இந்த ஆர்வத்தால் தன்னிடமிருந்த கேமரா மொபை லில் தன்னைத் தானே விதவிதமாக, அழகழகாக புகைப்படம் எடுத்து, அவற்றைத் தோழிகளுக்கும் குடும்பத்தினருக்கும் அவ்வப்போது காட்டி, "ஏய் நல்லாயிருக்குப்பா..." என்று அவர்களிடமிருந்து காம்ப்ளிமென்ட் வாங்கி சந்தோஷப்படுவது அவரது ஹாபியாகிப் போனது. இந்தப் பொழுதுபோக்கே... விபரீத பொறியில் அவரை சிக்கவைக்கும் என்று எவர்தான் நினைத்திருப்பார்கள்?!
அன்று அப்படித்தான் புதிதாக தான் வாங்கிய உள்ளாடையை அணிந்து பார்த்த பவித்ராவுக்கு, அந்த பிராண்ட் உள்ளாடையை அணிந்து போஸ் தந்து கொண்டிருக்கும் மாடல் பெண்ணைவிட, அது தனக்கு எடுப்பாக இருப்பதாகப் பட்டது. தனது தரப்பை தோழிகள் நம்ப வேண்டுமே?! எடுத்தார் கேமரா மொபலை. க்ளிக்கினார் உள்ளாடையோடு பல படங்கள்! இம்முறை இந்தப் படங்களை வீட் டில் உள்ளவர்களுக்கு காட்டவில்லை பவித்ரா. தன் கிளாஸ் ஃப்ரெண்ட்ஸான நான்கு தோழிகளிடம் மட்டும் காட்டினார்.
அதில் ஒரு விஷம மாணவி, புளூடூத் மூலம் அந்தப் படத்தை சுட்டு, சுற்றுக்குவிட, இன்றைக்கும் அந்தப்படங்கள் இணையத்திலும், விவஸ்தை கெட்டவர்களின் செல்போன்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. பொறியியல், மாடலிங் இரண்டு கனவுகளும் கானலாகி விட, வெளியில் தலைகாட்ட முடியாத பவித்ராவின் குடும்பம், தொடர்புகளை அறுத்துக்கொண்டு இப்போது எங்கோ ஒரு ஊரில் இருக்கிறது.
நம்மூர் கல்லூரி மாணவிகள் மத்தியில் பவித்ராவின் உதா'ரணங்கள்' ஏராளம். தமிழகத்தின் கட்டுப்பெட்டியான தென் மாவட்ட பெண்கள் கல்லூரி ஒன்றிலிருந்து கோவா டூர் சென்றார்கள். ஆர்வக்கோளாறு மாணவிகள் கூட்டமொன்று ஆளரவமற்ற இடத்தில் நீச்சல் போட்டு, குறைந்த, நனைந்த உடைகளுடன் இருந்த தங்களை ஜாலியாக செல்போனிலும் பதிவு செய்துகொண்டது. அந்த செல்போன் சர்வீசுக்குப் போன இடத்தில், அந்தக் காட்சிகள் சி.டி-யில் பதியப்பட்டு மதுரையில் கன்னாபின்னாவென்று நாறியது.
"இந்த உதாரணங்கள் வெகு சாதாரணமானவை. தங்களின் ஆர்வக்கோளாறால் எழுதவே கூசும் அளவுக்கு சைபர் உலகின் விஷப்பசிக்கு இரையாகும் மாணவிகள் ஏராளம். எம்.எம்.எஸ், வெப்காம் என நவீன தொழில்நுட்பத்தின் எதிர்மறை நிழலில் இளம்பெண்கள் தெரிந்தே செய்யும் அலட்சியத் தவறுகள் பல..." என்று ஆரம்பித்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, அப்படி தான்னைத் தானே 'க்ளிக்கி' பரிதாப நிலைக்கு ஆளான அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறினார்.
"கண்ணியமான கல்லூரிப் பெண்ணான அவளை காதலிப்பதாகச் சொன்ன தன் கிளாஸ்மேட்டை 'ஸாரி' என்று சிம்பிளாக புறக்கணித்தாள் அவள். கல்லூரிப் படிப்பு முடிந்தது. வேலைக்காக வெளிநாடு சென்றவன், நண்பர்களிடம் இவளின் மொபைல் நம்பர் வாங்கிப் பேச, முன்பு 'நோ' சொன்னவள், 'ஃபாரின் போயும்கூட நம்மளையே நினைச்சுட்டு இருக்கானே' என்று உருகி, அவன் காதலுக்கு இப்போது 'யெஸ்' சொல்லியிருக்கிறாள்.
பரஸ்பர பேச்சுப் பகிர்தல்கள் ஒரு கட்டத்தில் பரஸ்பர புகைப்பட பகிர்தல்களாகி இருக்கிறது. இறுதியில், தன் அந்தரங்கப் புகைப்படங்களைத் தானே எடுத்து, அவனுக்கு மெயில் அனுப்பியிருக்கிறாள் இவள்... 'இவன்தானே என் புருஷனாகப் போறான்' என்ற நம்பிக்கையில். ஆனால், அவனுக்கு அங்கேயே வசதியான என். ஆர்.ஐ. பெண் கிடைக்க, இவளின் நச் சரிப்பை அடக்க தன் கைவசமிருந்த அவளது ஏடா கூட படங்களை துருப்புச் சீட்டாக்கினான் அவன். அந்தப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று அவன் மிரட்ட, மனமொடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றவளை உயிர்த்தோழிகள் அரவணைத்து போலீஸில் புகார் கொடுக்க வைத்தனர். அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட, சுப திருப்பமாக இப்போது அவனே முன் வந்து இவளை மணந்துள்ளான்" என்ற வனிதா,
"இப்போது பல கல்லூரி மாணவிகளும் ஆசைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், தோழி களுடனான ஜாலி தருணங்களுக்காகவும், காதல னிடம் பகிர்ந்து கொள்வதற்காகவும் என, தங்கள் செல்போனில் தங்களைத் தாங் களே இப்படி அந்தரங்கமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது, பெருகி வருகிறது. சட்டத்தின் பார்வையில் இப்படி கேமராவில் தவறான படங் களை எடுப்பதும் அதை பரப்பு வதும், பகிர்ந்து கொள்வதும் குற்றமே. அப்படிப் பார்த்தால், இதில் முதல் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பெண்களே.
|