறாங்க. அதை வாங்கிக் குழந்தைங்களுக்கு கொடுங்க... உற்சாகமா ஓடி ஆடுவாங்க.

கடுக்காய்...

'மாலையில் கடுக்காய்'னு சொல்றதைவிட, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னனு சொல்லலாம். அந்த நேரத்துல அதைச் சாப்பிடறதுதான் நல்லது. நாட்டு மருந்துகடைங்கள்ல கிடைக்கற கடுக்காயை வாங்கிட்டு வந்து, இடிச்சி உள்ள இருக்குற கொட்டையை எடுத்துட்டு தோலை மட்டும் பயன்படுத்தணும். ரெண்டு, மூணு கடுக்காயை இடிச்சிப்போட்டு ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி நல்லா காய்ச்சணும். பாதியா சுண்டுனதும், ஆற வெச்சுக் குடிக்கணும். இப்பிடி குடிக்கிறதால காலையில மலம் நல்லா போகும். வாய்வுத் தொல்லை இருந்த இடம் தெரியாம காணா போயிரும். இதைச் சாப்பிடறதால மூலம் சம்பந்தப்பட்ட பிரச்னைங்ககூட சரியாகும்னா பார்த்துக்கோங்களேன்.

நாட்டு வைத்தியம்
-இன்னும் சொல்றேன்...
நாட்டு வைத்தியம்
நாட்டு வைத்தியம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு