Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

கேபிள் கலாட்டா
ரிமோட் ரீட்டா
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷில்பாவின் டீச்சர் லட்சியம்!

" 'சன் டி.வி. 'திருமதி செல்வம்' சீரியல்ல வாயும், வயிறுமா வர்ற அந்த அபிதா பொண்ணுக்கு, நிஜமாவே சமீபத்துலதான் குழந்தை பிறந்திருக்குனு சொன்னாங்களே... தாயும், சேயும் சுகமா இருக்காங்களா?"னு அக்கறையில கடிதம் எழுதியிருந்த நம்மளோட மூத்த வாசகியோட வாழ்த்துக்களை சேர்க்கறதுக்காக அபிதாவை ஷ¨ட்டிங் ஸ்பாட்ல தேடினா, மேடம் வீட்டுல தாலாட்டுப் பாடிட்டு இருக்கறதா தகவல்!

"ஷ்ஷூ... சத்தமா பேசாத ரீட்டா! அல்சாகுட்டி இப்போதான் தூங்கியிருக்கு!"னு மைனஸ் வால்யூம்ல பேசினாங்க அபிதா!

"நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரளா. கோட்டயத்துல. படிச்சுட்டிருந்தப்ப, திடீர்னு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. தமிழ்ல விக்ரம் சாரோட நடிச்ச 'சேது' படம் டூப்பர் ஹிட். அப்புறம் சரத்குமார் சாரோட 'நம் நாடு', விஜய்காந்த் சார்கூட 'அரசாட்சி', தெலுங்குல சில படங்கள்னு பண்ணினேன். நாலு வருஷத்துக்கு முன்ன, தெலுங்குல நான் பண்ணின 'பிரியங்கா' சீரியல் ஹிட்! 'ஆஹா... இந்தப் பொண்ணு சீரியலுக்கும் சரிப்பட்டு வரும்'னு தமிழ் சீரியல்ல கூப்பிட்டாங்க. 'திருமதி செல்வம்' சீரியல்ல எனக்கு இப்படி ஒரு அழுத்தமான கேரக்டர் கிடைச்சது, என் கேரியர்ல முக்கியமான கிராஃப்!"னு சொன்ன சேச்சி,

"என் கணவர் சுனில், தனியார் நிறுவனத்துல உயர் பதவியில இருக்காரு. என்னோட சீரியல் கால்ஷீட்டுக்காகவே... கேரளாவுல இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டாரு. அந்தளவுக்கு எல்லா விஷயத்துலயுமே அன்பானவர், அனுசரணையானவர்"னு சொன்ன அபிதாகிட்ட,

கேபிள் கலாட்டா!

"ஓ.கே... அல்சாகுட்டி... ஷார்ட் நோட்ஸ் ப்ளீஸ்!"னு கேட்டேன். அபிதாவுக்கு முகமெல்லாம் சந்தோஷம்!

"நாலு மாசம் ஆகுது அல்சாவுக்கு. ரொம்ப துறுதுறு. இப்போ அவளோட ஒவ்வொரு அசைவும், சிரிப்பும்தான் எங்களுக்கான எனர்ஜி, என்டர்டெயின்மென்ட் எல்லாம்'' என்ற அபிதா,

''இவ பிறந்த ரெண்டு மாசத்துலயே நான் ஷ¨ட்டிங்க் போக வேண்டியதாயிடுச்சு. அதனால, பெரும்பாலும், எங்கம்மாதான் இப்ப அவள பார்த்துக்கறாங்க"னு அந்த பெரிய கண்கள் இன்னும் விரிய பேசினாங்க அபிதா!

அபிதா அம்மா!

கே... 'திருமதி செல்வம்' ஹீரோயினைப் பார்த்த நாம, அதே கையோட அதுல வர்ற ஒரு வில்லனையும் கண்டுக்கிடுவோம் விட்டேன் ஒரு சவாரி. நடிப்பு, நடனம்னு தூள் கிளப்பற டிங்கு... இந்த சீரியல்ல அண்ணனை மோசம் பண்ற வில்லன் தம்பி.

"நிஜத்துல நான் ரொம்ப நல்லவன் ரீட்டா''னு எல்லா வில்லன்களையும் போல ஆரம்பிச்ச டிங்கு,

கேபிள் கலாட்டா!

''எனக்கு என் மனைவியும், மகளும்தான் உலகம். என் மனைவி என்னை 'அம்மு'னு கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'செல்லக்குட்டி'னு கூப்பிடுவேன். என் நாலு வயசு பொண்ணு லக்ஷயா என்னை 'டாடிப்பா'னு கூப்பிடுவா..."னு சிரிக்க சிரிக்க ஃபேமிலி டேட்டா சொன்னதைக் கேட்டு, நானும் சிரிச்சு சிரிச்சு தீர்க்க... அதுக்கு தடா போடற மாதிரி தொடர்ந்தார் டிங்கு.

"என்னதான் சீரியல், ஷோஸ்-னு நான் பிஸியா இருந்தாலும், என் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டிய நேரத்துல ஒரு நிமிஷம்கூட குறையாம பார்த்துப்பேன் ரீட்டா. அடிக்கடி ஃபேமிலியோட வெளியூர் டூர் போயிடுவேன். அதுதான் என்னோட எனர்ஜி டானிக். இதோ... இந்த குவார்டர்லி லீவுக்குகூட பிளான் ரெடி!"னு பரபரத்தாரு!

ஹாப்பி ஹாலிடேஸ்!

ஜெயா டி.வி-யில வர்ற 'உன் பாசம் என் நேசம்' ஷோ-ல பிஸியா இருந்த ஷில்பாகிட்ட, 'ஒரு பதினஞ்சு நிமிஷம் ப்ளீஸ்...'னு கேட்டு வாங்கினேன். "என்னோட ஒரிஜினல் பெயர் மேரி தெரசா ரீட்டா. மீடியாவுக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் ஷில்பா. எனக்கு நடிப்பை கத்துக் கொடுத்ததே அகத்தியன் சார்தான். அவர்தான் இந்த பேரை எனக்கு வச்சாரு. ஏற்கெனவே அகத்தியன் சார் எடுத்திருக்கற நிறைய 'ஆட் ஃபிலிம்' நான் நடிச்சுருக்கேன். அதை மனசுல வச்சுக்கிட்டுதான், இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கார்"னு சொன்ன ஷில்பா,

கேபிள் கலாட்டா!

"பாலிமர் சேனல்ல வந்த 'ட்ரிபிள் செவன்' நிகழ்ச்சிதான் என் முதல் அறிமுகம். அதுக்கு அப்பறம்தான் ஜெயா டி.வி-யில 'உன் பாசம் என் நேசம்' ஷோ வாய்ப்பு. இது, கணவன்-மனைவி ரெண்டு பேருக்கும் இடையில இருக்கற பாசம், நேசம் எல்லாத்தையும் பத்தி அலசற நிகழ்ச்சி. ரொம்ப கலகலனு போய்க்கிட்டிருக்கு. பொண்ணுங்க கூட்டத்துல செம டாக் கிடைச்சுருக்கு"னு அடுக்கினாங்க.

உடனே, "சின்னத்திரைதான் உங்க லட்சியமா?"னு ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டேன். அதுக்கு பாய்ஞ்சுக்கிட்டு பதில் சொன்ன ஷில்பா,

"ஒண்ணு தெரியுமா... நான் மட்டும் சீரியல் பக்கம் வராம இருந்திருந்தா, நிச்சயமா ஒரு நல்ல டீச்சராயிருப்பேன்! யெஸ்... டீச்சராகணுங்கறது சின்ன வயசுல இருந்தே என் ஆசை!"னு தகவல் சொன்னாங்க!

அடி ஆத்தாடீ!

வாசகிகள் விமர்சனம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.75

கேபிள் கலாட்டா!

''டிஸ்கவரி சேனலில் வரும் 'மேன் வெர்சஸ் வைல்டு' (Man Vs wild) என்ற நிகழ்ச்சியில்... இருள் சூழ்ந்த காடு, மயக்கும் மலைப்பிரதேசம், பட்டுப்போன பாலைவனம், அலையாக திரளும் அருவி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று, இயற்கையை தனி மனிதன் எதிர்கொள்வது பற்றி எடுத்துக்கூறி, எந்த இடத்திலும் உயிர் வாழலாம் எனறு தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பிரமிக்கச் செய்கிறார் பியர் க்ரெல்.

தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் போட்டோவை லேமினேஷன் செய்து, தன்னுடைய ஷூவில் அவர் வைத்திருந்ததை காட்டியது... இந்த அசகாய சூரன், அன்பு உள்ளம் நிறைந்தவர் என்பதும் புரிந்தது'' என்று நெகிழ்கிறார் திருநெல்வேலியில் இருந்து கே.சீதாலெட்சுமி.

''விஜய் டி.வி-யில் 'செஃப்' தாமோதரன் தலைமையில் ஆண்கள் குழுவும், ரேவதி சங்கரன் தலைமையில் பெண்கள் குழுவும் சமையலில் மோதுகின்றனர். தினசரி ஒரு பொருளை வைத்து இரண்டு குழுக்களும், சுவையாகச் சமைக்கின்றனர். தீர்ப்பு சொல்ல பிரபல ஹோட்டல் செஃப் பங்கேற்கிறார். காமெடிக்கு பாலாஜி, பாட்டுக்கு வேல்முருகன், கிராமிய இசைக்கு சின்னப்பொண்ணு என சமையலுடன் சிரிப்பு, சங்கீதம் அனைத்தும் கலவையாக அசத்துகின்றது நிகழ்ச்சி'' என்று பாராட்டுகிறார் நாகப்பட்டினத்தில் இருந்து லக்ஷ்மிதேவி அருணாசலம்.

''பஸ்சுக்காக காத்திருக்கும் டீன்-ஏஜ் பெண், சாக்லெட் கவரைப் பிரிக்க, அங்கு வரும் இளைஞன், 'எக்ஸ்க்யூஸ் மீ' ஒரு சாக்லேட் பீஸ் கொடுப்பாயா?' என்கிறான். 'முன்ன பின்னத் தெரியாத உனக்கு நான் ஏன் சாக்லேட் கொடுக்கணும்?' என்கிறாள் லேசான எரிச்சலுடன். 'எங்கம்மா சொல்லுவாங்க எந்த நல்ல காரியம் செய்றதுக்கு முன்னாலேயும் ஒரு ஸ்வீட் சாப்பிடணும்னு' என்கிறான். 'அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப் போறே?' என்று அவள் கிண்டலாகக் கேட்க... 'உன்னை வீட்டுல விடலாம்னு பார்க்கிறேன்' என்கிறான். 'நல்லதோர் ஆரம்பம் ஸ்வீட்டுடன்' என்று பின்னணியில் விளம்பரக் குரல் ஒலிக்க, புன்முறுவலுடன் சாக்லேட்டை நீட்டுகிறாள். ஒரு விளம்பரம் கவிதையாக விரிகிறது'' என்று பாராட்டுகின்றனர் மதுரையில் இருந்து எஸ்.லஷ்மி மற்றும் சென்னையில் இருந்து எஸ்.ரேவதி.

 

கேபிள் கலாட்டா!
-படங்கள் பொன்.காசிராஜன், எம்.உசேன்
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism