Published:Updated:

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

Published:Updated:

ஆட்கள் தேவை!
'கெம்பா'கார்த்திகேயன்
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படித்தான் இருக்க வேண்டும் இன்பிளான்ட் டிரெயினிங்!
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர் (13)

டிக்கும்போது தொழிலகங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளும் 'இன்பிளான்ட் டிரெயினிங்' (In-plant training)... கட்டாயம் சில பாடத்திட்டங்களில் உண்டு. வாரத்துக்கு 2 நாட்கள், கோடை விடுமுறையில் ஒரு மாதம், புராஜெக்ட் செய்ய 2 மாதங்கள் என வேறுபாடுகள் இருந்தாலும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் படிப்பின் இடையே தொழிலகத்துக்குச் செல்லும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்கிறது.

ஆனால், தொண்ணூறு சதவிகித மாணவர்கள் இதை சரிவர பயன்படுத்திக் கொள்வதில்லை!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!

பொதுவாக என்ன நடக்கிறது?

கல்லூரி ஒரு கடிதத்தைக் கொடுக்கும். அதை வைத்து கம்பெனிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழுக்க முழுக்க இது மாணவர்களின் தன்னார்வத்தைப் பொறுத்தது. பலருக்கு எங்கு, எப்படி விண்ணப்பிப்பது என்றே தெரியாது.

கம்பெனிகளைப் பொறுத்தவரை, இந்தக் குறுகிய கால மாணவர் பணியால்... உதவியைவிட தடங்கல்களே அதிகம். பயிற்சி கொடுக்கும் நேரமோ, ஆட்களோ மிகவும் குறைவு. தவிர, இவர்களுக்குப் பயிற்சி கொடுத்து நேரத்தை முதலீடு செய்வது கம்பெனிக்கு லாபம் புகட்டுமா என்பது சந்தேகம். எனவே, மாணவர்கள் பயிற்சி என்றால் 'ஸாரி' சொல்வதுதான் பெரும்பாலான தொழிலகங்களின் பதில்!

இதைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு ஹெச்.ஆர். மானேஜர் சொன்னது...

"சம்மர் டிரெயினிங், ஃபீல்ட் வொர்க், இன்டென்ஷிப், புராஜெக்ட்னு ஒவ்வொரு காலேஜிலிருந்தும் அப்ளிகேஷன்ஸ் வருது. முதல்ல இவங்க வந்தா உட்கார வைக்க சேர், டேபிள் கொடுக்கறதே சிரமம். அப்படியே எடுத்தாலும் 2 பேருக்கு தரலாம். 100 பேர் அப்ளை பண்ணினா என்ன செய்ய? இதுல மினிஸ்டர் ரெக்கமென்டேஷன், கம்பெனியிலுள்ள பெரிய தலைகளின் நெருக்கமானவர்கள், கேம்பஸ் செல்லும் கல்லூரிகளிலிருந்து கடிதங்கள்... இப்படி நிறைய பிரஷர். இவ்வளவு செஞ்சும் சிலர் டிரெயினிங் பீரியட் முடியறதுக்குள்ள பாதியிலேயே போயிடுவாங்க.

இதை சமாளிக்க என் நண்பர் ஒருத்தர் என்ன செய்வார் தெரியுமா? 'கம்பெனிக்கு வர வேண்டாம், சர்ட் டிஃபிகேட் கொடுத்துடறேன். போதுமா?'னு கேட்பார். பலபேர் சந்தோஷமா சர்டிஃபிகேட் மட்டும் வாங்கிட்டுப் போறதை நானே பார்த்திருக்கேன்!"

சரி, மாணவர்கள் கோணத்தில் இதைப் பார்ப்போம்...

"காலேஜுல 'நீங்களே பார்த்துக்கோங்க'னு சொல்றாங்க. எது சின்ன கம்பெனி, எது பெரிய கம்பெனி, எப்படி, யார்கிட்ட விண்ணப்பிக்கணும்னு தெரியல. நண்பர்களின் மாமா, சித்தப்பானு யாராவது தெரிஞ்ச ஆட்கள் மூலமா விண்ணப்பிக்கிறோம். பல நேரங்கள்ல பதில் வர்றதுக்குள்ள பாதி டிரெயினிங் பீரியடே முடிஞ்சுடுது!"

இன்னொரு மாணவி கூறியது -

"கம்பெனிக்கு போன முதல் வாரம் வேலையே இல்லை. ரொம்ப போர். நானா வலியப் போய்க் கேட்டால்... ஏதாவது கம்பெனி மேனுவலைக் கொடுத்து 'படி'னு சொல்லிட்டுப் போயிடறாங்க. எப்போ பார்த்தாலும் திருவிழாவுல தொலைந்த குழந்தை மாதிரி திரியறோம்!"

கல்லூரியின் நிலைப்பாடு என்ன?

"60 மாணவர்களை எப்படி சார் சூப்பர்வைஸ் பண்ண முடியும்? தவிர, இதைக்கூட சுயமா செய்யலைனா நாளைக்கு எப்படி சுயமா ஒரு வேலை வாங்கப் போறாங்க? அட்டென்டென்ஸ் உண்டு. ஆனா, காலேஜ் வேலைனு சொல்லிட்டு அங்கயும், கம்பெனி வேலைனு இங்கயும் சொல்லிட்டு மட்டமடிக்கற மாணவர்களும் உண்டு!"

சரி, என்ன செய்யலாம்?

முதலில் படிப்பின்போது பயிற்சிக்கான அவசியத்தை மூன்று தரப்பும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி நிலையங்கள்...

பயிற்சியுடன் கூடிய படிப்பே மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்பதையும், கூடவே, மார்க்கெட்டில் தங்கள் கல்வி நிலையம் பற்றிய மதிப்பை உயர்த்தும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்

கம்பெனிகள்...

தரமான மாணவர்களை உருவாக்காமல். தரமான பணியாளர்களை உருவாக்க முடியாது என்பதை கம்பெனிகள் புரிந்து கொள்ளவேண்டும். மாணவர்களை உருவாக்குவதைவிட சிறந்த கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி (Corporate Social Responsibility) எதுவுமில்லை.

மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் விரிவானது... பார்ப்போம்...

தொழிலகப் பயிற்சி எப்போது என்று தெரிந்து கொண்டு, அதற்கு முன் வருடமே உங்கள் தேடலைத் துவக்குங்கள். 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு கம்பெனி வேண்டும் என்று தெரிந்தவர்களை மட்டும் கேட்காதீர்கள்.

உங்கள் கல்விக்கு, வாழ்க்கைக்கு மிகவும் சரியான தொழிலகம் எது என்று தேர்ந்தெடுத்து அதற்கு செல்லத் தயாராகுங்கள்.

வேலைக்கு விண்ணப்பிக்க எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறீர்களோ... அதே அளவு மெனக்கெட்டு விண்ணப்பத்துடன் உங்கள் சி.வி-யை (CV) சேர்த்து அனுப்புங்கள்.

உங்கள் பயிற்சியினால் அந்தத் தொழிலகத்துக்கு என்ன பலன் என்று குறிப்பிடுங்கள். அந்தக் கம்பெனி செயல்படுத்த நினைக்கும் புது எண்ணங்களை, காசு செலவில்லாமல்/குறைந்த செலவில் உங்களை வைத்து செய்ய வைக்க முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

விண்ணப்பத்துக்கு முன் அவர்களுடைய வலைதளம் சென்று பாருங்கள். அவர்களுடைய பணியாளர்களிடம் பேசுங்கள். முடிந்தால் நேரில் சென்று இடத்தைப் பாருங்கள்.

விரும்பிய கம்பெனிக்கு பயிற்சிக்கு செல்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதேபோல பயிற்சி காலத்தில் செய்ய வேண்டியது...

ஒரு நாள்கூட லீவு போடாமல் 100% அட்டென்டென்ஸ் முக்கியம். உங்களைப் பற்றிய நன்மதிப்பு இதில் கட்டாயம் உண்டாக்கும். நேரந்தவறாமை முக்கியம். எவ்வளவு இக்கட்டிலும் நேரத்துக்குச் செல்லுங்கள்.

பெரிய வேலை கொடுக்கப்படாவிட்டாலும், சின்ன சின்ன வேலைகளை கேட்டு வாங்கிச் செய்யுங்கள். உற்சாகமாக நீங்கள் செய்யும் சிறிய வேலை மேலதிகாரிகளின் கவனிப்பைப் பெறும்.

சின்னச் சின்ன ஆலோசனைகளையும் கேள்விகளையும் சரியான நேரத்தில் கேளுங்கள். உங்கள் ஆர்வமும் நேர்மையும் வெளிப்படும்.

வேலைச் சூழலையும் பணியில் பிரச்னைகளையும் நன்கு கவனியுங்கள். ஒவ்வொரு பிரச்னையையும் 'நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?' என்று யோசியுங்கள்.

சில மனிதர்களையாவது நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அங்கு வேலை கிடைக்காவிட்டாலும், வேறு இடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, தெரிந்தவர்கள் (Reference) என்று போட்டுக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஒரு வெற்றிகரமான பயிற்சி காலம் என்பது... உங்களுக்கு கற்றலை மட்டுமல்ல, வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். நீங்கள் புறப்படும்போது, "எப்ப உனக்கு கோர்ஸ் முடியுதும்மா? இங்க வேலை செய்ய இஷ்டமா?" என்று அவர்களை கேட்க வைப்பதில்தான் உண்மையான வெற்றி!

வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
-தேடுவோம்...
படம் என்.விவேக்
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
வேலையை வசமாக்கும் வழிகாட்டி தொடர்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism