Published:Updated:

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

‘ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை

மேஷம் மனதுக்குப் பிடித்தவர்களுக்கு தாராளமாக உதவும் நீங்கள், நியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள்.

தனாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக இருப்ப தால் எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, வாகன வசதி பெரு கும். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவர் உங்களின் கடின உழைப்பைப் பாராட்டுவார். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். 8-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் புதன் நுழைவதால் பள்ளித் தோழியைச் சந்திப்பீர்கள். ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் வேண்டாம். 2-ம் தேதி முதல் குரு பகவான் 12-ல் மறைவதால் வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள், செலவுகள் வந்து போகும். ராசிக்குள் சூரியன் இருப்பதால் அரசு காரியங்கள் தாமதமாக முடியும். கேது 3-ல் வலுவாக நிற்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரி கள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும்.

திடீர் முடிவுகளால் வெற்றி பெறும் வேளையிது.

ரிஷபம் தவறுகளைத் தட்டிக் கேட்கும் குணமுடைய நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள்.

ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் முகப்பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக் கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். 2-ம் தேதி முதல் குரு பகவான் 11-ம் வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றி உண்டு. புது வேலை அமையும். மழலை பாக்கியம் கிடைக்கும். 2-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 4 மணி வரை எதிலும் நிதானம் தேவை. மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். 3-ல் செவ்வாய் வலுவாக இருப்பதால் உறவினர்கள் மதிப்பார்கள். சொத்துப் பிரச்னை தீரும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் நிற்பதால் கணவருடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். 5-ல் நிற்கும் சனி, பிள்ளைகள் மூலம் அலைச்சலைக் கொண்டு வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் வீண் பழி விலகும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.
விடாமுயற்சியால் சாதிக்கும் நேரமிது.

மிதுனம் நாசூக்காகப் பேசும் நீங்கள், எல்லோரையும் சரிசமமாக மதிப் பீர்கள்.

சூரியன் தொடர்ந்து வலுவாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். கணவருடன் சின்ன சின்ன மோதல்கள் இருந்தாலும் தாம்பத்யம் இனிக்கும். உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். 4-ம் தேதி மாலை 4 மணி முதல் 6-ம் தேதி வரை பயணங்களில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் புதன் 8-ம் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் சோர்வு, சலிப்பு நீங்கும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும். 2-ம் தேதி முதல் குரு 10-ம் வீட்டில் அமர்வதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து செல்லும். மாமனார், மாமியார் சலித்துக் கொள்ளலாம். சிலர் வீடு மாற வேண்டி வரும். தெய்வ நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். வியாபாரத்தில் கமிஷன் வகைகளால் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும்.

வி.ஐ.பி-க்களால் ஆதாயம் அடையும் தருணமிது.

கடகம் கடமை தவறாத நீங்கள், சுயக் கட்டுப்பாடு அதிகம் உள்ளவர்கள்.சூரியன் பலமாக இருப்பதால் புகழ், கௌரவம் ஒரு படி உயரும். வேலை கிடைக்கும். உங்கள் யோகாதிபதி குரு பகவான் 2-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பாராத பண வரவு உண்டு. அக்கம் பக்கம் வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள். மகளுக்கு திருமணம் கூடும். மகனுக்கு இருக்கும் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்ப்பீர்கள். சனி சாதகமாக இருப்பதால் வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். கணவர் மனம் விட்டு பேசுவார். சொத்து சிக்கல்கள் சுமுகமாக முடியும். 7-ம் தேதி முதல் 9-ம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் விவாதம் வந்து நீங்கும். சுக்கிரன் ஆட்சி பெற்று நிற்பதால் நகை வாங்குவீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என நினைத் திருந்த கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புது வேலை வாய்ப்பு தேடி வரும்.
கடின உழைப்பால் சாதிக்கும் நேரமிது.

சிம்மம் 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பதற்கு உதாரணமாக, தன்மானம் அதிகம் உள்ளவர்கள் நீங்கள்.

தைரியஸ்தான அதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பழைய உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால் கணவருடன் மனஸ்தாபம் வரலாம். 9-ம் தேதி மதியம் 3 மணி முதல் 10, 11 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால் தந்தையார் உடல் நலம் பாதிக்கப் படலாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புதன் சாதக மான நட்சத்திரங்களில் செல்வதால் தோழிகள் உதவுவார்கள். கேது சாதக மாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 2-ம் தேதி முதல் 8-ல் குரு மறைவதால் வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் காலமிது.

கன்னி கற்பனையில் மூழ்கும் நீங்கள், எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள்.

6-ல் மறைந்திருந்த குரு பகவான் 2-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் அமர்வதால் கணவருடன் இருந்த மோதல் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்க்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மாமனார், மாமியார் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ஜென்மச் சனி இருப்பதால் சில நேரங்களில் மன இறுக்கத்துடன் காணப்படுவீர்கள். உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். விலை உயர்ந்த வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் ஏற்பாடாகும். மகனை விளையாட்டு பயிற்சிகளில் சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் அதிக வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். பழைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் நேரமிது.

துலாம் 'வெளுத்ததெல்லாம் பால்' என நினைக்கும் நீங்கள், சில நேரங்களில் மனம் விட்டுப் பேசி சிக்கிக் கொள்வீர்கள்.

ராகு தொடர்ந்து சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். ஆடை, அணிகலன்கள் சேரும். வீடு மாறுவீர்கள். பழைய உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மகளுக்கு கல்யாணம் ஏற்பாடாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவருடன் இருந்த பனிப்போர் நீங்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புது வேலை கிடைக்கும். சூரியன் 7-ல் நிற்பதால் கணவருக்கு உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 2-ம் தேதி முதல் குரு 6-ல் மறைவ தால் கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏழரைச் சனி தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். 8-ம் தேதி புதன் 7-ல் அமர்வதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத் தில் பிரச்னை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

சொந்த பந்தங்களால் மகிழும் தருணமிது.

விருச்சிகம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்கும் நீங்கள், யாரேனும் தவறாக பேசினால் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்.
உங்கள் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருப்பதால் சலிப்பு, சோம்பல் நீங்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் வரும். கணவர் பாசமழை பொழிவார். 4-ம் வீட்டில் உட்கார்ந்து கோபப்பட வைத்துக் கொண்டிருக்கும் குரு, 2-ம் தேதி முதல் 5-ம் வீட்டுக்குள் வருவதால், குடும்பத்தில் அமைதி உண்டாகும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சூரியன் 6-ல் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். வேலை கிடைக்கும். செவ்வாய் நீச்சமாகி நிற்பதால் இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்துள்ள உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார்.

தன்னம்பிக்கை துளிர்விடும் வேளையிது.

தனுசு 'எல்லாம் நன்மைக்கே' என்று நினைக்கும் நீங்கள், வாழ்க்கையை அதன் போக்கில் சென்று வாழ்பவர்கள்.

10-ம் வீட்டில் சனி வலுவாக இருப்பதால் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். சொந்தக்காரர்கள் உங்களைத் தேடி வருவார்கள். 2-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் குரு பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். வாகனம் மாற்றுவீர்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவர் சில நேரங்களில் கோபமாக பேசலாம். நீங்கள் உணர்ச்சி வசப்படாதீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளை அதிகம் விரட்ட வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் மோதல்... மச்சினர், நாத்தனார் வகையில் செலவுகள் ஆகியவை வரலாம். சனி வலுவாக இருப்பதால் அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மேலதிகாரி குறை கூறுவார்.

சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரமிது.

மகரம் மன்னிக்கும் குணம் கொண்ட நீங்கள், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 5-ல் ஆட்சி பெற்று அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பாதி பணம் கொடுத்து முடிக்காமலிருந்த வீட்டை மீதி பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவர் உங்களைப் புரிந்து கொள்வார். உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். நாத்தனார், மாமியார் வகையில் உதவிகள் உண்டு. 2-ம் தேதி முதல் குரு 3-ம் வீட்டில் மறைவதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். என்றாலும், சிலர் உங்களை விமர்சிப்பார்கள். செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பதால் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை மாற்றுவீர்கள். நல்ல வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளையிது.

கும்பம் சகிப்புத்தன்மையும், சமயோஜித புத்தியும் கொண்ட நீங்கள், பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள்.

சூரியனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் மதிப்பார்கள். நாத்தனார், கொழுந்தனார் வகையில் உதவிகள் உண்டு. கணவரின் கோபம் குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளை பாக்கியம் உண்டு. 2-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு குரு விலகுவதால் உடல் உபாதை, அசதி, பயம் யாவும் நீங்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாட்கள் அனுசரணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் வீண் பழி விலகும்.

ஏமாற்றங்கள் விலகும் நேரமிது.

மீனம் தன்னைத் தானே உணரும் சக்தி கொண்ட நீங்கள், உதவிக் கேட்டு வந்தவர்களை ஒதுக்க மாட்டீர்கள்.

சுக்கிரன் வலுவாக இருப்பதால், நீங்கள் உற்சாகமடைவீர்கள். வாகனப் பழுது நீங்கும். கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். கணவருடன் மனம் விட்டுப் பேசுவீர் கள். சூரியனும், சனியும் சரியில்லாததால் குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். 2-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளிடம் கோபப்பட்டு பேசாதீர்கள். உறவினர்களுடன் நீங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். 28, 29 ஆகிய தேதிகளில் பய ணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அழகு சாதனங்கள், உணவு வகைகள் மூலம் ஆதாயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள்.

போராடி வெற்றி பெறும் வேளையிது.

ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
 
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
ராசி பலன்கள்! -'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு