"இதை வெறும் ஹாபியாக மட்டும் நினைக்காமல், ஒரு தவம் போல் நினைத்துச் செய்கிறேன். என் வாழ்வாதாரத்தை பெருக்கும்விதமாக, என் பெயின்ட்டிங்குகளை லட்சம் ரூபாய்க்கு மேல் விற்றிருக்கிறேன். என் குரு ராமசுரேஷூக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்" எனும் சுவேதா, 'போர்ட்ரைட்' எனப்படும் மனித உருவங்களை வரைவதில் கில்லாடி. பாடகர் உன்னிகிருஷ்ணனை தத்ரூபமாக வரைந்து அவருக்கு பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.
இவரிடம் விருதுகளுக்கும் பஞ்சமில்லை. 2007-ம் ஆண்டுக்கான யுவகலாபாரதி விருது உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். தனது படைப்புகளையெல்லாம் தனி கண்காட்சியாக வைக்கும் முயற்சியில் இருக்கும் சுவேதாவை நாமும் வாழ்த்துவோம்!
வித்யார்த்தி... ஒன்றரை வயதில் தன் பாட்டியின் வாக்கிங் ஸ்டிக்கை பார்த்து வரைந்ததுதான் இவரின் முதல் ஓவியம்! ஓவியத்துக்காக இவர் முதல் முறையாக பரிசு பெற்றது மூன்றாம் வகுப்பில். வங்கியில் பணிபுரியும் வித்யார்த்தியின் அம்மா உமா மகேஸ்வரிதான் ஒலியற்ற அவர் உலகத்தின் இசை. வரைய ஊக்குவித்தது, அவர் உலகத்தை பென்சில்களாலும், பெயின்ட்டுகளாலும் நிறையச் செய்தது, ஓவியப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றது... என அக்கறை காட்டிய அவருடைய அம்மாதான்... இன்று வித்யார்த்தி ஒரு தேர்ந்த ஓவியர் ஆகி இருப்பதற்கான முதல் துணை!
சென்னை ஓவியக் கல்லூரியில், வர்ணக்கலை இறுதியாண்டு பயின்று வரும் வித்தியார்த்தி, இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு தன்னுடைய ஓவியங்களை விற்பனை செய்துள்ளார். அதிகபட்சமாக, ரூ.47,500 வரை விற்பனையானது ஒரு ஓவியம். காமன்வெல்த் ஓவியப் போட்டி, தேசிய ஒவியப் போட்டி ஆகியவற்றில் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
|