Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!
வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150

லீவு போட்டால்... வீட்டுக்கு போன்!

அன்று மாலை நாங்கள் செல்ல வேண்டிய திருமண ரிசப்ஷன் ஒன்று இருக்க, மதியம் ஒரு போன் வந்தது. பேசியவர், "நீங்க நந்தகுமாரோட அம்மாவா? நாங்க அவர் படிக்கற காலேஜுல இருந்து பேசறோம்..." என்று சொல்ல, "ஆமாங்க... என்ன விஷயம்..?" என்றேன் பதற்றத்துடன். "உங்க பையன் அரை நாள் லீவு கேட்கறார். கல்யாணத்துக்கு போகணும்னு சொல்றார். உண்மையானு கேட்கத்தான்..." என்று எதிர்முனையில் பேசியவர் சொல்ல, பதற்றம் தணிந்த நான் "ஆமாங்க... ரிசப்ஷன் நடக்கற இடம் தொலைவா இருக்கேனு நான்தான் அவனை துணைக்குக் கூப்பிட்டேன். நீங்க இப்படி நேரடியா விசாரிக்கறது சந்தோஷமா இருக்கு. அவனுக்கு லீவு கிடைக்கலைனா பரவாயில்ல... நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..."

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

என்றேன். "இல்ல மேடம்... பொய்யான காரணத்துக்காக லீவு போடக்கூடாது பாருங்க... அதுக்காகத்தான் விசாரிச்சோம்!" என்றதுடன், கல்லூரி அலுவலக போன் நம்பரையும் தந்தார்.

இப்போதெல்லாம் என் பையன் லீவு எடுக்கும் சந்தர்ப்பம் வந்தால்... நானே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிவித்துவிடுகிறேன்.

அக்கறையான இந்த விதிமுறையை மற்ற பள்ளி, கல்லூரிகளிலும் பின்பற்றினால் பெற்றவர்கள் ஓட்டு 100%. பிள்ளைகள் ஓட்டு எப்படியோ?!

- என்.மாலதி, சென்னை-91

உறவுகளுக்குள் நோ எக்ஸ்சேஞ்ச்!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

நெருங்கிய உறவினர் ஒருவர், தன் இரு சக்கர வாகனத்தை 'எக்ஸ்சேஞ்ச் மேளா' மூலம் விற்றுவிட்டுப் புதிதாக ஒன்றை வாங்கத் திட்டமிட் டிருந்தார். இன்னொரு உறவினருக்கு 'செகண்ட் ஹேண்ட்' வண்டி தேவைப்படவே, இவரை அணுகினார். வெளியில் விற்பதைவிட குறைந்த விலையைப் பெற்றுக் கொண்டு வண்டியை கை மாற்றினார். ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள்... வண்டியை வாங்கியவர் அதை ஸ்டார்ட் செய்துகொண்டிருக்க, ஏதோ மக்கர் செய்திருக்கிறது. உடனே, "சே... என்ன வண்டி இது? நல்லாதான் ஏமாந்து போனேன். நைஸா என் தலையில கட்டிட்டாங்க..." என்று புலம்பிஇருக்கிறார். அப்போது, தன் அருகில் நின்ற உறவுக்காரர் ஒருவரின் காதில் விழவேண்டும் என்பதற்காகவே அழுந்தச் சொல்லியிருக்கிறார். அவர் நினைத்தபடியே, வண்டியை விற்றவரின் காதுக்கு இந்த விஷயம் சென்று சேர... அவர் மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறார்.

தோழிகளே... உறவுகளுக்குள் வேண்டாம் வண்டி பரிவர்த்தனைகள். எக்ஸ்சேஞ்ச் மேளாவிலோ, வொர்க்ஷாப் மூலமாகவோ யாராவது முகம் தெரியாத வருக்கு விற்றால், இந்தச் சங்கடங்களுக்கு இடம் இருக்காதே!

- எஸ்.பி.சுசீலாதேவி, சென்னை-43

தேனீகிட்ட தப்பிக்க திரும்பி ஓடுங்க!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பூவராக சுவாமியை தரிசனம் செய்யச் சென்றிருந்த நாங்கள், அதை முடித்து வெளியில் வந்தோம். திடீரென தேனீக்கள் படையெடுத்து எங்களைத் துரத்த... மற்றவர்கள் சட்டென்று காருக்குள் தஞ்சம்புகுந்துவிட, நானும் என் மகளும் மாட்டிக் கொண்டோம். காருக்குள் இருந்தவர்கள், எங்களைக் காப்பாற்ற வர முடியாதபடி தேனீக்கள் வட்டமிட, அருகிலிருந்த ஒரு வீட்டுக்குச் சென்று கதவைத் திறக்குமாறு வேண்டினோம். "ஐயோ... தேனீக்கூட்டம் உள்ள வந்துடும்..." என்று பயந்து மறுத்த அதேசமயம், "பின்பக்க தோட்டத்துக்கு ஓடுங்க... தேனீ உங்கள விட்டுட்டுப் போயிடும்" என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர். வேறுவழியின்றி நாங்கள் தோட்டத்துக்கு ஓட, என்ன ஆச்சர்யம்... எங்கள் தலையைச் சுற்றியிருந்த நான்கைந்து தேனீக்களைத் தவிர, 'உய்' என்று எங்களை துரத்துக்கொண்டிருந்த மற்ற தேனீக்கள் எல்லாம் போயே போச்!

"தேனீ எந்தத் திசையில பறக்குதோ அதே திசையிலதான் பறந்துட்டே இருக்கும். நீங்க திசையை திருப்பி எதிர் திசையில இருந்த தோட்டத்துக்கு வந்ததால, அதெல்லாம் ஓடிப்போயிருச்சு..." என்று விளக்கமளித்தார் தோட்டத்துக் கதவு வழி வெளிவந்த வீட்டுக்காரர்!

டெக்னிக்கல் டீடெய்ல்தான்!

- ஏ.புஷ்பலதா, பம்மல்

மூதாட்டியின் பொறுப்பு உணர்வு!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

பெண் டாக்டர் ஒருவரின் கிளினிக்கில் நான் வரிசையில் காத்திருந்தபோது, வயதான மூதாட்டி ஒருவர் உள்ளே வந்தார். அவரை அங்கிருந்த பணிப்பெண் வரவேற்று, டாக்டரின் அறைக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டார். அதற்கு அந்த மூதாட்டி, "டாக்டர் எல்லாரையும் பார்த்து முடிக்கறவரை நான் காத்திருக்கேன். நான் வந்திருக்கேனு டாக்டர்கிட்ட சொல்ல வேணாம்..." என்று பணிப்பெண்ணிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

பிறகு, விசாரித்தபோது, பணிப்பெண் சொன்ன செய்தி வியப்படைய வைத்தது. இந்த மூதாட்டியின் மகள்தான் அந்த டாக்டர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைப் பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து வந்திருக்கிறார். தன்னைப் பார்த்தால்... ஆர்வத்தில் நோயாளிகளுக்கு வேகமாக சிகிச்சையளித்து சீக்கிரம் அனுப்ப முயற்சிப்பாள் மகள் என்பதாலேயே தான் வந்ததை அவரிடம் தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டாராம் மூதாட்டி.

அந்தத் தாயின் பொறுப்பு உணர்வு என்னை நெகிழ வைத்தது!

- நூருன்னிசா தாஜுதீன், தஞ்சாவூர்

ஏ.சி. கடையில் தாட்பூட்... பிளாட்பார கடையில் கட் கட்!

என் அம்மாவுடன் தி.நகரில் ஷாப்பிங் சென்ற எனக்கு, கிடைத்தது அந்த கசப்பான அனுபவம். ஒரு பெரிய துணிக்கடையில் அநியாய விலையிலிருந்த ஆடைகளை ஆறாயிரத்துக்கு அள்ளினார் என் அம்மா.

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

பிறகு, பிளாட்பார ஷாப்பிங்... சிறுவர்கள் விற்றுக்கொண்டிருந்த சில்லறை சாமான்களை பாதிக்குப் பாதி குறைத்துப் பேசி வாங்கினார். அடுத்ததாக, "காய்கறி வெலயெல்லாம் ஏறிப்போச்சும்மா... கட்டுப்படியாகாதும்மா..." என்ற காய்கறிக் கடைக்காரரிடம் வம்படியாக இரண்டு ரூபாய் குறைத்துக் கொடுத்தார். "மூணு பத்து ரூபா..." என்று கர்சீஃப் விற்றுக் கொண்டிருந்த தாத்தாவிடம், "நாலுனா வாங்கிங்கறேன்..." என்றபோது, பொறுமை கரைந்த நான், "ஏம்மா... ஏ.சி. போட்ட துணிக்கடையில, அவங்க எழுதி வச்சுருக்கறதுதான் விலைனு வலியப்போய் காசைக் கொட்டற... இப்படி அஞ்சுக்கும், பத்துக்கும் உழைக்கறவங்ககிட்ட கஞ்சத்தனம் காட்டற..." என்று பொருமித் தள்ளினேன்.

ஆனால், அதையெல்லாம் அவர் காதிலேயே வாங்கிக்கொள்ள வில்லை. என் அம்மா மட்டுமல்ல... இன்று பலரின் மனநிலையும் இதுதான். திருந்துவார்களா இந்த 'பொருளாதார மேதைகள்'..?!

- பி.புவனா, சென்னை-75

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
-ஓவியங்கள் ஹரன்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism