Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

நமக்குள்ளே...
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே ....

'பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால், பணமே வாழ்க்கையாகி விடுவதுமில்லை'

- இது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அன்றைய தலைமுறைக்கு சர்வசாதாரணமாக வாரி வழங்கப்பட்ட அறிவுரை.

இன்றைக்கு இதைச் சொன்னால்... அவர்களை ஏற இறங்க பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். காரணம், 'பணம் மட்டுமே வாழ்க்கை' என்றுதானே இன்று அதிகம் போதிக்கப்படுகிறது தோழிகளே. இன்றைய தலைமுறைக்கும் அதுதானே மிகவும் பிடித்திருக்கிறது.

விதம்விதமான நகைகள், வேலைப்பாடுகள் அமைந்த புடவைகள், லேட்டஸ்ட் மாடல் செல்போன்கள், கார், பங்களா... என்று நம் வாழ்க்கையை ஆடம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அதன் எதிர்விளைவாக சத்தமில்லாமல் மிகப்பெரிய சதியே நடந்து கொண்டிருக்கிறது... அது, உறவுச் சீர்குலைவு!

அதைப் பற்றி விரிவாகவே பேசுகிறது இந்த இதழில் இடம் பிடித்திருக்கும் 'பணம் தேடும் ஆசையில் பறிபோகும் உறவுகள்...' என்ற கட்டுரை!

இங்கே... எப்போதோ படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது தோழிகளே...

'மிடில்கிளாஸ் மாதவன்' என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைத்ததும் ஆசை ஆசையாக புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கி வாசலில் நிறுத்தினார். அதில் உள்ள வசதிகளையும், விலை குறைத்து வாங்கிய சாமர்த்தியத்தையும் மனைவியிடம் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களின் ஏழு வயது மகன், ஓடிப்போய் காரில் எதையோ கிறுக்க... வந்ததே 'மாதவ'னுக்கு கோபம். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, பையனை விளாசிவிட்டார். பையனின் விரல்கள் வீங்கிவிட, டாக்டரிடம் ஓடினார்கள். கடைசியில், சுண்டுவிரலை அகற்ற வேண்டியதாகிவிட்டது.

மறுநாள் காலையில், 'காரில் அப்படி என்னதான் கிறுக்கினான்' என்று 'மாதவன்' போய் பார்த்தபோது அங்கே கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது -

'டாடி, ஐ லவ் யூ வெரி மச்!'

வெட்கித் தலைகுனிந்தார் அவர்.

இன்றைக்கு வெற்றியின் அளவுகோலே... பணமாகத்தான் இருக்கிறது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை, கணவன். மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், அண்டை வீட்டார் என்று எல்லோரிடமும் ஒருவித எதிர்பார்ப்புடனேயே பழகுகின்ற பாங்கும் அதிகரித்து, மனித மதிப்பீடுகள் குறைந்து கொண்டே இருக்கின்றன என்பதை அறியாதவர்களல்ல நாம்.

பணம் தேவைதான். அதற்காக ஓடித்தான் ஆகவேண்டும். ஆனால், ஓட்டத்துக்கு நடுவே ஓய்வு எடுப்பது போல, மனித உறவுகளுக்கும் சற்றே மதிப்பளிக்கும்போது... நம் ஓட்டம் தடைப்படத்தான் செய்யும். ஆனால், அது நம்முடைய தொடர் ஓட்டத்துக்கு 'ரீ-சார்ஜ்' என்பதாகவே அமையும். அப்படித்தானே தோழிகளே..?

இளைப்பாறி ஓடக் கற்றுக் கொள்வோம்... கற்றுக் கொடுப்போம் - எதிர்கால தலைமுறைக்கும்!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....

ஆசிரியர்

நமக்குள்ளே ....
-
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism