உடனே உள்நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன், ஒரு திட்டத்தோடு காரியத்தில் குதித்தான். இளவரசிக்கு பிரியமான பெரிய இசை கடிகாரம் ஒன்றைத் தயாரித்து, அரண்மனைக்கு அனுப்பினான். முன்னதாக அந்தக் கடிகாரத்துக்குள் பதுங்கிக் கொண்டான். இளவரசியின் அறையில் அந்தக் கடிகாரம் வைக்கப்பட்டது. நள்ளிரவில் அவள் தூங்கிக் கொண்டிருக்க, கடிகாரத்திலிருந்து வெளிப்பட்டு, அவளுடைய மோதிரத்தை எடுத்துக்கொண்டு தப்பியவன், அரசனிடம் ஒப்படைத்தான். அந்த இளைஞனின் அறிவுக் கூர்மையை மெச்சி அவனுக்கும், இளவரசிக்கும் திருமணம் செய்து வைத்தான் அரசன்" என்று முடியும் கதை அது.
சொல்லி முடித்ததும்... "மம்மி... அந்த ராஜா, இளவரசியை ஒரு திருடனுக்கா கல்யாணம் பண்ணிக் கொடுத்தாரு..?" என்று என் வாண்டு கேட்க, வியப்பும் சிரிப்பும் பற்றிக் கொண்டது என்னை!
- டாக்டர் கே.ஷமீம்பானு, மதுரை
உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம்.
அனுப்பவேண்டிய முகவரி 'குட்டீஸ் குறும்பு,' அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.
|