Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

Published:Updated:

கொஸ்டீன் ஹவர்
கொஸ்டீன் ஹவர்
கொஸ்டீன் ஹவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங்... எங்கே படிக்கலாம்... என்னென்ன வேலைகள் கிடைக்கும்?''
கொஸ்டீன் ஹவர்

"சிறு வயதில் இருந்தே என் தம்பிக்கு விமானங்கள் மீதும் விண்வெளி மீதும் கொள்ளை ஆர்வம். அடுத்த வருடம் மேல் படிப்பை தீர்மானிக்க வேண்டிய தருணம். 'ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங்' டிகிரிக்கே முதலிடம் தந்து முயற்சிகளை தொடர இருக்கிறான். இப்படிப்பு குறித்த ஏ டு இஸட் தகவல்களை அளித்தால் பேருதவியாக இருக்கும்" என்று கேட்டிருக்கும் தூத்துக்குடி ஆர்.விஜிதாவுக்காக பதில் சொல்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வியியலாளரும், தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியருமான டாக்டர் வெ.சுகுமாரன்.

"விமானங்கள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள், தளவாடங்களை வடிவமைப்பது மற்றும் கட்டமைப்பது குறித்த படிப்பே ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங். ஆர்வமும் தகுதியும் இருக்கும் எவரும் இப்படிப்பில் ஜொலிக்கலாம். இந்தப் படிப்புக்கு அரசு மற்றும் தனியார் துறை விமான நிறுவனங்களின் விமான வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் சார்ந்த துறைகளில் பிரகாசமான வேலை வாய்ப்பு இருக்கிறது. நம் நாட்டு 'இஸ்ரோ', அமெரிக்காவின் 'நாசா' போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் சிவப்புக் கம்பள விரிப்பு காத்திருக்கிறது.

மத்திய அரசின் பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (DRDO-Defence Research and Development Organisation) பணிபுரிவதன் மூலம் நாட்டுக்குச் சேவை செய்த பெருமிதத்தையும் பெறலாம். தற்போதை காலம், தகவல்-தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதால், ஏரோநாட்டிக்ஸ் சார்பான தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

அதிகம் சம்பாதிக்க மட்டுமல்ல... செய்யும் பணியில் சவால்களை சந்திக்கவும், வாழ்வில் புதுமையான தருணங்களைத் தரிசிக்கவும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு உதவும்.

கொஸ்டீன் ஹவர்

இதில் சேர விரும்புபவர்கள், ப்ளஸ் டூ-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களோடு உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மற்ற பொறியியல் படிப்புகளைப் போல, இந்தப் பாடப் பிரிவானது எல்லா பொறியியல் நிறுவனங்களிலும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பாடமும் செய்முறைப் பயிற்சியும் மற்ற பொறியியல் படிப்புகளிலிருந்து வேறுபட்டிருப்பதே காரணம். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை, ஐ.ஐ.டி-சென்னை, எம்.ஐ.டி - குரோம்பேட்டை மற்றும் சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே இந்தப் படிப்பு இருக்கிறது.

கொஸ்டீன் ஹவர்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் பொறியியல் கல்லூரிகளில் ப்ளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையிலும், ஐ.ஐ.டி-யில் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வின் (JEE-Joint Entrance Examination) அடிப்படையிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் பிரத்யேக தேர்வின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அகில இந்திய அளவில் நடைபெறும் ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத் தேர்வு (AIEEE-All India Engineering Entrance Examination) மூலம் கிடைக்கும் மதிப்பெண்கள், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற என்.ஐ.டி. (N.I.T- National Institute of Technology) கல்வி நிறுவனங்களில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் கோர்ஸில் சேரும்போது முன்னுரிமை கிடைப்பதற்குப் பயன்படும்.

புகழ்பெற்ற பிர்லா குழுமத்தின் பிட்ஸ் பிலானி மற்றும் இஸ்ரோ நிறுவனமே திருவனந்தபுரத்தில் நடத்தும் ஐ.ஐ.எஸ்.எஸ்.டி. (IISST-Indian institute of Space and Science Technology) நிறுவனத்திலும் பி.டெக். ஏரோநாட்டிக்கல் படிப்பு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இவற்றில் சேர்வதற்கு, இந்நிறுவனங்கள் நடத்தும் பிரத்யேக நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம். இந்நிறுவனங்களின் இணையதளத்தில் சேர்க்கை, விண்ணப்பம், நுழைவுத்தேர்வு இத்யாதி தகவல்களைப் பெறலாம்.

கொஸ்டீன் ஹவர்

இந்தக் கல்வியாண்டு (2010-11) முதல்... திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விண்வெளி ஆய்வுத் தொடர்பான துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்கும் வகையில் பி.இ. ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் (BE-Geo Informatics) படிப்பு கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து எம்.டெக்., பிஹெச்.டி. வரை படிப்பைத் தொடரவும் இங்கு வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

பொதுவாக, அரசு நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது சிறப்பானது. தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், பிராக்டிகலுக்கான வசதிகள் போதுமான அளவுக்கு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்."

கொஸ்டீன் ஹவர்
-
கொஸ்டீன் ஹவர்
கொஸ்டீன் ஹவர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism