Published:Updated:

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாமான்ய பெண்களின் சாதனை கதை

Published:Updated:

சாமான்ய பெண்களின் சாதனை கதை
கு.ராமகிருஷ்ணன்
சாமான்ய பெண்களின் சாதனை கதை
சாமான்ய பெண்களின் சாதனை கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வழிகாட்டுகிறார் 'பேப்பர் கப்' மும்தாஜ்

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

சாமான்ய பெண்களின் சாதனை கதை

காலைக் கட்டிய குடும்பக் கட்டுப்பாடுகள், சிறுவயது திருமணம், வறுமை, கடன் என்று துன்பங்கள் துரத்திய தன் வாழ்க்கையை எதிர்த்து நிற்க, பேப்பர் கப் பிஸினஸை துடுப்பாக்கிய மும்தாஜ் பேகம் பற்றி 'பேராட்ட வாழ்க்கைக்கு முடிவு கட்டிய பேப்பர் கப்' என்ற தலைப்பில் கடந்த இதழில் கட்டுரை வெளியானது. பல்வேறு இடர்களுக்கு இடையில் அந்தத் தொழிலில் பலமாக காலூன்றியதையும், இத்தொழிலில் இறங்க நினைப்போருக்குத் தேவையான வழிகாட்டல்களையும் இப்போது தொடர்கிறார் மும்தாஜ் பேகம்.

''ஏற்கெனவே, 13 பேரோட ஒரே குழுவாக இணைஞ்சி செய்தபோதே பேப்பர் கப் தொழிலில்ல வெற்றி பெற முடியல... கைவிட்டுட்டோம். ஆனாலும், தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு தனியாளா நான் இறங்கவும்... 'ஊரே சேர்ந்து இழுக்க முடியாத தேரை, இவ ஒருத்தியா நின்னு இழுத்துடுவாளா?'னு பலபேர் கிண்டல் செஞ்சாங்க. என்மேல அக்கறை உள்ளவங்களோ... 'மறுபடியும் ஏன் அதுல போய் மாட்டிக்கப் போறே?'னு கவலையோடு கேட்டாங்க. ஆனா, அப்போ வேகமா வளர்ந்துட்டிருந்த பேப்பர் கப்புகளுக்கான டிமாண்ட், என்னோட நம்பிக்கையை அதிகரிச்சுட்டே இருந்துச்சு.

மறுபடியும் களத்துல இறங்கறதுல தீர்மான இருந்த நான், அதுக்கு முன்ன... 'குழுவா சேர்ந்து செய்தப்ப ஏற்பட்ட தோல்விக்கு என்ன காரணம்?னு அலசிப் பார்த்தேன்" என்பவர், அதை மிக நுட்பமாக யோசித்து, தனக்குள்ளேயே பட்டியலிட்டு, ஒரு தெளிவான முடிவோடு வெற்றிக்கான திட்டத்தை வகுத்திருக்கிறார்.

சாமான்ய பெண்களின் சாதனை கதை

"குழுவுல பேப்பர் கப்கள் தயாரிச்சப்போ, தொலை தூரத்துல இருக்கற ஒரு நிறுவனத்துகிட்ட அதிக செலவுல மூலப்பொருட்கள் வாங்கியிருந்தோம். கூடவே, லாபத்துக்கு கட்டுப்படியாகாத கூலியை நிர்ணயிச்சிருந்தோம். இந்த ரெண்டும்தான் நாங்க பண்ணின தவறுகள்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனால, மூலப்பொருள் செலவையும், உழைப்புக்கான கூலியையும் கணிசமா குறைச்சுட்டாலே கண்டிப்பா லாபம் கிடைச்சுடும்னு உறுதியா நம்பினேன். ஆனா, அதை எப்படி குறைக்குறதுனு அப்ப தெரியல" என்பவர், அதற்கான தேடலை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

சாமான்ய பெண்களின் சாதனை கதை

"ஏதாவது வழிகாட்டல் கிடைக்குமானு சதா சர்வகாலமும் இது சம்பந்தப்பட்டவங்ககிட்ட எல்லாம் விசாரிச்சுக்கிட்டே இருந்தேன். ஏற்கெனவே வெற்றிகரமா பேப்பர் கப் தொழில் செய்ற சிலரோட அட்ரஸ கண்டுபிடிச்சு போய் விவரங்கள கேட்டேன். ஆனா, 'எங்களுக்கே பெருசா ஒண்ணும் லாபம் கிடைச்சுடல'னு சொன்னாங்க. அதுல உண்மைஇல்லனு தெரிஞ்சுகிட்ட நான், சோர்ந்து போகாம, குறைவான உற்பத்தி செலவுக்கான வழிகளை தேடி பயணிச்சுக்கிட்டே இருந்தேன்.

சாமான்ய பெண்களின் சாதனை கதை

ஒரு நாள் பேப்பரை புரட்டிக்கிட்டிருந்தப்ப... 'சிறு, குறு, மத்திய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம், தஞ்சாவூரில் நடக்கிறது'னு சின்னதா இருந்த ஒரு நியூஸ் என் கண்ணுல பட்டுச்சு. உடனே கிளம்பிப் போனேன். இந்தத் தொழில்ல ஏற்பட்ட நஷ்டத்தைப் பத்தி அங்க இருந்த அதிகாரிகள்கிட்ட சொன்னேன். 'ஆட்டோமேட்டிக் மெஷின்'ல செஞ்சிருந்தா நஷ்டம் வந்துருக்காதுனு சொன்னாங்க. கூடவே, அந்த மெஷின் வாங்கறதுக்கான வழியும் கிடைச்சது" என்றவர்,

"ஈரோட்டுல ஒரு நிறுவனத்துல, '7 லட்ச ரூபாய்க்கு ஒரு ஆட்டோமேட்டிக் மெஷின் இருக்கு. ஒரு நிமிஷத்துக்கு 45 கப் தயாரிக்கலாம். நாங்களே குறைவான விலையில மூலப்பொருள் கிடைக்கவும் ஏற்பாடு செஞ்சு தர்றோம். விற்பனைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர்றோம்'னு சொன்னாங்க. நாங்க சுயஉதவி குழுவுக்காக ஏற்கெனவே வேற ஒரு கம்பெனியில மேனுவல் மெஷின் வாங்கினப்பவும் இதேமாதிரிதான் சொன்னாங்க. ஆனா, எந்த உதவியும் செய்யல. அவங்கள மாதிரியே இவங்களும் சொல்றாங்களோனு சந்தேகப்பட்டு, வெளியில விசாரிச்சேன். திருப்தியான பதில் கிடைக்கவே துணிச்சலோடு மெஷினை வாங்கிட்டேன்" என்பவருக்கு, அதன்பின் கிடைத்திருக்கிறது வெளிச்சம்.

"எதிர்பார்த்த மாதிரியே ஆட்டோமேட்டிக் மெஷின்ல வேஸ்டேஜ் அதிகம் விழல. மூலப்பொருள், கூலி, பேக்கிங், பிரின்ட்டிங்னு எல்லாம் போட்ட கணக்குக்குள்ள வந்தது. நிதானமா மார்கெட்டிங்கும் பழகினேன். அதுக்கு நல்ல பலன் கிடைச்சுக்கிட்டிருக்கு.

சாமான்ய பெண்களின் சாதனை கதை

பேப்பரும், அடிபாட்டமும்தான் இந்தத் தொழிலுக்கு அடிப்படையான மூலப்பொருட்கள். ஏற்கெனவே சுயஉதவிக்குழு மூலமா தயாரிச்சப்ப... கொஞ்சம் கொஞ்சமா பேப்பர் வாங்கினோம். ஆனா, கணக்கு வழக்கெல்லாம் சரியா பார்க்காம, இஷ்டத்துக்கு செலவு பண்ணி தயாரிச்சோம். இஷ்டம்போல விலை வச்சோம். நஷ்டம் ஏற்பட்ட பிறகுதான், கணக்கு பார்த்தோம். ஒரு கப் தயாரிக்க 32 பைசா செலவாகியிருக்கு, 32 பைசாவுக்குதான் வித்திருக்கோம்ங்கறது தெரிஞ்சுது.

இப்போ சராசரியா ஒரு நாளைக்கு 45 ஆயிரம் கப் தயாரிக்குறோம். பேப்பரை சிவகாசியில இருந்தும், அடிபாட்டத்தை கோயம்புத்தூர்ல இருந்தும் டன் கணக்குல வாங்கி கட் பண்ணிக்குறோம். மாவட்ட தொழில் மையம் மூலமா சிறுதொழிலுக்கான மின் இணைப்பு மானியத்துல வாங்கினதால ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 50 பைசாதான் கட்டணம். அப்படி இப்படினு பார்த்தா... ஒரு கப்புக்கு 24 பைசா செலவாகுது. மொத்த வியாபாரிகள்ட்ட 29 பைசானு விக்கிறேன். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் கிடைக்குது. வெறும் மூணு பேர் இருந்தாலே ஒரு நாளைக்கு சராசரியா ஒரு நாளைக்கு 45 ஆயிரம் கப் தயாரிக்குறோம். அப்பப்ப பேப்பர் பிளேட்டும் தயாரிக்கிறோம்'' என்று விவரங்களை அடுக்கி முடித்த மும்தாஜ்,

''ஏற்கெனவே நான் பட்ட தோல்விகூட வீண் போகல. துணிச்சலோடு அதைத் திரும்பிப் பார்த்ததுனாலதானே இந்த வெற்றியை அடைஞ்சிருக்கேன்!"

- உற்சாகம் ததும்பச் சொன்னார் கட்டை விரல் உயர்த்தியபடி!

சாமான்ய பெண்களின் சாதனை கதை
-சாதனைகள் தொடரும்...
சாமான்ய பெண்களின் சாதனை கதை
சாமான்ய பெண்களின் சாதனை கதை
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism