ஒரு கட்டத்துல, 'இதுவரைக்கும் சரி... இனி நீதான் உன் சொந்த முயற்சியில களத்துல இறங்கணும்"னு அவர் சொல்ல... எழுத்து, மொழி, கலை, அறிவியல்னு எல்லாத் துறைகள்லயும் என்னோட பார்வை பதிஞ்சுச்சு. கல்லூரி வந்ததுக்கு அப்புறம் அது இன்னும் விசாலமாச்சு!"னு சொல்ற உதயா... எழுத்து, பேச்சுக்காகவே இன்ட்ரா காலேஜ், இன்டர் காலேஜ், டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட், நேஷனல் லெவல் போட்டிகள்ல பரிசுகள் வாங்கியிருக்காங்க. ஆங்கிலப் பத்திரிகைகள் நேஷனல் லெவல்ல நடத்தின பொதுஅறிவு தேர்வுல 'ரேங்க் அவார்டு' வாங்கியிருக்காங்க.
இதுவரை எழுதியிருக்கற 90 கட்டுரைகள்ல 75 கட்டுரைகள் பரிசு வாங்கியிருக்கு. அதுல 35 கட்டுரைகள் மதுரை, காமராஜ் பல்கலைக்கழகம்; காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்னு சில பல்கலைக்கழகங்களோட பிரத்யேக புத்தகங்கள்ல இடம்பிடிச்சிருக்கு. டாக்டர் பட்டம் வாங்கினவங்களோட தொகுப்புகள் மட்டுமே இடம்பிடிக்கற புத்தகம் அதுங்கறதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்.
''இலக்கியம், ஆன்மிகம், உளவியல், ஆய்வு கட்டுரைனு எல்லா துறைகள்லயும் நான் எழுதற கட்டுரைகள் மூலமா 'பல்கலை ஆர்வலர் விருது', 'சாதனை பெண்மணி விருது'னு எனக்கு நிறைய கௌரவம் கிடைச்சிருக்கு!" என்று சொல்லும் உதயா...
"கட்டுரைகள் வெளிவர்றதுல பல செஞ்சுரிகள் அடிக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம். அதைத்தான் என் பேனாகிட்ட எப்பவுமே சொல்லிட்டே இருக்கேன்!"
- புன்னகைக்கிறார் உதயா!
|