Published:Updated:

'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !

'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !

பிரீமியம் ஸ்டோரி

'உங்கள் குழந்தை... இனி, எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை!'
'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !
'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !
மூளையின் மறுபக்கத்தைத் தூண்டும் புதுவித பயிற்சி

ரச்னை என்றபடி வருபவர்களை கவுன்சிலிங் மூலம் குணப்படுத்தலாம். ஆயினும், அந்த கவுன்சிலிங்கின் பலன், மீண்டும் அந்தப் பிரச்னையை நினைவுபடுத்தும் சம்பவம் எதுவும் அவர்கள் வாழ்க்கையில் நிகழாமல் இருக்கும்வரைதான். ஆனால், எங்களின் 'திங்க் ரைட்'மன பயிற்சி நிறுவனத்தில், உங்களை பாதித்த அந்தச் சம்பவத்தை உங்களின் மூளையில் இருந்தே வேருடன் களையெடுக்கிறோம். இதனால் அந்தச் சம்பவமோ, அது தொடர்பான நினைவுகளோ உங்கள் வாழ்க்கையில் இனி இடறாது. இதுதான் எங்களின் சிறப்பு!''

'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !

- தெளிவான முன்னுரை தந்து ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் கீர்த்தன்யா!

"என்ன வித்தை அது..?''என்றால், மென் சிரிப்பைத் தொடர்கிறது அவரின் நுட்பமான பதில்...

" 'சில்வா மைண்ட் கன்சோல் மெத்தட்'என்பதுதான் அந்த மனப் பயிற்சி முறை. உங்களுக்கு மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ தருகிற எந்த விஷயமானாலும் சரி, அது உங்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும். கவுன்சிலிங்கின்போது, அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவதற்கான ஆறுதல்கள், அறிவுரைகள் கொடுக்கப்படும். ஆனால், நாங்கள் சொல்லும் முறையின் மூலம், உங்களுக்கு நெகட்டிவ் நினைவுகளைத் தருகிற குறிப்பிட்ட சம்பவம், பிரச்னை அல்லது பழக்கத்துக்கு... உங்கள் ஆழ் மனதில் பதிந்துள்ள முக்கியத்துவத்தை முற்றிலுமாக நீக்கி விடுகிறோம். அதாவது, அதை மற்ற நிகழ்வுகளைப் போல இயல்பாக கடக்கும் மனநிலைக்கு நீங்கள் பக்குவப்படுத்தப் படுவீர்கள்.

நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங் மெத்தட், ஜோஸ் சில்வா மெத்தட், டிரான்சாக்ஷன் அனாலிசிஸ் புரோகிராம் என சில மனப்பயிற்சிகளுடன் சில உடற் பயிற்சிகள், நம் மூளையின் செயல்பாடு பற்றிய புரிதல், அதற்கேற்ப நடக்கும் விதம், யோகா, தியானம் மற்றும் அறிவியல்... இதுதான் அந்த சைக்யாட் ரிக் ரெசிபி, தெரபி!''எனும் கீர்த்தன்யா, இதற்கான சிறப்பு பயிற்சி எடுத்தது ஹைதராபாத் மற்றும் ஆக்ராவில்!

'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !

"மனநல ஆலோசகராக பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு, இந்த 'சில்வா மைண்ட் கல்சோல்' முறை பற்றி தெரியவந்தபோது, அதில் என் ஆர்வம் இன்னும் படர்ந்தது. ஆக்ராவில் அதற்கான பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்து, அங்கு சென்று முறையான பயிற்சிகள் பெற்றுத் திரும்பினேன். என் பார்ட்னர்கள் கணேஷ், பார்த்திபன் கை கொடுக்க, மனநல மருத்துவத்தில் ஒரு ஃப்ரெஷ்ஷான முயற்சியாக உதயமானது எங்கள் 'திங்க் ரைட்'பயிற்சி மையம்.

ஆரம்பித்த இரண்டே வருடங்களில் இப்போது இளைஞர்கள், வேலைக்குச் செல்பவர்கள், தம்பதிகள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் பல 'செஷன்'களில் இங்கு ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். காரணம், மூன்று மணி நேர வகுப்பில் உட்கார வைத்துப் பேசும் வேலை இங்கு இல்லை. அதைக் கேட்பதற்கு அவர்களுக்கு நேரமும், பொறுமையுமில்லை. பதிலாக, மூளை பற்றிய செயல்திறனை அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் விதத்தில் கற்றுக் கொடுக்கிறோம்.

'நம்மிடம் உள்ள மூளையில் ஒரு பக்கத்தைதான், பெரும்பாலும் உபயோகிக்கிறோம். இன்னொரு பக்கத் தையும் உபயோகிக்கக் கற்றுக் கொண்டால், குழந்தை களுக்கு 'இந்த சப்ஜெக்ட்ல நான் வீக்'என்ற நிலையே வராது. பெரியவர்களுக்கு அதன் பலன் இன்னும் பெருகும்'என்று வகுப்பை ஆரம்பித்தால், அந்த அறிவியல் பற்றி மேலும் அறிய மனம் ஆவலாகும் தானே?! அதுதான் இங்கு ப்ளஸ்!''என்றவர்,

'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !

"இந்த மையத்தில் குழந்தைகளின் நினைவாற்றல், குழந்தை வளர்ப்பு பயிற்சி, வேலையில் ஏற்படும் தேக்கநிலை, தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் என்று அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு மட்டுமின்றி, அனைவருக்குமான பொதுப் பயிற்சிகள் மூலம் மன நலம் சார்ந்த ஒரு புதுமையான அனுபவத்தையும் பெறலாம்!''என்று அழைப்பு வைக்கும் இந்த இளம் சைக்காலஜிஸ்ட்டுக்கு வெகு விரைவில் திருமணம்!

வாழ்த்துகள் மேடம்!

ம.பிரியதர்ஷினி

'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !
 
'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !
'உங்கள் குழந்தை...இனி,எந்த சப்ஜெக்டிலும் வீக் இல்லை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு