Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

பிரீமியம் ஸ்டோரி

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
தாமரை ஜோதி
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
சாமான்ய பெண்களின் சாதனை கதைகள்

ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய்...வாரி வழங்குது வாழைநார் !

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

திருச்சி, அயிலாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாளின் ஆண் குழந்தை, பிறந்த இருபத்தி எட்டாவது நாள் மஞ்சள் காமாலையால் படுக்கையோடு நிரந்தரமாக முடக்கப்பட, உயிர் கரைய அழுது, ஒரு கட்டத்தில் எழுந்த ஆண்டாள்,

அந்த குழந்தையின் மருத்துவ செலவுகளுக்காக ஒரு வேலைக்குச் செல்லும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால், குழந்தையை தனியாக வீட்டில் விட்டுச் செல்லும் அளவுக்கு அதன் நிலைமை இல்லாததால், 'வீட்டிலேயே ஏதாவது ஒரு சுயதொழில்...' என்று தேடியவருக்கு கிடைத்தது, இப்போது உலகம் முழுக்க 'டிமாண்ட்' இருக்கும் வாழைநார் தொழில் பற்றிய தகவல்.

அந்த வாழைநார் தந்த வாழ்க்கையால் இன்று நிமிர்ந்து நிற்கும் போராட்டத் தாயான ஆண்டாளின் வெற்றிப் பயணத்தின் முன் பாதியை 'உடைத்துப் போட்ட விதி... உயர வைத்த பாசம்' என்ற தலைப்பில் சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். அதைப் படித்துவிட்டு, ஆண்டாளுக்கு உணர்வுபூர்வமான வாழ்த்துகளை நம் அலுவலகத்தில் குவித்ததுடன், கூடவே, 'வாழைநார் தொழில் பத்தின தகவல்களுக்காக காத்திருக்கோம்...' என்றும் குஷியானார்கள் தோழிகள் பலர்.

இதோ... அந்தத் தாய், சிகரம் தொட்ட மிச்ச சரித்திரமும், அவருக்கு துணையாக இருந்த வாழைநார் தொழில் பற்றிய தகவல்களும் தொடர்கின்றன இங்கே..!

''வாழைநார் பொருட்களுக்கு இருக்கற தேவை, அந்த தொழிலுக்கு இருக்கற எதிர்காலம் இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட எனக்கு, 'இதுல நமக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும்'னு நம்பிக்கை வந்துச்சு.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

என் கணவரை ஒரு மாசம் லீவு போட்டு குழந்தையைப் பார்த்துக்க சொல்லிட்டு, கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஸ்ரீகாரியம்ங்கற இடத்துல வாழைநார்லயிருந்து பொருட்கள் தயாரிக்கறதுக்கான டிரெய்னிங் எடுத்துக்கிட்டேன். பயிற்சி முடிச்சு வந்த கையோட, லோனுக்கு அலைஞ்சேன். என்னை நாயா துரத்தின எல்லா ஃபார்மலிட்டிகளையும் மனசு தளராம முடிச் சுட்டு, 'ஆண்டாள் கிராஃப்ட்ஸ் அண்ட் சர்வீஸஸ்' ஆரம்பிச்சுட் டேன்! பேங்க், லோன்னு ஆரம்பத்துல என்னை படுத்தின அந்தக் கடினமான சூழ்நிலையில கொஞ்சம் சோர்ந்திருந்தாலும், என் வாழ்க்கை முழுக்கவே சோர்ந்திருக்கும். ஆனா, நான் அந்தத் தடையை வைராக்கியத்தோட தாண்டிட்டேன்...'' என்றபோது, ஆண்டாள் முகத்தில் ஒரு சிறு பெருமிதம்.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

''தொழிலை ஆரம்பிச்சப்போ, வாழை நார்லயிருந்து பொருட்கள் பண்றதப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது. வாழை மரத்துலயிருந்து நாரை பிரிக்க மட்டும்தான் தெரியும். அந்த நாரை விலைக்கு வாங்கறதுக்கு புரோக்கர்ஸ் இருப்பாங்க. ஆனா, அவங்க அந்த நாரை வாங்கி என்ன பண்றாங்க, எங்க விற்கிறாங்கங்கறது எல்லாம் பெரிய ரகசியமாவே இருந்துச்சு. அப்போதான், வாழைநார் பொருட்கள் தயாரிப்பதுல இந்தியாவிலேயே ஜெய்ப்பூர்ல இருக்கற 'சங்கதேர்'ங்க ஊர்தான் முன்னணியில இருக்குங்கறது தெரியவந்துச்சு. புரோக்கர்ஸ் எல்லாம் அங்கதான் வாழைநாரை விற்கிறாங்கங்கறதும் புரிஞ்சுபோச்சு.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

'நாமே நேரடியா ஜெய்ப்பூர்ல வித்தா, கூடுதல் லாபம் கிடைக்குமே'னு ஜெய்ப்பூருக்கே கிளம்பிப் போயிட்டேன். அலைஞ்சு திரிஞ்சு, நாலஞ்சு கம்பெனிகள்ல ஆர்டர் வாங்கி, நார்களை நேரடியா ஜெய்ப்பூருக்கு அனுப்பினேன்...'' என்றவருக்கு, இந்தத் தெழிலின் ஆரம்பகட்ட வருமானம் தந்த தன்னம்பிக்கையும், தைரியமும் அந்த பிஸினஸில் இன்னும் வேகம், ஆர்வம் கொடுக்க... அதன் அடுத்த கட்ட முயற்சிகளுக்கும் தன்னைத் தாயாராக்கி இருக்கிறார் ஆண்டாள்.

'' ஒரு கட்டத்துல, வாழைநார்ப் பொருட்களையும் நாம தயாரிக்கலாங்கற முடிவுக்கு வந்தேன். அதுக்கான பயிற்சியையும் எடுத்தேன். பழங்கள் வைக்கற பேக், கூடை, ஃபைல், டேபிள் மேட், டீ கோஸ்டர்ஸ் மாதிரி ஏகப்பட்ட கைவினைப் பொருட்களை வாழைநாரிலிருந்து தயாரிக்க ஆரம்பிச்சேன். மார்கெட்டிங் நுணுக்கங்களையும் தெரிஞ்சுக் கிட்டு, தொழில் பண்ணினேன். பல்வேறு இடங்கள்லயிருந்தும் நிறைய ஆர்டர்கள் குவிய ஆரம்பிச்சுடுச்சு.

என்னோட நேர்த்தியான தொழில் முறை, வாடிக்கையாளர் வட்டத்தை பெருக்கி தந்துச்சு. பிஸினஸ் எதிர்பார்த்ததைவிட நல்லாவே பிக்-அப் ஆச்சு. என் தன்னம்பிக்கைக்கும், தேடலுக்கும், உழைப்புக்கும் பலன் கிடைச்சுச்சு!'' என்றபோது ஆண்டாளிடம் பரவுகிறது சிறு புன்னகை. வருமானத்தாலும், தொழில் சுத்தத்தாலும் இப்போது ஒரு 'ரோல் மாடல்' சுயதொழில் முனைவோராக உருவாகியிருக்கும் ஆண்டாளின் பையன் இந்த 13 ஆண்டுகளாக படுக்கையில்தான் இருக்கிறான்... ஆனாலும் தன் தாயை வெற்றி நோக்கி செலுத்தியபடியே!

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

''என் புள்ளைக்காக ஒரு வெறியோட நான் எடுத்த முயற்சிகளும், அதுக்கு என் கணவர் கொடுத்த ஒத்துழைப்பும்தான் இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு. கஷ்டத்தைப் பார்த்து நான் வீட்டுக்குள்ள முடங்கியிருந்தா, இன்னிக்கு இப்படி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கற அளவுக்கு, சென்னை, கவுஹாத்தி, திருவனந்தபுரம்னு பல ஊர்கள்ல போய் விருது வாங்கற அளவுக்கு என்னால வளர்ந்திருக்க முடியாது. இப்ப இருக்கற ஒரு யூனிட்டை அடுத்த வருஷத்துக்குள்ள ரெண்டு யூனிட்டா மாத்தணும். எங்க பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற அளவுக்கு உழைக்கணும். என் புள்ளை படுக்கையில இருந்தாலும், அவனுக்கு நான் ஒரு பாஸிட்டிவ் அம்மாவா இருக்கணும்!'' எனும் ஆண்டாளின் கண்களில் நிறைகிறது நீர்!

- சாதனைகள் தொடரும்....

வாழைநார் தொழில்... ஒரு வழிகாட்டல்!

தான் வெற்றி கண்ட விதத்தை வர்ணித்த ஆண்டாள், இந்தத் தொழிலில் மற்றவர்களும் வெற்றி காண்பதற்காக வழிகாட்டும் விதத்தில் சொன்ன டிப்ஸ்கள் இங்கே இடம் பிடிக்கின்றன...

கண்ணால் பார்ப்பதை கையால் செய்யும் sதிறமையுடைய எவருமே வாழைநாரிலிருந்து பொருட்கள் தயாரிக்கும் தொழிலை சிறப்பாக செய்ய முடியும். திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ காரியம் கிராமத்தில் இந்த தொழிலுக்கான ஆரம்ப கட்டப் பயிற்சிகளைப் பெறலாம். ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் வாழைநாரிலிருந்து ஹேண்ட் மேட் பேப்பர், டிஷ்யூ பேப்பர், சார்ட்ஸ் போன்ற விதம்விதமான பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார்கள். இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையம் சார்பாக நடத்தப்படும் பல்வேறு கருத்தரங்குகளிலும் இந்தத் தொழிலைப் பற்றிய பயிற்சிகளை வழங்குகிறார்கள்.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு

முறையான திட்ட அறிக்கையுடன் வங்கிகளை அணுகினால் இதில் பெரும்பகுதியை லோன் மூலம் கடனாக பெற முடியும். பி.எம்.இ.ஜி.பி. (PMEGP-Prime Minister Employment Generation Programme) என்ற திட்டத்தின் மூலம் வங்கிகளில் கடன் கிடைக்கும். கிராமப்புறங்களுக்கு 35%, நகர்ப்புறங்களுக்கு 25% மானியமாக கிடைக்கும்.

வாழை அதிகம் பயிரிடப்படும் கிராமப் பகுதிகளை ஒட்டியவாறு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ குறைந்தது 600 சதுர அடி இடமாவது தேவைப்படும். அதில் நமது தேவைக்கேற்றவாறு தொழிற்கூடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வாழை மரத்தில் அறுப்பு முடிந்ததுமே அந்த மரங்களை வெட்டியெடித்து தொழிற்கூடத்துக்கு கொண்டு வர வேண்டும். அங்கு மரத்தின் பட்டைகளை தனித்தனியாய் முழுதாக பிரித்து, அதை நீர் நிரப்பிய ஒரு தொட்டியில் ஊற வைக்க வேண்டும். பிறகு, காய வைத்து, மெஷின்களை பயன்படுத்தி நாரை பிரித்தெடுக்க வேண்டும்.

வருடத்தில் எட்டு மாதங்கள் மட்டுமே வாழை மரங்கள் கிடைக்கும் என்பதால் மீதியுள்ள நான்கு மாதங்களுக்கும் முன்னதாகவே வாழை மரங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கெட்டிங் டிப்ஸ்!

வாழை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாரை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு திருப்பூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நிறைய முகவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் ஜெய்ப்பூரிலுள்ள சங்கதேர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆர்டர்கள் பெற்று அங்கும் அனுப்பலாம். இன்டர்நெட் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.

வாழைநாராக மட்டும் இல்லாமல் அதில் கலைநயமிக்க அழகுப் பொருட்கள், கூடை, பழக்கூடை போன்ற பொருட்களை தயாரித்தால் காதி கிராஃப்ட், பூம்புகார் போன்ற நிறுவனங்கள் கொள்முதல் செய்ய காத்திருக்கின்றன.

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
 
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு