பதினைந்து ஆண்டுகளுக்கு முன், நண்பர்கள் குடும்பம் புடைசூழ நானும், கணவரும் சுற்றுலா சென்றிருந்தோம். ஏதோ ஒரு பூங்காவில் பூத சிலையைப் பார்த்ததும், அங்கே நின்று கொண்டு போட்டோ எடுக்கச் சொன்னோம். "இந்தப் பூதத்தைப் பார்த்தா... எங்களுக்கே பயமாயிருக்கு. உங்களுக்குப் பயமே இல்லையா?" என்று கலாய்த்தனர் என் கணவரும் தோழியின் கணவரும். நாங்களோ... ஒரே குரலில், "உங்களோட எல்லாம் குடும்பம் நடத்தறதுக்கே நாங்க பயப்படல... இந்தப் பூதத்துக்கா பயப்படுவோம்?" என்றோம். அப்போது அவர்களின் முகம் போன போக்கைப் பார்த்து, நான் வாய் விட்டுச் சிரிக்க... சட்டென்று 'கிளிக்'கிவிட்டனர்.
- சுபா தியாகராஜன், சேலம்
சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் உங்கள் வீட்டுப் பரணிலும் இருக்கிறதா? எடுங்கள் அவற்றை. சம்பவங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். (குறிப்பு கடிதத்தில் உங்களின் முழு முகவரி, தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம். புகைப்படங்களை கண்டிப்பாகத் திருப்பி அனுப்ப இயலாது).
முகவரி 'போட்டோ அனுப்புங்க... சேதி சொல்லுங்க!'
அவள் விகடன், 757, அண்ணாசாலை,
சென்னை-600 002
|