Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பிசியோதெரபி மூலம் எந்தெந்த பிரச்னைகளுக்கு தீர்வைத் தேட முடியும்?''

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

"நானும் என் கணவரும் நீண்ட காலமாக உடலின் பல்வேறு வலி தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுகிறோம். மருந்து, மாத்திரைகள்... தற்காலிக நிவாரணமாக பயன்படுகிறதே ஒழிய, நிரந்தரத் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில் என் தோழி, 'உனக்கான தீர்வு பிசியோதெரபியில் கிடைக்கலாம்' என்றாள். ஆனால், நாங்கள் அறிந்தவரை கரன்ட் மூலமாக அளிக்கப்படும் சிகிச்சையாகவே இருக்கும் பிசியோதெரபியில் எந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும், அவற்றை எந்தெந்த நிலைகளில் நாடலாம் என்று தெரிய வில்லை. விளக்கம் கிடைத்தால் உதவியாக இருக்கும்..." என்று கேட்டிருக்கும் மூத்த வாசகி சீர்காழி, சற்குணமேரிக்காக விளக்கம் தருகிறார், அறந்தாங்கி பிசியோதெரபிஸ்ட் டி.சுரேஷ்.

"மற்ற மருத்துவ சிகிச்சை முறைகள் போலவே... பிசியோதெரபியில் (இயன்முறை மருத்துவம்) பயன்படும் மருத்துவ உபகரணங்களும் மின்சாரத்தில் இயங்குபவையே. ஆனால், சிகிச்சை நோக்கில் அளிக்கப்படும் மின்னோட்டம் என்பது கவலைப்படத் தேவையற்ற, மிகவும் குறைவான அளவேயாகும். மேலும் கரன்ட் தவிர்த்து, பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் தற்போது வந்துவிட்டன. எனவே, பிசியோதெரபி குறித்த பழைய பார்வையை உதறிவிடுங்கள்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

நமது பாரம்பரியத்தில் உள்ள, 'மருந்தில்லா மருத்துவம்' என்பதுதான் பிசியோதெரபியின் அடிநாதம். முறையான பயிற்சிகள் மூலம் உடலின் வலிகளைப் போக்கி, பாதிக்கப்பட்ட அவயங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மறுவாழ்வு அளிப்பதே பிசியோதெரபியின் நோக்கம். முக்கியமாக, இடுப்பு, கழுத்து மூட்டுகள் தொடர்பான வலி, செயலிழப்பு, சவ்வு கிழிதல், தேய்மான பிரச்னைகளுக்கு பிசியோதெரபி சிறப்பான சிகிச்சை முறையாகும்.

இதுமட்டுமல்ல விளையாட்டு தொடர்பான பிரச்னைகளுக்கு, பக்கவாதம், முகவாதம் கோளாறுகளுக்கு, பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, மகப்பேறு மகளிருக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னர் என பல்வேறு தரப்பிலும் பிசியோதெரபி பிரதான தேவையாகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரகம், ஒவ்வாமை, அல்சர் இவை தொடர்பாக ஏற்கெனவே மருத்துவம் எடுத்துக் கொள்பவர்களுக்கு, எலும்பு மூட்டு மற்றும் வலி தொடர்பான பிரச்னைகள் வந்தால், கூடுதல் மருந்துகளால் வரும் பக்கவிளைவுகளைத் தவிர்க்கவும் பிசியோதெரபி அவசியமாகிறது.

பெண்களைப் பொறுத்தவரை, கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்கள் தவிர்த்து ஏனைய மாதங்களில் அவர்களுக்கான தனித்துவ பிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொண்டால், நார்மல் டெலிவரிக்கு வழி செய்வதோடு, பேறுகாலத்தில் வரும் பல்வேறு பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். கூடவே, இவர்களுக்குக் கெண்டைக்கால் தசைப்பிடிப்பு, இடுப்புவலி போன்றவை குறையவும் பிசியோதெரபி வழிசெய்யும். பிரசவத்துக்குப்பின் வயிறானது முறையாக சுருங்குவதற்கும் தனித்துவ பிசியோதெரபி பயிற்சிகள் இருக்கின்றன.

அடுத்ததாக, விளையாட்டு வீரர்கள் கை, கால், இடுப்பு என்று அடிபட்ட இடங்களை எண்ணெய் போட்டு வலிப்பதோ, நீவிவிடுவதோ, சுளுக்கு எடுக்கிறேன் என்று விபரீத முயற்சிகளில் இறங்குவதோ கூடாது. முதலுதவியாக ஐஸ் ஒத்தடம் அளித்துவிட்டு, அருகிலுள்ள மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்ட்டை அணுக வேண்டும். வலியைக் குறைக்கவும், பழைய படி உறுப்புகள் சீரமைவுக்கும் பிசியோதெரபி பயிற்சிகளே சிறந்தது.

45 வயதைத் தாண்டியவர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைபாட்டால் கழுத்து, இடுப்பில் தேய்மானம் அதிகமாகும். அதிலும் பெண்களின் மெனோபாசுக்கு பிந்தைய பிரச்னைகளில் பிரதானமாக இவையிருக்கும். நின்று கொண்டே நெடுநேரம் சமைப்பவர்களுக்கும், டெக்ஸ்டைல்ஸ் பணி போன்றவற்றில் ஈடுபடும் பெண்களுக்கும், ஒபிசிட்டி உடல்வாகுள்ளவர்களுக் கும் அடிக்கடி வலி வந்து தொந்தரவாகும். இவர்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனையின் பேரில், குறிப்பிட்ட பயிற்சிகளை அவ்வப்போது செய்து வந்தாலே... வலி இல்லாத வாழ்வைத் தொடரலாம்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

பலருக்கும் வரும் பெரும் குழப்பம்... எந்தப் பிரச்னைக்கு மருத்துவரிடம் போவது, எவற்றுக்கு பிசியோதெரபிஸ்ட்டை நாடுவது என்பதுதான். கழுத்து, இடுப்பு, மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்கு எலும்பு மூட்டு மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்ட்... எவரை வேண்டுமானாலும் முதலில் நாடலாம். இந்தப் பிரச்னைக்கான சிகிச்சையில் இருவரும் கணவன் - மனைவி போல தவிர்க்க முடியாது இணைந்து செயல்படுவார்கள்.

ஆனால், தண்டுவட பாதிப்பு, வாதம், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள் போன்ற பிரச்னைகளுக்கு முதலில் உங்கள் குடும்ப மருத்துவர் மற்றும் அந்தத் துறை ஸ்பெஷலிஸ்ட்டுகள் வழியாக பிசியோதெரபிஸ்ட்டை அணுகுவது நல்லது."

சாம்பாரில் இருந்து சாட்டிலைட் வரை உங்கள் கேள்வி எதுவாயினும்
எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். 044-42890002 என்ற 'வாய்ஸ்
ஸ்நாப்' சேவையிலும் உங்கள் கேள்வியை உங்கள் குரலிலேயே
பதிவு செய்யலாம். நிபுணர்கள் தகுந்த விளக்கம் தருவார்கள்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
-
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism